தனியார் வேலைவாய்ப்பு முகாம்- திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜன.24-ம் தேதி, வயலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் இம்முகாமில், 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியுள்ள நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த வாய்ப்பை வேலை நாடுநர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

மாவடிக்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்ற மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை

திருச்சி கலெக்டர் சரவணனுக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அவற்றில் கூறியிருப்பதாவது.. ஆகாயத்தாமரையினால், நீர் ஆவியாவதைத் துரிதப்படுத்துவது மற்றும் நீர்நிலைகளில் உள்ள உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறது. நீர் ஒட்டத்தைத் தடுப்பது போன்ற பல காரணத்தினால் நீர்நிலைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் பல இடங்களில் இதற்கான பணிகள் நடைப்பெறவில்லை. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் பெரிய குளங்களில் ஒன்றான மாவடிக்குளம், உய்யக்கொண்டான் ஆறு, கொட்டப்பட்டு […]