வாடகைக்கு கேட்டு ஜேசிபி இயந்திரம் திருட்டு..திருச்சியில் பரபரப்பு
தஞ்சை மாவட்டம், பாபநாசம் களஞ்சோரி நிம்மேலி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவர் தனது ஜெ.சி.பி. வாகனத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அவர் இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அஞ்சுக் கோட்டை மேல வயலைச் சேர்ந்த பீட்டர் அனோசின் (29) என்பவர் பிரபாகரனை தொடர்பு கொண்டு வாடகை அடிப்படையில் ஜெ.சி.பி. வாகனத்தை கேட்டார். அவரது பேச்சை நம்பி, கடந்த 5-ந்தேதி அன்று பிரபாகரன் தனது வாகனத்தை […]