‘ஜனநாயகன்’ சென்சார் விவகாரம் வழக்கு வாபஸ்- ஐகோர்ட் தள்ளுபடி
ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதையடுத்து ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி படத்தை தயாரித்த நிறுவனமான கேவிஎன் புரடெக்சன், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக தணிக்கை சான்று வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் […]
“ஜனநாயகன்” படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் மதப் பிரச்சினை ஏற்படுத்துவதுபோல காட்சி?
ஜனநாயகன் படத்தில் அந்நிய சக்திகள் நாட்டில் பிரச்னை ஏற்படுத்துவது போலவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பது போலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்ட புகார் தீவிரமானது, படத்தை திரையிடும் முன் இதுசம்பந்தமாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜனநாயகன் படத்துக்கு சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா ம்ற்றும் நீதிபதி […]
ஜனநாயகன் விவகாரம்-27ம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் வரும் ஜனவரி 27ம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ஜன.27ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்று தர தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து சென்சார் போர்டு வழக்கு தொடர்ந்துள்ளது.
ஜனநாயகன் படத்திற்கு ராகுல் ஆதரவு
விஜய் தனது ஜனநாயகன் படன் தான் கடைசி என்றும் , அதன் பிறகு முழு நேர அரசியல் பணியில் ஈடுப்பட போவதாக அறிவித்தார். இந்த சூழலில், ஜன நாயகன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. தவெக தலைவர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்கிறது என்ற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாகியது. ஏற்கெனவே இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து, விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இப்படி […]
”ஜனநாயகன்” விவகாரம்.. ஜன.15ல் விசாரணை
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜனவரி.15ல் விசாரணைக்கு வருகிறது. ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்று விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்துக்கு தற்போது வரை சென்சார் சான்று தரப்படவில்லை. தனி நீதிபதி ஆணைக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்கால தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
“ஜனநாயகன்”-உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறைீடு
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனம் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவைத் திங்கட்கிழமை அவசர வழக்காக விசாரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
”ஜனநாயகன்” படத்திற்கு தடை- 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஜனநாயகன் திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்தது. ஜனநாயகன் பட வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மறுதணிக்கை செய்ய உத்தரவிடப்பட்ட ஆணையை ரத்து செய்து நீதிபதி பி.டி.ஆஷா தீர்ப்பளித்திருந்தார்.
“ஜனநாயகன்” சென்சார் வழக்கு-உத்தரவுக்கு எதிராக உடனே தணிக்கை வாரியம் மேல்முறையீடு
தவெக தலைவர் விஜயின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’க்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க தாமதம் செய்து வந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. படத்தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, உடனடியாக U/A சான்றிதழ் வழங்குமாறு தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார். இது படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி ஆஷா, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் […]
”ஜனநாயகன்” தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’க்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்க தாமதம் செய்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தணிக்கை வாரியம் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய நடவடிக்கையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘ஜனநாயகன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்குமாறு தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது. படக்குழு தரப்பில் […]
“ஜனநாயகன்” படத்திற்காக காங்கிரஸ் பொங்கி கொண்டிருக்கிறார்கள்” – தமிழிசை
காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததற்கு மத்திய அரசையும் பாரத பிரதமரையும் குறை சொல்லி மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில், “இந்த உலகமே மதிக்கும் மிகப்பெரிய ஜனநாயகன் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.. ஜனநாயக முறைப்படி நடக்கும் மதிப்பிற்குரிய ஜனநாயகனும் நமது பாரதப் பிரதமர் அவர்கள் தான்.. ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகன்படத்திற்கு சென்சார் சான்றிதழ் […]