ரஷ்ய அதிபர் புதின் டிச.4ம் தேதி இந்தியா வருகை
இந்தியா–ரஷ்யா உறவு பல ஆண்டுகளாக வலுவாக இருந்து வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, வர்த்தகம் போன்ற துறைகளில் இருநாடுகளும் நெருக்கமான கூட்டாண்மை கொண்டுள்ளன. இந்த பின்னணியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். இதனை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதின் இந்தியா வந்த உடனே, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஷ்ட்ரபதி பவனில் விருந்துடன் வரவேற்க […]