தனியார் பஸ்-வேன் மோதி விபத்து… 30 பேர் காயம்
கடலூர் மாவட்டம், வடலூர் அருகே தனியார் பஸ், வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக ஏரியில் கவிழாமல் நூலிழையில் வேன் தப்பியது. பஸ்சும் வேனும் மோதிய விபத்தில் 25 பெண்கள் உட்பட 30 பேர் காயம் அடைந்துள்ளனர். உடனடியாக காயம் அடைந்த 30க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
கரூர்-அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதி விபத்து…
கரூரில் சிக்னலில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதி விபத்து – அதிஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை: போலீசார் விசாரணை. குளித்தலையிருந்து புறப்பட்ட அரசு தாழ்தளப் பேருந்து கரூர் பழைய பேருந்து நிலையம் வந்து கொண்டிருந்தது. பழைய பேருந்து நிலைய ரவுண்டானா சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக பழனி நோக்கி சென்ற தனியார் பேருந்து, சிக்னலில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து பின்புறம் […]