சொத்தை பிரித்து தர மறுத்த தாயை கொன்ற மகன்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டா வடமலபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரின் மனைவி பேச்சியம்மாள்(70). இவருக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளது அனைவருக்கும் திருமணமாகிய நிலையில் பேச்சியம்மாள், அதே கிராமத்தில் தனியாக வசித்துக்கொண்டு விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் காணாமல் போன மூதாட்டி பேச்சியம்மாளை அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தேடிவந்த நிலையில், […]