ஆசிரியர் வீட்டில் 103 சவரன் நகை கொள்ளை… கோவையில் அதிர்ச்சி

கோவை குனியமுத்த்தூர், நரசிம்மபுரம், ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்ட்டின், இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, விடுமுறைநாள் என்பதால், தனது குடும்பத்துடன் கிருஸ்துமஸ் கொண்டாட உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலையில் வீடு திரும்பிய நிலையில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 103 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 10 ஆயிரம் களவு போனது தெரியவந்துள்ளது. இது குறித்து […]

புதுச்சேரியில் தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை

புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க. பொதுக்கூட்டம் நாளை நடைபெறும் நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உப்பளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.