ஆரணி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து தம்பதி பலி
திருவண்ணாமலை, ஆரணி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் தம்பதி உயிரிழந்தார். மும்பையில் இருந்து நெல்லை செல்லும் தாதர் விரைவு ரயிலில் சிவகண்டன். மனைவி கலையாசி. 3 பெண் குழந்தைகள் சென்றனர். ஆரணி அருகே ரயில் சென்றபோது சிவகண்டன் கதவு முன்பு நின்று வேடிக்கை பார்த்தபோது தவறி விழுந்தார். கணவன் சிவகண்டனை காப்பாற்ற முயன்ற மனைவி கலையரசியும் ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.
குறுக்கே வந்த நாய்… தம்பதி மீது பஸ் ஏறி பலி…பரிதாபம்
மதுரை ஜீவா நகர் பகுதியை சேர்ந்த வெங்கடசுப்பு மற்றும் அவரது மனைவி பத்மாவதி ஆகிய இருவரும் மதுரையிலிருந்து இன்று அதிகாலை அலங்காநல்லூரிக்கு பைக்கில் சென்றுக்கொண்டிருந்தனர். சிக்கந்தர்சாவடி அருகே சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி தம்பதி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து தம்பதி மீது மோதியதில் கணவர் வெங்கடசுப்பு சம்பவ இடத்திலேயே பலியானார். தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மனைவியும் உயிரிழந்ததால் குடும்பமே […]