செங்கோட்டையனின் நிலை யாருக்கும் வரக்கூடாது – திண்டுக்கல் சீனிவாசன்
தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தேமுதிகவின் கோரிக்கை தொடர்பாக மாநில அளவில் முடிவெடுக்க முடியவில்லை என்பதால் தேசிய தலைமை பேச்சுவார்த்தை நடத்துகிறது. தேமுதிக உடனான பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும் என அதிமுக, மாநில பாஜக எதிர்பார்க்கிறது. தேமுதிகவை பாஜக அழைத்தாலும், அதிமுக அழைத்தாலும் கூட்டணி எங்களுடன் தான். […]
விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்?.. செல்லூர் கேள்வி
விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார் செங்கோட்டையன்? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், “ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் விஜயை முதல்வர் ஆக்கலாம். எல்லோரும் தன்னை எம்.ஜி.ஆர். என சொல்லிக் கொள்ளலாம், மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தலுக்கு பின்னர் தவெக என்னவாக போகிறது என்பது இப்போதே தெரிகிறது,”என்றார்.
அரசியல் அனுபவம் இருந்தும் தவறான முடிவு? – செங்கோட்டையனை சாடிய வானதி!
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்குச் செல்ல வேண்டும் என்பது தனது ஆசை என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலை தமிழக அரசியலில் மிகுந்த செல்வாக்கு பெற்ற தலைவராக இருப்பதால், அவர் சட்டசபைக்கு வருவது கட்சிக்கும் தமிழகத்துக்கும் பெரும் பலமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “சகோதரர் அண்ணாமலை சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும் என்பது எங்கள் எல்லோரின் விருப்பம்” என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.வானதி சீனிவாசன் மேலும் கூறுகையில், […]
தோல்வி பயத்தில் பேசுகிறார் ஈபிஎஸ்.. செங்கோட்டையன்
கோவை விமானநிலையத்தில் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது.. தோல்வி பயத்தால்தான் எடப்பாடி பழனிசாமி தினமும் ஒரு தேர்தல் அறிக்கையை வௌியிட்டு வருகிறார். தேர்தல் தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிவருகிறார் என்று இவ்வாறு தெரிவித்தார்.
செங்கோட்டையனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த டிடிவி
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-எனது அன்பிற்குரிய மூத்த சகோதரரும், முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செங்கோட்டையன் அவர்கள், நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மக்கள் திலகத்திற்கு செங்கோட்டையன் மலரஞ்சலி
தமிழக முன்னாள் முதலமைச்சரும், ‘புரட்சித் தலைவர்’ என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் அவருக்குத் தங்களது மரியாதையைச் செலுத்தி வருகின்றனர்.சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மரியாதை செலுத்த உள்ள நிலையில், அரசியல் களம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், தமிழக முன்னாள் அமைச்சரும், தற்போது தமிழக வெற்றிக் […]
இனி செங்கோட்டையன் போடும் ரூட்டில் விஜய் பயணிப்பார்“- என். ஆனந்த்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் வரும் 18ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெறும் பரப்புரை மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு தொடர்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், “தங்கமான அண்ணன் கிடச்சிருக்காரு… இனி […]
விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் கூட்டணி” – செங்ஸ்…
தவெக தலைவர் விஜய், ஈரோட்டில் நடத்தவுள்ள கூட்டத்தில் மாற்று கட்சியினர் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோட்டி இன்று (டிச.12) செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் கூறுகையில், “விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி. ஈரோடு கூட்டத்தில், தவெகவில் யாரெல்லாம் இணையவுள்ளனர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றார். இதனால், அடுத்தடுத்து பலரும் தவெகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
செங்கோட்டையனை தொடர்ந்து தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்…?
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் இருந்து வருகிறார். இந்நிலையில் அங்கிருந்து விலகி வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. வைத்திலிங்கம், 2001-2006 மற்றும் 2011- 2016 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இப்போது அவர் ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். கடந்த மாதம் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் […]
செங்கோட்டையனை கண்டித்து அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 27-ம் தேதி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து த.வெ.க.வில் இணைந்தார். அவருக்கு த.வெ.க.வில் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பதவிகள் கொடுக்கப்பட்டன. இந்த நிலையில் கோபியில் உள்ள செங்கோட்டையன் அலுவலகத்தில் அவர் வைத்திருந்த பழைய பெயர் பலகை அகற்றப்பட்டு புதிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய் உருவப்படங்களுடன் செங்கோட்டையன் உருவப்படமும் இடம் பெற்றுள்ளது. […]
செங்கோட்டையன் எங்கு சென்றாலும் எங்களுக்கு கவலையில்லை”-கரூரில் VSB
கரூரில் தனியார் திருமண மண்டபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் செஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசுகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “செங்கோட்டையன் இரண்டு நாட்களுக்கு முன்பு யார் முதல்வர் ஆவார் என்று சொன்னார். இப்போது யார் முதல்வர் ஆவார் என்று சொல்கிறார். அது அவருடைய கருத்து. அதிகமாக அது குறித்து பேச […]
செங்கோட்டையன் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.தொடர்ந்து அவருக்கு என்ன பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார். கூடுதலாக ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செங்கோட்டையன் அவரது சொந்த ஊரான ஈரோடு கோபிசெட்டிபாளையம் செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். செங்கோட்டையன் சென்ற விமானம், கோவையில் 1.40 மணிக்கு தரை இறங்க […]
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல்… அமைச்சர் ரகுபதி
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நேற்றைய தினம் புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஏற்பாட்டின் பேரில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி மோதிரம் வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறுகையில்: திமுகவும் அதிமுகவும் இணைந்து தான் செயல்படுகிறார்கள் என்று கூறும் செங்கோட்டையனுக்கு நேற்று வரை புத்தி எங்கே போனது. யாரை வைத்தும் யாரும் […]
அன்புக்கிற்கினிய இளவல் விஜய் வெற்றி பெறுவார்-செங்கோட்டையன்
சென்னை -தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக அமைந்தது, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் இன்று (நவம்பர் 27) தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது. சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் நடைபெற்ற எளிய விழாவில் செங்கோட்டையனும் அவரது நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் தவெக கொடியை ஏற்று உறுதிமொழி ஏற்றனர். இணைந்த உடனேயே அவருக்கு நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், ஈரோடு-கோவை-திருப்பூர்-நீலகிரி மாவட்ட அமைப்புச் செயலாளருமான பொறுப்புகள் வழங்கப்பட்டன. தவெகவில் […]
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடிகர் ஜெயராம் சாமிதரிசனம்
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இன்றுகுடும்பத்துடன் சுவாமி தரிசனம். கோவில் யானை மங்கலத்திற்கு பழங்கள் வழங்கினார்.50 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பகோணத்திற்கு வருவது மகிழ்ச்சி என நெகழ்ச்சியுடன் ஜெயராம் தெரிவித்தார். பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இன்று மாலை கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்திற்கு குடும்பத்துடன் வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெயராம்,தனது அம்மாவின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள செருகுடி தான் .சிறு வயதில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில், […]
தவெகவில் செங்கோட்டையனுக்கு முக்கிய பதவி..
அதிமுகவில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்றைய தினம் விஜய்-ஐ சந்தித்து சுமார் 2 மணி ேநுரம் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில் சென்னை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் வந்தார். அங்கிருந்த தவெக தலைவர் விஜய்-ஐ சந்தித்து முறைப்படி அக்கட்சியில் இணைந்தார். இந்தநிலையில் தவெகவில் சேர்ந்த செங்கோட்டையனுக்கு கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், 4 மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என்றவர் தவெகவில் ஒருங்கிணைந்துவிட்டார்”- புகழேந்தி
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “அதிமுகவின் மூத்த தலைவர், ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு நம்பிக்கைக்குரிய தலைவர், அதிமுகவுக்கு செம்மையாக உழைத்தவர். 9 முறை கோபியில் வெற்றி பெற்றவர். அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என்ற செங்கோட்டையனை நீக்கியுள்ளார் துரோகி ஈபிஎஸ். காட்டுமிராண்டி தனமாக செயல்படும், எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏக்களை நீக்கியுள்ளார். சர்வாதிகரமாக செயல்படும் பழனிசாமிக்கு எதிராக என்ன செய்ய முடியும்? யாருடனோ கூட்டு சேர்ந்து அதிமுகவை இல்லாமல் செய்வதாக பழனிசாமி உறுதிமொழி எடுத்துள்ளார். அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் எனக் கூறி வெளியே வந்தவர், […]
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட் செங்கோட்டையன் இன்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வௌியான நிலையில் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவிடம் செங்கோட்டையன் வழங்கினார். தவெகவில் செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கவுள்ளதாக தகவல் வௌியானது. இந்தநிலையில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் செங்கோட்டையன் சந்தித்துள்ளனர். மேலும் செங்கோட்டையன் திமுகவில் இணைவாறா? அல்லது திமுகவில் இணைவாறா என கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது.
தவெகவில் இணையும் கே.ஏ.எஸ்.. நாளை எம்எல்ஏ பதவி ராஜினாமா
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு இருந்து வந்தது. அதிமுகவில் இருந்து விலகி சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டுமென செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார்.இதன் காரணமாக செங்கோட்டையனின் அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். கடந்த மாதம் நடைபெற்ற தேவர் ஜெயந்தி நிகழ்வில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் […]
செங்கோட்டையன் வைத்த குற்றச்சாட்டு- இ.பி.எஸ் விளக்கம்
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் விமர்சனங்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். செங்கோட்டையன் அதிமுகவில் குடும்ப அரசியல் நடப்பதாகக் கூறியதை “வேறு குற்றச்சாட்டு இல்லாததால்” என்று கூறி நிராகரித்தார். “என் மகனை யாராவது கட்சி நிகழ்ச்சியில் பார்த்துள்ளீர்களா?” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, வாரிசு அரசியல் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்தார். அதிமுக ஆட்சியை குறை சொல்ல முடியாததால் பாஜகவுடனான கூட்டணியை திமுக விமர்சிப்பதாகவும், திமுக ஆட்சியில் […]
எடப்பாடி கொல்லைப்புறமாக முதல்வர் ஆனவர் – செங்கோட்டையன்..
அ.தி.மு.க.வில் இருந்து தனது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- * ஜெயலலிதாவால் 3 முறை முதலமைச்சராக அமர்த்தப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். * எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புறமாக முதலமைச்சர் ஆனவர். * கொடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து இதுவரை குரல் கொடுக்கப்படவில்லை. *2024 தேர்தலில் பா.ஜ.க.விற்கு ஆதரவாக இல்லாமல் கூட்டணியை முறித்தவர் இ.பி.எஸ்; கட்சிக்காக உழைத்தவர்களுக்கு கொடுக்காமல் பணம் செலவழிப்பவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் சீட் * கொடநாடு கொலை, கொள்ளை […]