சொத்து கேட்டு பெற்றோரை வெட்டிய மகன் – தந்தை பலி, தாய் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த சக்கையநாயக்கனூரைச் சேர்ந்தவர் பாண்டி (70). இவரது மனைவி மீனாட்சி (65). இவர்களது மகன் சுருளி (45), கடந்த சில நாட்களாகப் பெற்றோரிடம் சொத்து கேட்டுத் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். நேற்று இரவும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சுருளி மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது தந்தை மற்றும் தாயை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் […]
திண்டுக்கல்-புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு-காளை முட்டி வீரர் பலி
திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் அலங்காநல்லூரை சேர்ந்த பாலகுரு படுகாயம் அடைந்தார். உடனடியாக காயமடைந்த அவரை அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மீட்டு உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தப் போட்டியில் பாலகுரு தவிர, மாடு பிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மேலும் சிலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வழக்கமாக ஜல்லிக்கட்டு […]
தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கார் மோதி 2 விவசாயிகள் பலி- பரிதாபம்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வாகரை பகுதியில், அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு முதிய விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். வாகரை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வேலுச்சாமி (62) மற்றும் கருப்புசாமி (62). சம்பவம்: இவர்கள் இருவரும் இன்று மதியம் ஒரு வேலையாகத் தங்களது இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம் – தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று, எதிர்பாராத விதமாக இவர்களது […]
திண்டுக்கல்லில் பரபரப்பு: எஸ்.ஐ-யை அரிவாளால் வெட்டிய ரவுடிக்கு காலில் துப்பாக்கிச் சூடு
திண்டுக்கல்லில் விசாரணைக்குச் சென்ற போலீசாரை அரிவாளால் வெட்டிய ரவுடியை, டி.எஸ்.பி தற்காப்புக்காகத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (31). பிரபல ரவுடியான இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், விக்னேஸ்வரன் மீண்டும் ஒரு கொலைச் சம்பவத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், நேற்று மாலை திண்டுக்கல் நகர் டி.எஸ்.பி கார்த்திக் […]
திண்டுக்கல் மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை வௌியிட்ட முதல்வர்
திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அவைகள்; “திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் சாலை தெரு விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ரூ.16 கோடியில் நிறைவேற்றப்படும். மாநகராட்சி பாதளா சாக்கடை, சுத்திகரிப்பு நிலையம் ரூ.8 கோடியில் சீரமைக்கப்படும். இடும்பன்குளம், சண்முகா நதி ரூ.6 கோடியில் மேம்படுத்தப்படும். புதிய நத்தம் கலை அறிவியல் கல்லூரியில் ரூ.18.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். மார்க்கம்பட்டியில் முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தெழிற்சாலை ரூ.7 கோடியில் அமைக்கப்படும். கொடைக்கானல் […]
கைதிகளுக்கு கஞ்சா சப்ளை… சிறைக்காவலர் சஸ்பெண்ட்
திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து செல்லும் போதும், உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு வழங்கும்போதும் வெளி நபர்கள் மூலமாக கஞ்சா கைமாற்ற சிறைக் காவலர் அன்பரசு உதவி செய்து அவரே வாங்கி வைத்துக்கொண்டு கைதிகளுக்கு விற்பனை செய்துள்ளார்.சமீபத்தில் வெளியே சென்று வந்த கைதி மூலமாக வாங்கி வந்த கஞ்சாவை சிறைக்காவலர் அன்பரசு பைக்கில் மறைத்து வைத்திருந்தார். இதுகுறித்த சிறை அதிகாரிகள் சோதனையின்போது அன்பரசு சிக்கிக்கொண்டார். இது தொடர்பாக மதுரை சிறை எஸ்.பி., சதீஷ்குமார் […]
திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல்
டெல்லியில் சமீபத்தில் செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நாடு முழுவதும் காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்கள் மற்றும் மருந்துகள் விற்பனை செய்வதற்கு உரிமம் பெற்ற கடைகள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் நடத்திய சோதனையின்போது, 2 கடைகளில் சல்பர், போட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடி மருந்துகள் உரிமம் புதுப்பிக்கப்படாமல் விற்பனைக்கு […]