3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது – முர்மு

டில்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு விரைவான முன்னேற்றத்தை அளித்த மறக்க முடியாத ஆண்டாக அமைந்ததாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். வலுவான அடித்தளங்களுடன் நாடு முன்னேறி வருவதாகவும், மத்திய அரசின் சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் பலன்கள் ஏறத்தாழ 95 கோடி குடிமக்களை சென்றடைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்த குடியரசுத் தலைவர், வந்தே மாதரம் […]