தஞ்சை பெரிய கோவிலில் தரைதளம் அமைக்கும் பணி
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை சார்பில் தரைதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோயில் கோபுரத்துக்கு அதிர்வு ஏற்படாதபடி தொழிலாளர்கள் உளி, சுத்தியலால், பழைய தரைதளத்தை அகற்றி வருகின்றனர். உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து, கோயிலில் உள்ள கல்வெட்டுகளும், சிற்பங்களையும் பார்த்து வியந்து செல்கின்றனர்.இந்நிலையில் கோயிலின் உள்பிரகாரத்தில் பல இடங்களிலும் மழைநீர் தேங்கியதால், சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாமலும், […]