அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: ₹183.86 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட ரூ.183.86 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.2024-2025-ம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 183 கோடியே 86 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியத் திருநாட்டிற்கே வழிகாட்டக்கூடிய வகையில், […]
இடியாப்பம் விற்க லைசன்ஸ்… தமிழக அரசு கெடுபிடி
சைக்கிள், இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்கும் வியாபாரிகள் உணவு பாதுகாப்புதுறையிடம் உரிமம் பெற்று இடியாப்பம் விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் தரமற்ற இடியாப்பங்கள் விற்பனை செய்வதாக வெளியான தகவலால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.