திருச்சியில் இரும்பு கடை வியாபாரியை தாக்கிய ரவுடி கைது

திருச்சி காந்தி மார்க்கெட் கீரக்கடை பஜார் தெருவை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் போஸ்கோ (55). இவர் அப்பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 23 ந்தேதி இவர் கடையில் இருந்த போது அங்கு தெற்கு தாராநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்த ரவுடி ராஜீவ் காந்தி (40 ) என்பவர் வந்தார். அவர் அலெக்சாண்டர் போஸ்கோவிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுக்கவே அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சுத்தியலால் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு தலையில் […]