பட்ஜெட் எப்படி இருக்கணும்னு- நிர்மலா சீதாராமன் இங்க வந்து பார்க்க வேண்டும்”- செல்வப்பெருந்தகை
ஒரு நிதி நிலை அறிக்கை எப்படி இருக்க வேண்டுமென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கு வந்து பார்க்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று (17.02.2026) தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்த மாண்புமிகு நிதியமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தமிழ்நாடு காங்கிரஸ் […]
செல்வபெருந்தகை டில்லிக்கு அவசர பயணம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவசர பயணமாக டெல்லி செல்கிறார். கூட்டணி குறித்து பேச குழு அமைத்த பின்னர், இணக்கத்தை சிதைக்கும் வகையில் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து பேசி வரும் நிலையில் மாணிக்கம் தாகூருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் கடிதத்துடன் செல்வப்பெருந்தகை டெல்லி செல்கிறார்.
ஆட்சிப் பங்கு பேச்சு – கூட்டணியில் பிளவு இல்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்!
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியில் ஆட்சி பங்கு கோரும் சிலரை மறைமுகமாக சாடியுள்ளார். “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. இது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த இடையில் சிலர் திட்டமிட்டு சதி செய்கிறார்கள்” என்று வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இந்தப் பேச்சு கூட்டணி கட்சிகளிடையே ஏற்படும் சில கோரிக்கைகள் மற்றும் பதட்டங்களை குறிப்பதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உடனடியாக விளக்கம் அளித்துள்ளார். “எந்தவித பிளவும் இல்லை. […]
பிரதமர் 100 முறை வந்தாலும்.. தமிழ்நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள்… செல்வபெருந்தகை
பிரதமர் மோடி ஒருமுறை அல்ல, 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். NDAவில் டிடிவி இணைந்தது குறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில்,”NDA கூட்டணி இயற்கைக்கு முரண்பாடான கூட்டணி. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அந்த கூட்டணியை ஏற்க மாட்டார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.
100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தி பெயரை நீக்குவதா?.. செல்வபெருந்தகை கண்டனம
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மன்மோகன்சிங் தலைமையில் 2004-ம் ஆண்டு அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற வகையில் கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் வறுமையை ஒழிக்கின்ற நோக்கத்தில் 2006-ம் ஆண்டில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு அக்டோபர் 2009 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்று பெயர் […]
அவர் விஜயை சந்தித்தாரா?… செல்வபெருந்தகைக்கு சந்தேகம்
தமிழக அரசியலில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய வியூக வகுப்பாளரான பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசியதுதான். சென்னை பனையூரில் உள்ள விஜய் இல்லத்தில் நேற்று இரவு நடந்த இந்தச் சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நீடித்ததாகத் தெரிகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் சாத்தியமான கூட்டணி, தொகுதிப் பங்கீடு, ஆட்சியில் பங்கு ஆகியவை பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தச் செய்தி […]
தமிழகத்தில் தொழில் துவங்க இடவசதி இல்லை- ஆனாலும் இடம் தருகிறோம்
திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் தேர்தல் ஆயத்த பணிகள் வாக்காளர் பட்டியல் பிறப்பு தீவிர சீராய்வு பணிகள் குறித்த நிர்வாகிகளான ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வப் பெருந்தகை….. தமிழகம் தொழில்துறை வளர்ச்சியில் முன்னேறி உள்ளது என எடப்பாடி பழனிச்சாமியிடம் சவால் வீட்டுள்ளீரகளே, எந்த வகையில் தமிழகம் முன்னேறியுள்ளது என கேட்டபோது…. எல்லா வகையிலும் முன்னேறியுள்ளது, கடந்த 4 ஆண்டுகளில் எடப்பாடி […]