ரூ.178 கோடியில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்-வேளாண் பட்ஜெட்டில் தகவல்

*5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 28 வேளாண் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களில் வேளாண் வளர்ச்சி அடைய கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. *800 தரம் பிரிப்பு கூடங்களுடன் கூடிய உர கலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.178 கோடி செலவில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் நம்மாழ்வார் வேளாண் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்பட உள்ளது. மேட்டூர் அணை […]

புதுகை-“உங்க கனவை சொல்லுங்க” – 4.65 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்பு

உங்க கனவை சொல்லுங்க’ திட்டம்: 4.65 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்புதமிழக முதலமைச்சரின் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் 4.65 லட்சம் குடும்பங்களின் தேவைகள் மற்றும் கனவுகளைக் கேட்டறியும் பணி இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் உரிமைகளை ஆமாம் சாமி போட்டு அடகு வைத்தவர் இபிஎஸ்– முதல்வர் சாடல்

திருவள்ளூர்  மாவட்டம் பொன்னேரியில் ‘உங்க கனவு சொல்லுங்க’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தன்னார்வலர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1.90 கோடி குடும்பங்களை சந்தித்து மக்களின் கனவுகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியும் இத்திட்டம், அரசின் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேடையில் மக்களிடம் நேரடியாக கனவுகளை கேட்டறிந்த முதலமைச்சர், அவற்றை செயல்படுத்தித் தருவதாக உறுதியளித்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் பாலமாக இருக்க […]

”உங்க கனவை சொல்லுங்க” திட்டம்…தன்னார்வலர்களுக்கு கைபேசி இணைப்பு வழங்கிய அமைச்சர்கள்

தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின திருவள்ளுர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு அரசின் ”உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற விழா நிகழ்வில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு கைபேசி இணைப்பு, விண்ணப்பப் படிவம், அடையாள அட்டை, தொப்பி மற்றும் கனவு அட்டைகளை வழங்கி சிறப்பான முறையில் இப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள். […]

ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு திட்டம்

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே ரூ.5,000 வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தொகை ரூ.3,000-ஆக வழங்க வாய்ப்புள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில வாரங்களில் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால், இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பயனாளிகள் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதலமைச்சரால் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.