அரசியல் அனுபவம் இருந்தும் தவறான முடிவு? – செங்கோட்டையனை சாடிய வானதி!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்குச் செல்ல வேண்டும் என்பது தனது ஆசை என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலை தமிழக அரசியலில் மிகுந்த செல்வாக்கு பெற்ற தலைவராக இருப்பதால், அவர் சட்டசபைக்கு வருவது கட்சிக்கும் தமிழகத்துக்கும் பெரும் பலமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “சகோதரர் அண்ணாமலை சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும் என்பது எங்கள் எல்லோரின் விருப்பம்” என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.வானதி சீனிவாசன் மேலும் கூறுகையில், […]

அப்பா-பிள்ளையை பிரித்தது ஜிகே.மணிதான்-அன்புமணி குற்றச்சாட்டு

பாமகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்று கூடி முன்னாள் பாமக தலைவர் ஜி.கே.மணி கௌரவ தலைவர் பா.ம.க  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.இக்கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், “ஜி.கே.மணியை பாமகவில் இருந்து நீக்குவது குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு கூடி அறிக்கை அளிக்க வேண்டும். என்னை தலைவராக்கிய அடுத்த நாளில் இருந்து ஜி.கே.மணி சூழ்ச்சியை ஆரம்பித்துவிட்டார். சூழ்ச்சி செய்து அப்பா- பிள்ளையை பிரித்தது ஜி.கே.மணி […]