திருமண நிதி உதவியாக 82 பயனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கிய VSB

திருமண நிதி உதவியாக 82 பயனாளிகளுக்கு தங்க நாணயம் செந்தில் பாலாஜி வழங்கினார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு 234 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் ஸ்மார்ட்போன் பேட்டரி வீல் சேர் தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அதனை தொடர்ந்து 2025-2026 நிதி ஆண்டிற்கான திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 82 பயனாளிகளுக்கு தங்க நாணயத்தை […]

வெண்ணைமலை முருகன் கோவில் தைப்பூச தேர்.. VSB பங்கேற்பு

கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அரோகரா கோஷம் முழங்க, முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கரூர், வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நாள்தோறும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறார். இன்று காலை சுவாமிக்கு பால், தயிர், […]

செந்தில்பாலாஜி வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை

செந்தில்பாலாஜி தொடர்புடைய வேலை வாய்ப்பு மோசடி வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி வழக்கில் ஈடுபட்டதாக வழக்கு. சிறப்பு நீதிமன்றத்திழல் நடைபெறும் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை துணை மேலாளர் கணேசன் மேல்முறையீடு மனுவில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற்றார் VSB

2026-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ​அதன் ஒரு பகுதியாக, இன்று கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தி.மு.க மேற்கு மண்டலப் பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த செய்தியில் வரும் படங்கள் அனைத்தும் தவெகவிற்கு சமர்ப்பணம்…

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் திமுக தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. கட்சியின் அமைப்பு பலத்தையும், மக்கள் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாநாடுகள், விழாக்கள், கூட்டங்கள் என தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம், கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழா, திருவண்ணாமலையில் நடந்த வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு ஆகியவை அதன் முக்கிய எடுத்துக்காட்டுகளாகும். திமுக […]

திமுகவை விமர்சனம் செய்யாமல் தமிழக அரசியல் கிடையாது.. VSB பேட்டி

10 வருடங்களாக கள்ள ஓட்டுக்கள் போட்டதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா : அப்பொழுது நல்ல ஓட்டாக இருந்தது, இப்பொழுது கள்ள ஓட்டாக ஆகிவிட்டதா – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி ? கோவை மாவட்டத்தில் தகுதியான வாக்காளர்களை சேர்க்க தி.மு.க நடவடிக்கை எடுக்கும் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி !!! 29 ஆம் தேதி முதலமைச்சர் மகளிர் மாநாட்டிற்கு கோவை வருகிறார் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் … கோவை அவிநாசி […]

2026-ல் மீண்டும் ஸ்டாலின் தான்… VSB உறுதி

கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பேட்டி: எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் புதிதாக ஆரம்பிக்கும் போது சரி பழைய கட்சிகளாக இருந்தாலும் சரி எங்களுக்கு போட்டி திமுக தான் என்று கூறுகின்றனர் வேறு யாரையும் தங்களுக்கு போட்டியாக சொல்வதில்லை? அந்த அளவிற்கு மக்களுடைய மனதில் நிலைத்திருக்க கூடிய இயக்கம் திமுக தான் திமுக நேர்மையான மக்களுக்கான ஆட்சியை வழிநடத்தி வருகிறது அதனால் தான் திமுக போட்டி என்று அவர்கள் சொல்வதால் தங்களது இருப்பை மக்களிடத்தில் காட்டிக்கொள்ள […]

ED வழக்கில் VSB-க்கு சுப்ரீம் கோர்ட் சலுகை

அரசு வேலை வாங்கி தர பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமின் தளர்வுகளை வழங்கியுள்ளது. தேவைப்பட்டால் மட்டும் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நேரில் அழைக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ED விசாரணைக்காக அழைக்கும்பேது அதிலிருந்து விலக்கு தேவை என்றால் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அனுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க செந்தில்பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என ED சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கிற்கு […]

மெட்ரோவுக்கு அனுமதி கொடுக்காத பாஜகவை கண்டித்து கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கோடு செயலாற்றும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கோவை, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள செஞ்சிலுவை சங்கம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.. இந்த ஆர்ப்பாட்டம் மேற்கு மண்டல திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கான கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது, தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டுவது என தொடர்ந்து தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் புறக்கணிக்கும் ஒன்றிய பாஜக அரசு, […]