புதுச்சேரியில் தவெகவுக்கு விசில்
சட்டமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரியிலும் தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். ஏற்கனவே தமிழ்நாட்டில் தவெகவுக்கு விசில் சின்னம் வழங்கியிருந்தது தேர்தல் ஆணையம். விஜயின் தவெக தனது முதல் தேர்தலிலேயே தமிழ்நாடு, புதுச்சேரியில் பொதுச்சின்னத்தில் களமிறங்குகிறது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் பொதுசின்னமாக விசில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.
வெறும் 1 1/2 மணி நேரத்தில் ‘தவெக’ 10,000 விருப்ப மனுக்கள் விநியோகம்…
பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. தலைமை அலுவலககத்தில் நேற்று விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. முதல் விருப்ப மனுவை கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் சார்பில் கட்சி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த், த.வெ.க. மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் ரூ.100 செலுத்தி தங்களது விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டனர். சென்னை உள்பட […]
6ம் தேதி முதல் தவெக விருப்ப மனு பெறலாம்..
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது. இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு […]
தவெக 3-வது ஆண்டு தொடக்க விழா: தொண்டர்களுடன் மேடையில் நடனமாடி அசத்திய விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா, சென்னை அடுத்த பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றினார். விழாவின் ஒரு பகுதியாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் முருகன் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பாடல்கள் இசைக்கப்பட்டன. மேடையில் பிரபல நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன், விஜய்யை வாழ்த்திப் பாடல் ஒன்றைப் பாடினார். அவர் […]
சென்னையில் ‘தவெக’ செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். […]
பனையூர் பண்ணையார்தனம் செல்லாது!” – கரூர் விபத்தை முன்வைத்து விஜய்க்கு அதிமுக கடும் கண்டனம்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செயற்குழு கூட்டத்தில் அதிமுகவை ‘ஊழல் கட்சி’ என விஜய் விமர்சித்ததற்கு, அதிமுக தரப்பு தற்பொழுது அனல் பறக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், விஜய்யின் அரசியல் அணுகுமுறை மற்றும் கடந்த காலச் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. கிளிசரின் கண்ணீரும் சுய விளம்பரமும்:சமீபத்தில் கரூரில் தவெக மாநாட்டுப் பணிகளின் போது உயிரிழந்த 41 பேரின் மரணத்திற்கு விஜய்யும் ஒரு காரணம் என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் […]
ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி: விஜயுடன் கைகோர்த்த முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி.பிரபாகர்!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜே.சி.டி.பிராபகர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார். இந்தநிலையில், சென்னையில் தவெக தலைவர் விஜயை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் ஜே.சி.டி.பிரபாகர். 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வில்லிவாக்கத்தில் போட்டியிட்டு ஜே.சி.டி.பிரபாகர் வெற்றி பெற்றிருந்தார். அதிமுக சார்பில் வில்லிவாக்கத்தில் 10,782 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர். பொங்கலுக்கு முன் பல முக்கிய தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்தநிலையில், ஜே.சி.டி.பிராபகர் தவெகவில் இணைந்துள்ளது ஓபன்னீர் செல்வம் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக […]
தவெக ஒரு கலப்பட கட்சி- இபிஎஸ் பேட்டி
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஊரக வேலைத் திட்டத்தில் 100 நாள் வேலை என்பதை திருத்தம் செய்து 125 நாட்களாக மத்திய அரசு அதிகரித்திருக்கிறது. முதலமைச்சருக்கு பாராட்ட மனமில்லாமல் அதிமுகவை குற்றஞ்சாட்டுகிறார். 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயரே நீடிக்க வேண்டும். ரயில் கட்டண உயர்வை பரிசீலித்து மத்திய அரசு குறைக்க வேண்டும். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.5000 வழங்க நடவடிக்கை வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக வைத்த அதே […]
சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம்.. தவெகவுக்கு அழைப்பு விடுத்த பாமக
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி டிசம்பர் 17 அன்று நடைபெறவுள்ள மாநில அளவிலான போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பங்கேற்குமாறு பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) அழைப்பு விடுத்துள்ளது. இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து அழைப்புக் கடிதத்தை வழங்கினர். இது 2026 தேர்தலுக்கு முன்னதாக இரு கட்சிகளுக்கும் இடையே சாத்தியமான கூட்டணி யூகங்களை தூண்டியுள்ளது.பாலு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் […]
செங்கோட்டையனை தொடர்ந்து தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்…?
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் துணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் இருந்து வருகிறார். இந்நிலையில் அங்கிருந்து விலகி வைத்திலிங்கம் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. வைத்திலிங்கம், 2001-2006 மற்றும் 2011- 2016 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். இப்போது அவர் ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். கடந்த மாதம் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் […]
தவெகவில் செங்கோட்டையனுக்கு முக்கிய பதவி..
அதிமுகவில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்றைய தினம் விஜய்-ஐ சந்தித்து சுமார் 2 மணி ேநுரம் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில் சென்னை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் வந்தார். அங்கிருந்த தவெக தலைவர் விஜய்-ஐ சந்தித்து முறைப்படி அக்கட்சியில் இணைந்தார். இந்தநிலையில் தவெகவில் சேர்ந்த செங்கோட்டையனுக்கு கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், 4 மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என்றவர் தவெகவில் ஒருங்கிணைந்துவிட்டார்”- புகழேந்தி
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “அதிமுகவின் மூத்த தலைவர், ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு நம்பிக்கைக்குரிய தலைவர், அதிமுகவுக்கு செம்மையாக உழைத்தவர். 9 முறை கோபியில் வெற்றி பெற்றவர். அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் என்ற செங்கோட்டையனை நீக்கியுள்ளார் துரோகி ஈபிஎஸ். காட்டுமிராண்டி தனமாக செயல்படும், எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏக்களை நீக்கியுள்ளார். சர்வாதிகரமாக செயல்படும் பழனிசாமிக்கு எதிராக என்ன செய்ய முடியும்? யாருடனோ கூட்டு சேர்ந்து அதிமுகவை இல்லாமல் செய்வதாக பழனிசாமி உறுதிமொழி எடுத்துள்ளார். அதிமுகவை ஒருங்கிணைக்கிறேன் எனக் கூறி வெளியே வந்தவர், […]
தவெகவில் செங்கோட்டையன்- நிர்மல்குமார் சூசக பதில்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்டம் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் விசாரணையில், பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், வணிக வளாக கடை உரிமையாளர்கள், காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள், தவெக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று, இன்றும் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், […]
தவெக புஸ்ஸி, ஆதவ், நிர்மல், மதியிடம் சிபிஐ 2வது நாளாக விசாரணை
கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொது நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் இரண்டாவது நாளாக விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் […]
டிச.4 ல் சேலத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை?..
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு தீவிரமடைந்துள்ளன. அதன்படி, அண்மையில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் விஜய் தலைமையில் தற்போது தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் மீண்டும் தவெக தலைவர் விஜய் பரப்புரை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். அடுத்தகட்டமாக சேலத்தில் அவர் […]
நம்ம எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் போகும்…விஜய்
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிரமான பட்டியல் திருத்தம் (Special Intensive Revision – SIR) பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் நடிகர் விஜய், இது வாக்காளர்களின் உரிமையை பறிக்கும் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று எச்சரித்துள்ளார். நவம்பர் 15 அன்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட 9 நிமிடங்கள் 20 வினாடிகள் நீளமுள்ள வீடியோவில், விஜய், “நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நமது ஓட்டுரிமை பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது பயமுறுத்தல் அல்ல, […]
பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்-தவெக அருண்ராஜ்
பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம் என த.வெ.க அருண்ராஜ் கூறியுள்ளார். சென்னையில் நேற்று (நவ., 12) தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், கூட்டணி குறித்த முடிவை தலைவர் விஜய் எடுப்பார் என்றும் அவரது சுற்றுப்பயண அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மக்களுடன் இருக்க வேண்டும் என்ற மன உறுதி விஜய்க்கு அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.
விஜய் பஸ் வீடியோக்களை சிபிஐ-விடம் ஒப்படைத்த தவெக
தவெக வழக்கறிஞர், பனையூர் கட்சி அலுவலக உதவியாளர் மற்றும் நிர்வாகி என மூன்று பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்: வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்துள்ளதாக தகவல். கரூர்,வேலுச்சாமி புரத்தில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உச்ச நீதிமன்றம் உத்தரவின் படி சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து கரூரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், […]