சபரிமலை தங்கம் திருட்டு… எஸ்ஐடி விசாரணை- கேரளா ஐகோர்ட்
சபரிமலை தங்கத் திருட்டு குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் எஸ்.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது என கேரள ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையை தேவசம் போர்டு கண்காணித்து வருகிறது எனவும் கேரளா ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் பதில் மனு தாக்கலுக்கு பின் விசாரிப்பதாக கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கு.. மேலும் ஒருவர் கைது
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமாரை கேரள சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலையில் இருந்து 4.54 கிலோ தங்கம் திருடப்பட்டது. தங்கம் திருட்டு வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.