வரும் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை..டிடிவி

 தேனியில் அளித்த சிறப்பு பேட்டியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் தனிப்பட்ட முறையில் போட்டியிடப் போவதில்லை என்று தெளிவாகத் தெரிவித்தார். “என்னுடன் இருப்பவர்களை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்” என்று கூறிய அவர், அவர்களை அமைச்சரவையில் பார்க்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகவும் வெளிப்படுத்தினார். இருப்பினும், அமைச்சரவை பதவிக்காக எவருக்கும் அழுத்தம் கொடுக்க மாட்டேன் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அமமுகவின் […]

அண்ணன் ஈபிஎஸ்-ஐ முழு மனதாக ஏற்கிறோம்.. டிடிவி பேச்சு

NDA கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் EPS என TTV கூறியதும், கூட்டத்தில் இருந்தவர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். மேலும், ‘அண்ணன்’ EPS-ஐ முழு மனதார ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் எல்லோரும் அம்மாவின் வழிவந்தவர்கள். எங்களுக்குள் சண்டை இருந்தது உண்மைதான். ஆனால், அம்மாவின் ஆட்சியை கொண்டு வர அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளோம் என கூறியுள்ளார்.

ஓபிஎஸ்-க்கு டிடிவி பிறந்தநாள் வாழ்த்து

டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-முன்னாள் முதல்-அமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான அன்பிற்குரிய நண்பரும், சகோதரருமாகிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.ஓ.பன்னீர்செல்வம் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த டிடிவி

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-எனது அன்பிற்குரிய மூத்த சகோதரரும், முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செங்கோட்டையன் அவர்கள், நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பாஜக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கூட்டணிக்குள் இணைக்க முடியாது- டிடிவி

திருச்சியில் நிருபர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசினார். “தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே கூட்டணி குறித்து அறிவிப்பேன். பாஜக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கூட்டணிக்குள் இணைக்க முடியாது” என்று தெரிவித்தார். கொள்கைக்கு உடன்படும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்று உறுதியாக கூறினார். தவெகவில் இருந்து வெளியேறிய செங்கோட்டையன் “விஜய்க்காக உயிரையும் விடுவேன்” என்று கூறியது குறித்து பேசிய தினகரன், “அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்த போது தனக்கு ஒரு […]

MGR பாதையில் எந்நாளும் பயணித்திட உறுதியேற்போம்- டிடிவி

எம்.ஜி.ஆர் காட்டிய பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38வது நினைவுநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது; பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் இதயக்கனியாக, ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கும் கொடை வள்ளலாக, உலகமெங்கும் வாழும் […]

எடப்பாடி-ஓபிஎஸ்- டிடிவி குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒத்தக்கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினாலும், டிடிவி தினகரன் அல்லது ஓபிஎஸை சேர்க்க தயாரா என்பதில் தெளிவில்லை. இதனால் அதிமுகவில் ஒற்றுமை இல்லை என விமர்சித்தார். பியூஸ் கோயல் தமிழக அரசியல் நிலை அறியாமல் பேசுவதாகவும், அவரது முயற்சி வெற்றியடையாது என்றும் கூறினார்.

அண்ணாமலை – டிடிவி திடீர் சந்திப்பு ஏன்? அமமுக டிடிவி விளக்கம்

சமீபத்தில், டி.டி.வி. தினகரன் மற்றும் கே. அண்ணாமலை இடையேயான சந்திப்பு நடைபெற்றது. பிளவுபட்டுக் கிடக்கும் அதிமுகவின் பிரிவுகளை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்தச் சந்திப்பு அமைந்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதினர். இந்தச் சந்திப்பு குறித்து ஊடகங்கள் உடனடியாக, “2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது” அல்லது “அதிமுகவின் பிளவுபட்ட தலைவர்களை மீண்டும் இணைப்பதற்கான மத்தியஸ்த முயற்சியாக இருக்கலாம்” என்று பல யூகங்களைத் தெரிவித்தன. டிடிவி தினகரன் […]

தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் NDAக்கு 3வது இடம் தான் – டிடிவி

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் சூழலை மாற்றும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் பலமான கூட்டணி அமைந்தால், அது தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) 3-வது இடத்திற்கு தள்ளும் வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார். இதை “எடப்பாடி கே.பழனிசாமி மீது வருத்தத்தில் சொல்லவில்லை, யதார்த்தத்தை சொல்கிறேன்” என்று தெளிவுபடுத்தினார். திருப்பூர் தெற்குத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய […]

ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார்.. டி.டி.வி

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விரக்தியின் உச்சத்தில் உள்ளார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விரக்தி காரணமாக என்னை ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மனநலம் குன்றியவர் போல் ஆர்.பி.உதயகுமார் உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சுயநலத்தால் அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது என்று இவ்வாறு கூறினார்.