கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் டாரஸ் லாரிகள் நுழைய தடை

நாளை மறுநாள் மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. இதனால் மாவட்டத்திற்குள் கனிமவள டாரஸ் கனரக லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர்.ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிவாலய ஓட்ட பக்தர்களுக்கு விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். இதில் ஒவ்வொரு 2 கி.மீ. தூரத்திற்கும் […]