திமுகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் திட்டம்- அரசியலில் பரபரப்பு

சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விருப்பு மனு பெறும் நிகழ்ச்சியை, தைலாபுரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என்று தெரிவித்த மருத்துவர் ராமதாஸ், திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் இடம் பெறுவீங்களா என்ற கேள்விக்கு, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார். அதிமுக – பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணியும் இணைந்துள்ளார். இந்த நிலையில் அன்புமணி நடத்தும் […]

திமுக கூட்டணி அசைக்க முடியாத கூட்டணி- திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திருவரங்கம் பகுதியில் பேருந்து நிலையம் இல்லாமல் இருந்ததால் அப்பகுதி மக்கள் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்தநிலையில், கடந்த 2023 24 அரசு மூலதன மானிய நிதி மூலம் திருவரங்கம் அரசு மருத்துவமனை எதிரே ரூபாய் 11.10 கோடி மதிப்பீட்டில் கடந்த 2023ம் வருடம் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டு பூமி பூஜை போடப்பட்டது.இப்பணிகள் துரிதமாக […]

திமுகவுடன் காங்.,பேச்சு வார்த்தை… 5 பேர் பெயர்கள் அறிவிப்பு

 காங்கிரஸ் தலைமை கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த 5 பேர் கொண்ட குழுவை நியமித்திருப்பதாக செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை மாண்புமிகு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் அவர்கள் தலைமையில் அமைத்திருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் […]