திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

குடியரசு தின விழா கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது இன்று (ஜன.24) இரவு 11:50 மணிக்கு, 23 பெட்டிகளுடன் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம், திருச்சி வழியாக நாளை (ஜன.25) காலை 11:40 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது விபத்து தான்- தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கனும்-ஜம்மு போலீஸ்

செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பரிதாபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 360 கிலோ வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முகமில் ஷகீல் கனியா என்ற நபரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் விசாரணைக்காக ஜம்மு […]