ஜோதிடர் பேச்சை கேட்டு தாயை தலையணையால் அமுக்கி கொன்ற கொடூர மகள்..
கர்நாடகா மாநிலம் அனூபனஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுசித்ரா (33) என்பவரின் தந்தை சுமார் 18 மாதங்கள் முன்பு உயிரிழந்தார். தந்தையின் திடீர் மரணத்தால் வேதனையில் இருந்த சுசித்ரா, இது குறித்து ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது சுசித்ராவின் தந்தை உயிரிழப்புக்கு அவரது தாயார் புஷ்பாவதி செய்த பில்லி சூனியம் தான் காரணம் என அந்த ஜோதிடர் கூறியுள்ளார். இதனை அப்படியே நம்பிய சுசித்ரா, தனது 55 வயது தாயின் மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். […]