எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதில் மனு!
சென்னை: எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல் அளிக்கக்கோரிய மனு ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் பதிலை ஏற்று வழக்கை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
குதிரை, கழுதை வளர்க்க உரிமம் கட்டாயம்.. தமிழக அரசு
குதிரை சவாரி, குதிரை இனம் சார்ந்த விலங்குகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில்; குதிரை, கழுதைகளை பயன்படுத்துபவர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிமம் பெற வேண்டும். அதிக எடைகளை ஏற்றினால் உடனடியாக குதிரை, கழுதை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும். மகிழ்ச்சியான குதிரை சவாரி, திருமணத்துக்காக பொருட்களை சுமப்பதற்காக பயன்படுத்துவது குறித்து தெளிவாக குறிப்பிட்டு உரிமம் பெற வேண்டும். குதிரை வளர்க்கும் நிறுவனங்களும் குதிரையை […]
அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறப் புதிய நடைமுறை- தமிழக அரசு அரசாணை
தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பாஸ் போர்ட் சேவா கேந்திரங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், பின்னர் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு ஊழியர்கள் கடிதம் அனுப்ப வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியிடம் தடையில்லா சான்றிதழ் கிடைத்ததும் வெளிநாட்டிற்கு அரசு ஊழியர் பயணம் செல்ல முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் அரசு ஊழியர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு, அரசின் அனுமதி பெறாமல் அங்கு வேலை […]
வீடு தேடி வரும் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்…
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்னும் 2 நாட்களில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பரிசு தொகுப்பும், சில நேரங்களில் ரொக்க பணமும் வழங்கப்படும். கடந்த 2022ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ரொக்க பணம் கொடுக்கப்படவில்லை. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது. இந்த ஆண்டு […]
செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுக..டிடிவி
தமிழகத்தில் நீண்ட காலமாகப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் செவிலியர்களுக்கு ஆதரவாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். செவிலியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது… கொரோனா காலக்கட்டத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய தற்காலிகச் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக […]
சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு அடிக்கல்
தமிழக இஸ்லாமிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான, அதிநவீன வசதிகளுடன் கூடிய சென்னை ஹஜ் இல்லம் கட்டுவதற்கு இன்று (டிசம்பர் 16, 2025) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வு தமிழக அரசின் மத நல்லிணக்க முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.ஹஜ் இல்லத்தின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம்ஹஜ் மற்றும் உம்ரா புனிதப் பயணத்திற்காகச் சவூதி அரேபியா செல்லும் தமிழகப் பயணிகளுக்குப் பயனளிக்கும் வகையில், இந்தப் புதிய இல்லம் அமைக்கப்பட […]
சபரிமலை பக்தர்களுக்கு 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட் அனுப்பி வைக்கும் தமிழக அரசு..
திருவனந்தபுரம்: சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்க உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக வரும் 16ம் […]