டிட்வா புயல்…ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா
இலங்கையை இம்மாத தொடக்கத்தில் டிட்வா புயல் தாக்கியது. இந்த புயலால் இலங்கையில் 643 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு ஆபரேஷன் சாகர் பந்த் என்ற திட்டத்தின்கீழ் நிவாரண உதவிகளை செய்து வருகிறது. மேலும், பிரதமர் மோடியின் சிறப்பு தூதராக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெயசங்கர் இலங்கை சென்றுள்ளார். அவர் இலங்கையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை […]
டிட்வா புயல் பாதிப்பு…இலங்கை மக்களுக்கு உதவ தமிழகம் தயார்…முதல்வர் மு.க. ஸ்டாலின்
டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: – டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும் பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியும் இலங்கை மக்கள் அவதியுறுகின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் இப்பெருந்துயரில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பங்கெடுக்கிறோம். இலங்கையில் […]
டிட்வா புயல் எதிரொலி… கொந்தளிக்கும் கடல்
வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் வேதாரண்யத்திற்கு கிழக்கு வடகிழக்கு மற்றும் சென்னை தெற்கு கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது டிட்வா புயல் காரணமாக நேற்று காலையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மற்றும் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் டிட்வா புயல் கரையை நெருங்குவதால் புதுச்சேரியில் கடும் சீற்றத்துடன் கடல் கொந்தளிக்கிறது. அலைகளின் ஆக்ரோஷத்தால் கடற்கரை […]
கரையை விட்டு விலகும் டிட்வா புயல்
தமிழ்நாட்டு கடற்கரையில் இருந்து 25 முதல் 50 கிலோமீட்டர் தள்ளி வங்கக்கடலில் டிட்வா புயல் பயணித்து வந்தது. தற்போது புயல் 30 முதல் 70 கிலோமீட்டர் விலகி கடலுக்குள் பயணிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 220 கிலோமீட்டர் தெற்கு- தெற்கிழக்கில் டிட்வா புயல் உள்ளது. வேதாரண்யத்டுக்கு கிழக்கு- வடகிழக்கு திசையில் 100 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் புயல் முதுவாக நகர்கிறது.
நெருங்கும் டிட்வா புயல்… செங்கல்பட்டு மாவட்டம் உதவி எண்கள் அறிவிப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் வலுப்பெற்று வரும் டிட்வா (Ditwah) புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) சமீபத்திய தகவலின்படி, புயலின் மையம் தற்போது சென்னைக்கு 400 கி.மீ. தென்கிழக்கே, புதுச்சேரிக்கு 300 கி.மீ. தென்கிழக்கே, காரைக்காலுக்கு 190 கி.மீ. தென்கிழக்கே உள்ளது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (நவம்பர் 30) […]
டிட்வா புயல்.. தஞ்சையில் பேரிடர் மீட்புக்குழு தயார்
டிட்வா புயல் நாளை கரை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளதால், தஞ்சை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தஞ்சை மாவட்டத்தில். ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 3 தாலுக்காக்கள் மிகவும் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டு உள்ளது. அதே போல் 24 கடற்கரை கிராமங்கள் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டு, […]
இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயல்.. 46 பேர் பலி
இலங்கை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா (Ditwah) புயலின் கனமழை மற்றும் வலுவான காற்றால் இலங்கைத் தீவு முழுவதும் வியாழன் (நவம்பர் 28) அதிகாலை வரை பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர், 23 பேர் காணாமல் போயுள்ளனர் என்று இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் (DMC) அறிவித்துள்ளது. மத்திய டீ பயிரிடும் படுகலா மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் மட்டும் 21 பேர் உயிரிழந்தனர். இது சமீப காலங்களில் இலங்கை சந்தித்த மிக மோசமான […]
டிட்வா புயல்… 30 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழு தஞ்சை வருகை
டிட்வா புயல் கனமழை காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆவடியில் இருந்து 30 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் தஞ்சை வந்துள்ளனர் டிட்வா புயல் மையம் கொண்டு உள்ளதால், காவிரி படுகை மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழையால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆவடியில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் இருந்து 30 பேர் கொண்ட குழுவினர் சார்பு ஆய்வாளர் அனுசுயா தலைமையில் தஞ்சை வந்துள்ளனர் […]
டிட்வா புயல்- 17 மாவட்டங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை
டிட்வா புயல் தற்போது சென்னைக்கு 530 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு 430 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டு இருக்கிறது. இந்நிலையில் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல் தற்போது 10 கி.மீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது வருகிற 30-ந்தேதி அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் என ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தநிலையில் […]