ஜல்லி கற்களால் விபத்து-கூட்டி சுத்தம் செய்த இளைஞர்- பாராட்டு
அரியலூர் புறவழிச் சாலையில் சாலையில் கொட்டிக் கிடந்த ஜல்லிக் கற்களால் விபத்தில் சிக்கிய இளைஞரை கண்டு, பேருந்திலிருந்து கீழிறங்கி சாலையை பல மணி நேரம் கூட்டி சுத்தம் செய்த சென்னை இளைஞரின் மனிதாபிமானம் அனைவரின் பாராட்டுதலுக்குரியதாக அமைந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தைச் சுற்றி பல சிமெண்ட் ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை ஏற்றி வரும் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகளாலும், பெரம்பலூரில் உள்ள மலைகளில் இருந்து வீடு கட்டுவதற்கு தேவையான ஜல்லி ஏற்றி வரும் […]