பொள்ளாச்சி ஆழியார் அணையில் தண்ணீர் திறப்பு… மலர்தூவி வரவேற்பு
கோவை, பொள்ளாச்சி ஆழியார் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 22 ஆயிரத்து332 ஏக்கர் விளை நிலம் பயன்பெறும் வகையில் ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையைடுத்து ஆழியார் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டது. அதன்படி இன்று பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து பொள்ளாச்சி, வேட்டைக்காரன் புதூர், ஆழியார் ஊட்டுக்கால்வாய் வழியாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு […]
டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10ஆம் தேதி வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக இருந்த திறப்பு, டெல்டா பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்ததை கருத்தில் கொண்டு நேற்று (டிச., 14) முதல் வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி 90 மெகாவாட்டாக […]
புழல் ஏரியில் தண்ணீர் திறப்பால் தரைப்பாலம் மூழ்கியது
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியில் இருந்து 2,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மணலி, சடையங்குப்பம், பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே மழைநீர் வடியாமல் தேங்கி நின்ற நிலையில், தற்போது ஏரியில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.இந்த நிலையில் சடையங்குப்பம் பகுதியில் உள்ள தரைப்பாலம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. இருப்பினும் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தண்ணீரில் இறங்கி நடந்தபடி தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர். தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் அந்த வழியாக […]