கடற்கரை ரயில் நிலையத்தில் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்

சென்னை கடற்கரை ரயில் நிலைய நடைமேடையில் உள்ள கடையில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னையின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் புறநகர் ரயில்கள் மூலம் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்கின்றனர். இன்று வழக்கம் போல பயணிகள் ரயிலுக்காக நடைமேடையில் காத்திருந்தனர். அப்போது, ரயில் நிலையத்தின் 3-வது மற்றும் 4-வது நடைமேடையில் அமைந்துள்ள ஒரு கடையில் திடீரென தீப்பிடித்தது. மளமளவெனப் […]