திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்திற்கு இந்திரா காந்தி பெயர்
சென்னை: திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார். புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது
திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரூ.45 லட்சம் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.45 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில், லால்சந்த் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி அதிக அளவிலான வெள்ளிப் பொருட்களை எடுத்துச் சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து விசாரணை நடத்திய போலீசார், வெள்ளிப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். முறையான ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பொருட்களுக்கு 3 சதவீத வருமான வரி மற்றும் […]
அன்புமணிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திறமையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, செயல் தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 20 பேர் கலந்து கொண்டனர். இந்த நிர்வாக குழு கூட்டத்தில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் பங்கேற்கவில்லை. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், […]
ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, செண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தின் ஓட்டுநர் திருமலை என்பவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் பேருந்தின் வேகத்தை குறைத்து விபத்தை தவிர்க்க கடும் முயற்சி செய்தார். அந்த பேருந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி நின்றது. இந்த சம்பவத்தில் அதிர்ஷடவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வலிப்பு நோய் ஏற்பட்ட ஓட்டுநர் திருமலையை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு […]