வாகன ஓட்டிகளுக்கு திமுக சார்பில் விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம்  எண்ணை ஊராட்சி மேலப்பட்டி பகுதியில்கழக இளைஞரணிச் செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளினை முன்னிட்டு, அன்னவாசல் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற, வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கும் விழா மற்றும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் […]