சென்னை ஏர்போட்டில் உயர் ரக கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.23 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்தனர். தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் கடத்திவரப்பட்ட 23 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை பறிமுதல் செய்தது. பதப்படுத்தப்பட்ட உணவு பொருள், சாக்லெட் பாக்கெட்டுகளுக்குள் மறைத்து கடத்தி வந்த கஞ்சாவை சுங்கத்துறை கைப்பற்றினர். கஞ்சாவை கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த 6 இளைஞர்களை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு ரூ.15 கோடி மதிப்புள்ள 15 […]

சென்னை ஏர்போட்டில் ரூ.10.7 கோடியில் உயர் ரக கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.10.7 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்தனர். தாய்லாந்தில் இருந்து கஞ்சாவை கடத்திய இரு பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களுக்குள் மறைத்து எடுக்கப்பட்டு வந்த ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இண்டிகோ விமான சேவை பாதிப்பு- சென்னை ஏர்போட்டில் பயணிகள் அவதி

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட வேண்டிய இண்டிகோ விமானங்களில் சுமார் 31 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானி மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த ரத்து தொடர்வதாகத் தெரிகிறது. விளைவு: விமான சேவை பாதிக்கப்பட்டதால், வெளிநாடுகளுக்குச் செல்லவிருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பல பயணிகள் மற்ற விமானங்களில் அதிக கட்டணம் கொடுத்து டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் ஆவேசம்: அதிகக் கட்டணம் காரணமாக, சென்னை – கோயம்புத்தூர் போன்ற […]