சென்னை விமான நிலையத்தில் ரூ.10.7 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னை வந்த இரு பயணிகளின் உடைமைகளைச் சோதித்தபோது, அவர்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்களுக்குள் பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைத் திறந்து பார்த்தபோது, சுமார் 10.7 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சா இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அந்தப் போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றைக் கடத்தி வந்த இரு பயணிகளையும் கைது செய்தனர். […]
விமான நிலையத்தில் ரூ.1.06 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தாய்லாந்தில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.இந்த சோதனையின்போது பயணி ஒருவரின் உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்டு கடத்தி வரப்பட்ட 3.03 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அந்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.1.06 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை கடத்தி வந்த பயணியை அதிகாரிகள் கைது செய்து தீவிர […]