திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் நாளை கடையடைப்பு போராட்டம்..
23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும்,டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை 58 யில் இருந்து 60 ஆக உயர்த்த வேண்டும்,காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் என்ற பெயரில் ஊழியர்களுக்கு வேலைப் பளுவை திணிப்பதை கைவிட்டு, மாற்றுத் திட்டத்தை உருவாக்கி அமுல்படுத்த வேண்டும்,8 மணி நேரத்துக்கு மேல் பணி புரியும் கடை ஊழியர்களுக்கு கூடுதல் நேரத்திற்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும், பணி இடமாறுதல், மீண்டும் பணி வழங்குதல் ஆகிய செயல்முறை […]
ஊதிய உயர்வு வழங்ககோரி-திருச்சியில் மின் ஊழியரர்கள் போராட்டம்
மின்வாரியத்தில் 1.12.23 .ல் இருந்து பணி புரியும் பொறியாளர் தொழிலாளர்கள் , கேங்மேன் பணியாளர்கள் உட்பட 80 ஆயிரம் பேருக்கு ஊதிய உயர்வை தொடர் பேச்சுவார்த்தை நடத்தி அறிவித்திட கேட்டு தமிழகம் முழுவதும் கோரிக்கை பேட்ஜ் அணிந்து, பிரிவு அலுவலகங்களில் ஒலி முழக்க போராட்டம் நடைபெற்றது. திருச்சி தென்னூர் மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இன்ஜினியர் சங்கம், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், சி.ஐ.டி.யு.தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, எம்ளாய்ஸ் பெடரேஷன் […]
இடைக்கால பட்ஜெட்.. வைகோ பாராட்டு
தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட் மக்களின் காதில் பொன் ஆபர்ணத்தை குத்தியுள்ளது – காது குத்தும் வேலை என்கிற அதிமுக வின் குற்றச்சாட்டுக்கு வைகோ பதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திகைக்க வைக்கும் வகையில் 36 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தாக்கல் செய்து வருகிறார்.அனைத்து தரப்பினரையும் கவருவதாகவும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு வரும் வகையில் அறிவிப்புகள் […]
திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாடு பணிகள் மும்முரம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரம்மாண்ட மாநில மாநாடு மார்ச் 8-ந் தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற உள்ளது. திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்கிற தலைப்பில் மாநாடு மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. திருச்சி சிறுகனூரில் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். தற்போது இதற்கான பிரம்மாண்ட மேடை பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன. […]
திருச்சி மன்னார்புரம் அருகே விபத்து: முதியவர் பலி
திருச்சி மன்னார்புரம் அருகே இன்று அதிகாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் உடல் சிதைந்து அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து எடமலைப்பட்டி புதூர் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் அளித்த புகாரின் பேரில், தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். […]
திருச்சி கிரைம்…தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர், குட்டி மலை ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், சிறப்புச் சார்பு ஆய்வாளர் கிறிஸ்டோபர் ராஜ் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த அன்பிலார் நகரைச் சேர்ந்த அஷ்ரப் அலி என்பவரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். இதையடுத்து அவரை கைது […]
திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
திருச்சி இபி ரோடு, லூர்துசாமி பூங்கா அருகே போதை மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகக் கோட்டை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கமல நேரு பகுதியை சேர்ந்த காளிமுத்து (19) என்பது தெரியவந்தது. அவர் அந்தப் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததை […]
திருச்சி மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: கைதான பெண்ணின் திக் திக் பின்னணி
திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்த வர் விக்னேஷ். இவரது மனைவி சுகன்யா (23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. சுகன்யாவை பிரசவத்துக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவம னையில் சேர்த்தனர். அங்கு கடந்த 11ம்தேதி அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து பிரசவ வார்டில் தாய்க்கும், சேய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு உதவியாக உறவுக்கார பெண் ஒருவர் இருந்தார். அவர் நேற்று காலை வெளியில் […]
திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு!.. பாராட்டு
திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி சுகன்யா. கர்ப்பிணியான சுகன்யா கடந்த 11ம் தேதி பிரசவத்திற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஅழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். கடந்த 4 தினங்களாக சுகன்யா மருத்துவமனையில் இருந்து வரும் நிலையில் அவருக்கு அறிமுகமான பெண் ஒருவர் நட்புடன் பழகி குழந்தைக்கு தடுப்பூசிசெலுத்தி விட்டு வருவதாக கூறி குழந்தையை கடத்திச் சென்று விட்டார். இதுகுறித்து சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடி […]
திருச்சியில் சமுதாய வளைகாப்பு விழா-அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. இந்நிகழ்வில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழம் மற்றும் பொன்னான ஆயிரம் நாட்கள் குறித்த மடிப்பேடு […]
கஞ்சா-போதை மாத்திரை விற்ற 7 பேர் கைது- திருச்சி க்ரைம்
புகையிலை விற்ற 2 வாலிபர்கள் கைது திருச்சி, எடமலை பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் ஜங்ஷன் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை நடப்பதாக எடமலை பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி சந்தேகிக்கும் வகையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர் .இதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன் (39) என்பதும் அவர் அங்கு புகையிலை பொருட்கள் விற்றதும் தெரியவந்தது போலீசார் அவரை கைது செய்தனர் .அவரிடமிருந்து […]
திருச்சி ஜிஎச் பிரசவ வார்டில் ஆண் குழந்தை கடத்தல்..பரபரப்பு
திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனை யில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பிறந்து 4 நாட்கள் மட்டுமே ஆன ஆண் குழந்தையை மர்ம பெண் கடத்தி சென்றுள்ளார். திருச்சி மாவட்டம், துறையூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி சுகன்யா(23) இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுகன்யாவை பெற்றோர் சில தினங்களுக்கு முன்பு பிரசவத்துக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.கடந்த 11ஆம் […]
மாமியார் வீட்டில் மருமகன் தீக்குளித்து பலி… திருச்சி க்ரைம்
மாமியார் வீட்டில் மருமகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து சாவு திருச்சி பாலக்கரை மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் இளங்கோ (54. ) இவரது மனைவி சுஜாதா ( 51. ) கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்து காரணமாக இளங்கோ சிகிச்சை பெற்று வருகிறார் . இதனால் எந்த வேலைக்கும் செல்லவில்லை, சற்று மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் தேதி இளங்கோவின் செல்போன் செயல்பாடுகள் வேறொருவரால் கண்காணிக்கப்படுவதாக (ஹேக் செய்யப்பட்டது) என அவர் தன் […]
மாடு குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்- திருச்சியில் எஸ்எஸ்ஐ பலி
திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் இருதய பிரான்சிஸ் (67 ) ஓய்வு பெற்ற எஸ் எஸ் ஐ. இவர் இன்று காலை தனது டூவீலரில் திருச்சி காந்தி மார்க்கெட் செல்வதற்காக சென்றார். கொட்டப்பட்டு அகதிகள் முகாம் அருகே வந்தபோது குறுக்கே மாடு பாய்ந்தது.அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் அந்த மாடு மீது மோதியை தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு […]
கஞ்சா விற்ற மூதாட்டி கைது- திருச்சியில் பரபரப்பு
திருச்சி ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடப்ப எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்ற 64 வயது மூதாட்டியை பிடித்துவிசாரித்தனர். இதில் அவர் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதே போல்திருச்சி பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை அருகே புகையிலை பொருள்கள் விற்பதாக […]
திருச்சியில் ஆட்டோ பேட்டரியை திருடிய வாலிபர் கைது
திருச்சி கே.சாத்தனூர் கலிங்க நகர் 4 -வது தெருவை சேர்ந்த வர் பாலகிருஷ்ணன் (42). ஆட்டோ டிரைவர். இவர் கே சாத்தனூர் ரயில்வே கேட் அருகே தன் ஆட்டோவை நிறுத்தி விட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோவில் இருந்த 2 பேட்டரிகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகர் குற்ற பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரை சேர்ந்த சஞ்சய் (20 )என்ற […]
திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் கடையடைப்பு போராட்டம்
தமிழ்நாடு டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்ட நடவடிக்கை குழு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்ட குழு சார்பில் பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை டாஸ்மாக் பணியாளர்கள் 3 மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் 158 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கடைகள் இன்று அடைக்கப்பட்டது. தொமுச தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒரு சிலர் கடைகளை திறந்து இருந்தனர். திடீரென டாஸ்மாக் கடைகள் […]
மது குடிப்பதை கண்டித்த மனைவி- திருச்சியில் வாலிபர் தற்கொலை
திருச்சி துறையூர் அருகே உள்ள வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் குமார் (27) டிரைவர். இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. மதுவிற்கு அடிமையான குமார் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. மனைவி மது குடிப்பதை கண்டித்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான குமார். யாரும் எதிர்பாராத […]
திருச்சி-லால்குடியில் நாளை மின்தடை
திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம். 110/33-11 கி.வோ.பூவாளூர் துணை மின் நிலையத்திலிருந்து, மின்னோட்டம் பெறும் 11 KV பிண்ணவாசல் உயர் அழுத்தம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 10.02.2025 அன்று காலை 11.00 மணி முதல் 5.00 மணிவரையிலும் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடைக்குட்பட்ட பகுதிகளான- பூவாளூர் கடைவீதி, மாதானம் வடக்குத்தெரு, நடுத்தெரு பத்துகட்டுதெரு புதுக்குடி, மற்றும் ராஜா தெரு பெரியார் தெரு,திருவள்ளுவர் தெரு மற்றும் பூவாளூர் பைபாஸ் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது […]
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் ) திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி திருச்சி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் முன்னிலையில் அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி இன்று 09/02/2025 எடுத்துக் கொண்டனர். இவ் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் ஜூலியஸ் அற்புத ராயன்( வழித்தாள் வசூல்) இராமநாதன்( பணியாளர் மற்றும் சட்டம்,) மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி […]
திருச்சியில் மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணி
தென்னூர் ,சிவப்பிரகாசம் சாலையிலுள்ள பாலம் சர்வீஸ் சாலை (உழவர்சந்தை செல்லும் வழி) -ல் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மேலாக மழைநீர் வடிகால் பணி துவங்கப்பட்டு கிடப்பில் உள்ளது.மழைநீர் வடிகாலின் பக்கவாட்டில் உள்ள மண் சரிந்து கொண்டே இருப்பதால் வடிகால் அகலமாகிக் கொண்டே செல்கிறது. இதனால் அப்பகுதிவாசிகள் வடிகாலில் தவறி விழுதல் போன்ற சூழலும் மேலும் சிரமப்பட்டும் வருகிறார்கள். மாநகராட்சியில் புகாரளித்தும் இதே நிலையே நீடிக்கிறது.எனவே இடர்பாடுகளை கருத்தில் கொண்டு கிடப்பில் போடப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகளை […]
கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய கார் – 4 பேர் காயம்
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (25). இவர் இன்று அதிகாலை தனது உறவினர்களான சங்கர் (22), தமிழ்ச்செல்வன் (29) மற்றும் ஹரிஷ் (19) ஆகியோருடன் காரில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார். கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, இன்று காலை சுமார் 7:30 மணியளவில் அனைவரும் மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் முசிறி சந்தப்பாளையம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநர் தினேஷின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. […]
திருச்சியில் 10ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?..
திருச்சி, மெயின்கார்டுகேட் 33 கி.வோ., மற்றும் கம்பரசம்பேட்டை 110 கி.வோ துணைமின் நிலையங்களில் 10.02.2026 (செவ்வாய் கிழமை) காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பகுதிகளான மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கரூர் பையாஸ் ரோடு பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், […]
திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்
கடந்த 04.02.2016 அன்றைய தேதியில் தலைமைக் கழகத்தில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வளர்ச்சி மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலை சிறப்புடன் அணுகுவது குறித்த கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாவட்ட கழக, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உடனான கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் […]
காந்தி பெயர் நீக்கம்- திருச்சியில் 7ம் தேதி காங்கிரஸ் பேரணி
மகாத்மா காந்தி பெயரில் உள்ள 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மகாத்மா பேரிலேயே நடைமுறைப்படுத்த வலியுறுத்தி காங்கிரசர் திருச்சியில் பேரணி நடைபெற உள்ளது – திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ் பேட்டி திருச்சி காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் 2004ல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக சோனியா காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் ஊரக வேலை […]
இன்ஸ்டாகிராம் பழக்கம்: 13 வயது சிறுமியை மணந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி மாயமானதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அந்த சிறுமியை திருவண்ணாமலையை சேர்ந்த தாமோதரன் என்ற வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்து சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.இதையடுத்து தாமோதரனை போக்சோ வழக்கில் கைது செய்த போலீசார், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
திருச்சியில் அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற நடிகர் போஸ் வெங்கட்
திராவிட முன்னேற்றக் கழகத்தின், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் துணைத் தலைவரும், திரைப்பட நடிகருமான போஸ் வெங்கட் தனது பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸை திருச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். அப்போது புகைப்படம் ஒன்றை பரிசளித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றுக் கொண்டார்
திருச்சியில் பல்கலை நகரம்-எம்பி துரை வைகோ கோரிக்கை
திருச்சி மாநகரத்தில் பல்கலைக்கழக நகரம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் எம்பி துரை வைகோ கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறியதாவது.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். இந்தச் சந்திப்பின்போது, 2026 ஒன்றிய பட்ஜெட்டில் நாட்டில் 5 இடங்களில் பல்கலைக்கழக நகரங்கள் (University Township) அமைக்கபடும் என்கிற திட்டத்தில் நாட்டின் மிகச் சிறந்த பல கல்வி நிலையங்களை தன்னகத்தே கொண்டுள்ள, தமிழகத்தின் கல்வி மையமாக (Educational Hub) […]
திருச்சி NIT-யில் வேலை வாய்ப்பு
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT) ஒரு மருந்தாளுநர் காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://nittnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை “தி ரெஜிஸ்டர், தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சி – 620015” என்ற முகவரிக்கு வரும் 14-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாலிபருக்கு கத்தி குத்து.. திருச்சியில் 4 பேர் மீது வழக்கு
திருச்சி, ஸ்ரீரங்கம், திருவளர்ச்சோலை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கரண் (வயது 24). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனி பாதயாத்திரை முடிந்து பிரசாதம் வழங்கும் நிகழ்வில் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் கரணை கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து கரணின் சகோதரர்கள் கமலேஷ், மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து பிரபாகரனை அடித்து உடைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.ஏற்கனவே அப்பகுதியில் இரு சமூகத்தினருக்கு இடையே […]
சென்னை-திருச்சி-மதுரைக்கு விமான சேவை அதிகரிப்பு..
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் மதுரை இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்களை இயக்கி வந்தது. திருச்சிக்கு சென்னையில் இருந்து 6 விமானங்களும், திருச்சியிலிருந்து சென்னைக்கு 6 விமானங்களும் என மொத்தம் 12 சேவைகள் செயல்பட்டன. அதேபோல், சென்னையில் இருந்து மதுரைக்கு 8 விமானங்களும், மதுரையிலிருந்து சென்னைக்கு 8 விமானங்களும் என 16 ஏ.டி.ஆர். விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 15-ந்தேதி முதல் திருச்சி மற்றும் […]
திருச்சியில் நாதகவின் ”பிரம்மாண்ட மாநாடு” -பூமி பூஜை
வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கிற நாம் தமிழர் கட்சியின் “மாற்றத்திற்கான மக்களின் மாநாடு” நிகழ்விற்கான பூமி பூசை நிகழ்வு இன்று காலை 8 மணி அளவில் மாநாட்டு திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் , மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர், மாநில ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர் .ஜல்லிக்கட்டு ராஜேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
10ம் தேதி வேளாண் பயிற்சி- திருச்சி கலெக்டர் அறிவிப்பு
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், கிராமப்புற இளைஞர்களுக்கான “வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்க பயிற்சி” வரும் பிப்.10 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை திருச்சியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் திருச்சி வ.உ.சி சாலையில் உள்ள இயந்திர கலப்பை பணிமனையில் நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் 5ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா?..
திருச்சி தென்னூர் துணை மின் நிலையம் மற்றும் வரகனேரி துணை மின் நிலையங்களில் 05.02.2026 (வியாழக்கிழமை) காலை 09.45 மணி முதல் மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 110/33-11 கி.வோ. தென்னூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர்பையாஸ்ரோடு, தேவர்காலணி, தென்னுர்ஹைரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் புதுமாரியம்மன் கோவில்தெரு, சாஸ்திரிரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர்அக்ரஹாரம், வடவூர், […]
திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து… 2 பேர் கைது
திருச்சி காஜா மலைப்பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (58)ஆட்டோ டிரைவர் இவருக்கும். மன்னார்புரம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி ரா ஜேஷ் கண்ணன் (34) மற்றும் பிரகாஷ் (21) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் நேற்று ரத்தினம் மன்னார்புரம் ஜங்ஷன் அருகே ஆட்டோ பட்டறையில் தன் ஆட்டோவிற்கு பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ராஜேஷ் கண்ணன் மற்றும் பிரகாஷ் ஆகிய இரண்டு பேரும் ரத்தினத்திடம் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தியுள்ளனர் காயமடைந்த ரத்தினம் திருச்சி […]
திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருததென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த சதாம்உசேன் (26) என்பவரை கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதே போன்று எடமலைப்பட்டிபுதூரில் குட்டி மலை ரோடு பகுதியில் அனுமதி இன்றி மது பெற்ற கிராபட்டியை சேர்ந்த வேளாங் கன்னி (40) எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் ( 42) ஆகிய இருவரை போலீசார் கைது செய்துஅவர்களிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். […]
திருச்சி-28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை
திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 01.04.2023 முதல் 31.12.2025 வரையில் 28,668 தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 476 நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலி- திருச்சியில் பரிதாபம்
திருச்சி, உறையூர் தாத்தையாங்கார்ரோடு மருதப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (65). இவர் நேற்று மாலைதிருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சாலையில் நடந்து கொண்டு இருந்தார். அப்பொழுது அவரை பின் தொடர்ந்து வந்த மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்ற அரசு பேருந்து எதிர்பாராதமாக ராஜலட்சுமி மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி ராஜலட்சுமி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்டோன்மென்ட் […]
கேட்பாரற்று நின்ற 18 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
திருச்சி மாநகரம் உறையூர் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு போலீசார் நேற்று (ஜனவரி 29) தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, உறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நாட்களாக பொது இடங்களில் கேட்பாரற்று நின்றிருந்த 18 இருசக்கர வாகனங்களை போலீசார் கண்டறிந்தனர். அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தியும் உரிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அந்த 18 இருசக்கர வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த உறையூர் […]
புகையிலை விற்ற 2 பேர் கைது
திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலைப் பகுதியில் புகையிலை விற்றுக் கொண்டிருந்த பிராட்டியூர் மிஷன் கோவில் தெருவைச் சேர்ந்த சச்சின் மார்க்கோனி (எ) அஜய் (27) மற்றும் காவிரிநகர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ஹர்பத்கான் (24) ஆகிய […]
அதிமுக மாஜி ஓட்டல் திறப்பு- மின்சாரம் தாக்கி திருச்சி மாணவர் பலி
திருச்சி மாவட்டம், முசிறியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவிற்குச் சொந்தமான புதிய ஹோட்டல் திறப்பு விழா பணிகளின் போது, மின்சாரம் தாக்கி விழுந்த ஐ.டி.ஐ மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் முசிறியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் புதிதாக ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில் […]
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் எம்பி கனிமொழியிடம் கோரிக்கை மனு
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் எம்.கே.எம் காதர் மைதீன் தலைமையில் செயலாளர் டி.கந்தசாமி,பொருளாளர் ஜி. வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் கூட்டமைப்பு நிர்வாகிகள்,வியாபாரிகள் திருச்சியில் நடந்த திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு கனிமொழி எம்.பி யை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் வரைபடம் வெளியிடப்பட வேண்டும்.14.11.2025 அன்று ஆட்சியர் சரவணன் எங்களிடம் எழுத்துப்பூர்வமாக கடைகளும், அதன் அளவுகளும் கேட்டதன் அடிப்படையில், […]
திருச்சியில் விரைவில் பிரம்மாண்ட மாநாடு…முதல்வர் பேச்சு
திருச்சி நகர் மன்ற முன்னாள் தலைவர் மா. பாலகிருஷ்ணனின் பேரனும், முன்னாள் எம்.எல்.ஏ. பரணிக்குமார் பாலகிருஷ்ணன் -மகாலட்சுமி பரணிக்குமார் தம்பதியரின் மகனுமான டாக்டர் ஆதித்யா பாலா பரணி குமாருக்கும், சென்னை கே. மோகன்- எம். சாந்தகுமாரி மகள் டாக்டர் எம். மீனாட்சிக்கும் திருமண விழா இன்று (புதன்கிழமை) திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் , துணைவியார் துர்கா ஸ்டாலினுடன் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாலி […]
திருச்சி அம்ரித் பாரத் ரெயிலின் முதல் சேவை துவங்கியது
தமிழகம்-மேற்கு வங்காளம் இடையே 3 அம்ரித் பாரத் ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, தாம்பரம்-சந்திரகாச்சி, திருச்சி-நியூ நியூஜல்பைகுரி, நாகர்கோவில்-நியூஜல்பைகுரி ஆகிய அம்ரித் பாரத் ரெயில்கள் சேவை தொடங்கி உள்ளது.அந்த வகையில் நியூஜல்பைகுரி – திருச்சி அம்ரித் பாரத் ரெயிலின் முதல் சேவை திருச்சியில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை தொடங்கியது. மறுமார்க்கத்தில் நியூ ஜல்பைகுரியில் இருந்து வரும் 30-ந்தேதி முதல் சேவை துவங்க உள்ளது.அதன்படி திருச்சியில் இருந்து இன்று காலை புறப்பட்ட அம்ரித் பாரத் […]
ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.2 கோடியே 20லட்சம் காணிக்கை
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம் அந்த பக்தர்கள் கோவிலில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கையாக தங்கம் வெள்ளி மற்றும் ரொக்கத்தை உண்டியலில் செலுத்துவது வழக்கம் அவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகள் மாதம் தோறும் எண்ணப்படுவது வழக்கம் அதன்படி இன்று மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் கருடாழ்வார் மண்டபத்தில் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக என்ன பட்டது… கடந்த டிசம்பர் […]
தமிழ்நாட்டின் 2வது தலைநகரம் திருச்சி? கனிமொழியிடம் நேரு, மகேஸ் மனு
தமிழகத்தின் நிர்வாகச் சுமையை குறைக்கும் நோக்கில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் M. G. எம்.ஜி.ஆர் தனது ஆட்சிக் காலத்திலேயே திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு எண்ணத்தை முன் வைத்ததாக அரசியல் வட்டாரங்களில் குறிப்பிடப்படுகிறது. சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் ஒரே நகரத்தில் குவியும் நிர்வாக அழுத்தங்களை கருத்தில் கொண்டு, அரசுத் துறை செயல்பாடுகளைப் பகிர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பதே அந்த யோசனையின் மையமாக இருந்தது. […]
திருச்சியில் குடிநீர் வழங்கும் திட்டம்-அமைச்சர் மகேஸ் பார்வை
திருச்சி கம்பரசம்பேட்டை நீர்உந்து நிலையத்தில் ஆய்வு – பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தினை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. புதிதாக இணைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்துதல் திருச்சி மாநகராட்சியுடன் 2011ல் சேர்க்கப்பட்ட திருவெறும்பூர் பேரூராட்சி, பாப்பாகுறிச்சி ஊராட்சி, எல்லக்குடி ஊராட்சி, கீழகல்கண்டார் கோட்டை ஊராட்சி மற்றும் ஆலத்தூர் ஊராட்சி, ஆகிய பகுதிகள் அடங்கிய 5 பழைய வார்டு (61, 62, 63, 64 மற்றும் 65) பகுதிவாழ் பொதுமக்களுக்கு CPHEEOன் […]
திருச்சி-பாலக்காடு ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்
திருச்சி-பாலக்காடு ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்காவிரி டெல்டா பயணிகள் உபயோகிப்பாளர் கூட்டத்தில் தீர்மானம் தஞ்சாவூர், ஜன.27-காவிரி டெல்டா ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் அய்யானாபுரம் நடராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் வரவேற்று பேசினார். துணை தலைவர்கள் பன்னீர்செல்வம், கண்ணன், ராம.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புரவலர் தென்னை விஞ்ஞானி வா.செ.செல்வம் சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில், திருச்சி-ஹவுரா விரைவு ரெயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க […]
திருச்சி பாலக்கரை ரயில்வே சுரங்க பாதை சீர் செய்யும் பணி தீவிரம்
திருச்சி பாலக்கரை ரயில்வே சுரங்கப் பாதையில் மேல் அமைக்கப்பட்டு இருந்த தலா சுமார் 30ஆயிரம் கிலோ எடையுள்ள இரண்டு பழைய இருப்புப் பாதைகளையும் அகற்றிவிட்டு, அரக்கோணத்தில் தயாரிக்கப்பட்டு திருச்சிக்கு கொண்டுவரப்பட்ட தலா 40,000 கிலோ எடையுள்ள புதிய இருப்பு பாதைகளை ரயில்வே துறையில் பணியாற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்களும் ஒப்பந்த பணியாளர்களும், ராட்சதா கிரேன்களின் உதவியோடு நிறுவினார்கள்.புதிய இருப்புப் பாதையில், ஸ்டில் கர்டர் என அழைக்கப்படும் இரும்பில் செய்யப்பட்ட குறுக்கு தூண்கள், இருப்பு பாதை தண்டவாளங்கள், இரும்பு […]
உக்ரைன் போர்- குண்டடிபட்ட சிதம்பரம் மருத்துவ மாணவர் மீட்பு.. திருச்சி எம்பி துரை வைகோ
திருச்சியில் துரை வைகோ எம்பி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-சிதம்பரத்தை சேர்ந்த கிஷோர் சரவணன் என்ற மாணவர், மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்றார்.அங்கே ஏஜென்சிகளின் தவறான வழிநடத்தலில், வழக்கில் சிக்க வைக்கப்பட்டு ரஷ்யா குடியிருப்பு பெற்று தருவதாக ரஷ்யா -உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டு குண்டடி பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரது பெற்றோர்கள் மகனை மீட்க என்னிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். நான் டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் மற்றும் 15 கட்சிகளை […]
சென்னை ஏர்போட்டில் மின் கசிவு..திடீர் தீ விபத்தால் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தைத் தொடர்ந்து ஏர்லைன்ஸ் ஊழியர்கள், பயணிகள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகளில் 3 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சிறிது நேரம் விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தீவிபத்தால் ஏற்பட்ட புகை சர்வதேச விமானங்கள் […]
மனைவி-மகளை தாக்கிய கணவன் கைது… திருச்சி க்ரைம்
மனைவி, மகளை தாக்கிய கணவன் கைது திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (26). இவரது மனைவி ஜனனி (23. ) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். உதயகுமார் அடிக்கடி ஜனனியிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ந்தேதி ஜனனி உறையூர் பாண்டமங்கல புது வெள்ளாளர் தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த உதயகுமார் ஜனனியை தகாத வார்த்தைகளால் திட்டி மனைவி, மகளை தாக்கியுள்ளார். […]
திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் சிறை உள்ளது. இதில் வெளிநாடுகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் சிறை முகாமில் செல்போன் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 25ம் தேதி திருச்சி மாநகர போலீசார் திடீரென்று சிறை முகாம் வளாகத்தில் சோதனை நடத்தினர். அப்பொழுது அங்குள்ள அறைகளில் போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது முகாம் சிறை வளாகத்தில் இருந்த 12 […]
திருச்சி ஏர்போர்ட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெறும் வெல்லும் பெண்கள் திமுக மகளிர் அணி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமான மூலம் புறப்பட்டு இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார். தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இ ன்று மாலை நடைபெறும் மகளிர் அணி மாநாட்டில் பங்கே இருக்கிறார். திருச்சி […]
“அதிமுக இன்று பாஜகவின் பிடிக்குள் சிக்கியுள்ளது” – திருச்சியில் தொல். திருமாவளவன் ஆவேசம்!
சிதம்பரத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், மத்தியில் ஆளும் மோடி அரசு இந்தியாவைத் தீவிரமாக ‘இந்தி மயமாக்’குவதில் குறியாக உள்ளது என்று குற்றம் சாட்டினார். ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்கிற கொள்கையை முன்னிறுத்தி மோடி அரசு செயல்படுவது […]
திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது
திருச்சியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கே.கே. நகர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் காஜாமலை காலனி நீர்த்தேக்க தொட்டி அருகே சோதனை நடத்தியபோது, போதை மாத்திரை விற்ற தீபக் (28) என்பவரை கைது செய்து 13 மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர். இதேபோல், கோட்டை போலீசார் ஓடத்துறை பாலம் அருகே நடத்திய சோதனையில், மேல சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (24) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 […]
திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செசன்ஸ் கோர்ட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட செல்வ நகர் பகுதியில் கஞ்சா விற்ற துவாக்குடி பகுதியைச் சேர்ந்த இளவரசன் (20) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதேபோல், அரியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கணேஷ்குமார் (56) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மாநகர் அதிமுகவில் அதிரடி மாற்றம்: 65 வார்டுகள் மறுசீரமைப்பு – புதிய நிர்வாகிகளை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் உள்ள 65 வார்டுகள் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டு புதிதாக பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட செயலாளர்கள், எம்ஜிஆர் மன்றம்,எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள், ஜெயலலிதா பேரவை,சிறுபான்மை இலக்கிய அணி நிர்வாகிகளைபுதிதாக நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.அதன்படி திருச்சி மாநகர் மாவட்டக் கழக நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் வட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு, கீழ்க்கண்டவாறு பகுதிகளையும், பகுதிகளுக்கு உட்பட்ட வட்டங்களையும் உள்ளடக்கி செயல்படும். […]
டூவீலர் திருட்டு-கஞ்சா விற்ற 2 பேர் கைது.. திருச்சி க்ரைம்
டூவீலர் திருட்டு திருச்சி கருமண்டபம் ஆர் எம் எஸ் காலனி சேர்ந்தவர் முல்லை செல்வன் (40. ) இவர் கடந்த 19-ந்தேதி காந்தி மார்க்கெட் காய்கறிகள் கமிஷன் மண்டியில் தனது டூவீலரை நிறுத்தியுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது டூவீலரை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். கஞ்சா விற்ற […]
திருச்சியில் இரும்பு கடை வியாபாரியை தாக்கிய ரவுடி கைது
திருச்சி காந்தி மார்க்கெட் கீரக்கடை பஜார் தெருவை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் போஸ்கோ (55). இவர் அப்பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 23 ந்தேதி இவர் கடையில் இருந்த போது அங்கு தெற்கு தாராநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்த ரவுடி ராஜீவ் காந்தி (40 ) என்பவர் வந்தார். அவர் அலெக்சாண்டர் போஸ்கோவிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுக்கவே அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சுத்தியலால் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு தலையில் […]
77வது குடியரசு தின விழா- திருச்சி ரயில்வே ஸ்டேசனில் சோதனை
திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ராஜன் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தியின் மேற்பார்வையில் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி ரயில் நிலைய நடைமேடை, பார்சல் அலுவலகம், ரயில் பயணிகளின் உடைமைகளை இன்று 24.1.2026 RPF காவல் ஆளினார்களோடு இணைந்து திருச்சி ரயில் நிலைய நடைமேடை அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய் பிரிவு காவலர்களோடு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு
குடியரசு தின விழா கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது இன்று (ஜன.24) இரவு 11:50 மணிக்கு, 23 பெட்டிகளுடன் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம், திருச்சி வழியாக நாளை (ஜன.25) காலை 11:40 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சி திமுக மாவட்ட செயலாளர் அறிக்கை வெளியீடு
திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு, திருச்சி சாலை ரோட்டில் இருந்து தென்னூர் மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் வரை நாளை (ஜன.25) மாலை ஊர்வலம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்வில் திமுகவினர் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து பணியாளர்கள் திருச்சியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிமிடெட் ) திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினம் 25/01/2026 அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று 23/01/2026 தேசிய வாக்காளர் தின உறுதிமொழி துணை மேலாளர்( தொழில்நுட்பம் ) எம்.எஸ்.ஜி. புகழேந்தி ராஜ் அவர்கள், முன்னிலையில் அனைவரும் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இவ் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் சுரேஷ் குமார்( வணிகம் ) ராஜேந்திரன் ( கட்டிடம்) மற்றும் போக்குவரத்து […]
திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது…
திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டிப்பட்டி பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இரண்டு வாலிபர் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் இதையடுத்து மற்றொரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்த போது அவர் கையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை […]
திருச்சி-ரியல் எஸ்டேட் புரோக்கரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
திருச்சி கருமண்டபம் வசந்த நகர் நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (52. )ரியல் எஸ்டேட் புரோக்கர் . இவரது மைத்துனர் கேகே நகர் பாரி நகரை சேர்ந்த முத்தமிழ் குமரன் (வயது 36) என்ற ரவுடிக்கும் பணம் ,கொடுக்கல் வாங்கலில் முன் விரோதம் இருந்தது இந்நிலையில் முத்தமிழ்குமரன் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிச 24ந் தேதி முத்தமிழ் குமரனின் தூண்டுதலில் பேரில் முத்தமிழ் […]
கஞ்சா விற்ற 2 ரவுடிகள் கைது..திருச்சி க்ரைம்
கஞ்சா விற்ற 2 ரவுடிகள் உட்பட 3 பேர் கைது திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் கஞ்சா,போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தாராநல்லூர் பாலம் அருகே கஞ்சா விற்ற எடத்தெரு பிள்ளைமாநகர் பகுதியை சேர்ந்த ரவுடி ஜான் (26 )மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஜான் அக்பர் கிளின்டன் 25) மற்றும் வரகனேரி சந்தானபுரம் சின்ன ஓடத்தெரு பகுதியை சேர்ந்த இம்ரான் கான் (20,) ஆகிய […]
திமுகவில் இணைவதாக வௌியான தகவல் தவறு-வெல்லமண்டி நடராஜன்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் இன்று தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் இந்த தகவலை திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மறுத்துள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் வெல்லமட்டி நடராஜன் கூறியதாவது:-சென்னையில் தி.மு.க.வில் இன்று நான் இணைவதாக வந்த தகவல் தவறானது.நான் சென்னை செல்லவில்லை. திருச்சியில் மகன், மருமகள், பேரக் குழந்தைகளுடன் இருக்கிறேன். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையை […]
திருச்சி மாநகர காங்., கமிட்டி தலைவராக எல்.ரெக்ஸ் பதவி ஏற்பு
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எல். ரெக்ஸ் இன்று அருணாச்சலம் மன்றத்தில் நடந்த விழாவில் நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் பதவி ஏற்றுக்கொண்டார்.நிர்வாகிகள் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.முன்னதாக மீண்டும் மாவட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்ட எல். ரெக்ஸ் திருச்சி சேவா சங்கம் பள்ளி அருகில் உள்ள நேரு சிலை மத்திய பஸ் நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் சத்திரம் பஸ்லயங்களில் உள்ள காமராஜர் சிலை ரயில் நிலையம் அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலை […]
திருச்சியில் வடமாநில கள்ள நோட்டு கும்பல் கைது
நேற்று இரவு திருச்சி துவாக்குடி கருப்பு கோவில் அருகே செயல்படும் பெட்ரோல் பங்கில்மகாராஷ்டிரா எண்கொண்ட காரில் வந்த இருவர் காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு கள்ள நோட்டை கொடுத்துவிட்டு சென்றனர். இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துவாக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் மஞ்சத்திடல் செக்போஸ்ட்டில்வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர்.அதில் 40 பண்டல்களில் 200 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 8.86 லட்சம் ரூபாயாகும். […]
திருச்சியில் மைத்துனரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள கொடியாலம் காந்திநகர் மேற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (20). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விக்கி (26 )என்பவரது தங்கைக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் திருமணமான ரெண்டு மாதத்தில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அபிஷேக் தனது மனைவியை பிரிந்ததாக தெரிகிறது. இதனால் விக்கிக்கும் அபிஷேகுக்கும் இடையே முன் விரோதம் இருந்தது.இதனால் ஆத்திரமடைந்த விக்கி தனது வீட்டின் முன்பு நின்று […]
நிறைமாத கர்ப்பிணி மீது கொடூர தாக்குதல்-திருச்சியில் பரபரப்பு
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே நிலத்தகராறு காரணமாக, மருத்துவமனை வாசலில் நின்று கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணி சத்தியாவை தாக்கிய ஹேமா மற்றும் அவரது 16 வயது மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் தாக்குதலுக்குள்ளான கர்ப்பினி நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி நவலூரில் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த 600 காளைகள்
திருச்சி நவலூர் குட்டப்பட்டில் விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த 600 காளைகள் – பரிசுகளை அள்ளிய வீரர்கள் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார் திருச்சி அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில், தைப்பொங்கலை முன்னிட்டு இன்று பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாகத் தொடங்கியது. ஆண்டுதோறும் தை மாதம் 5-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டும் அரசின் உரிய அனுமதியுடன் போட்டிகள் மிக உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு […]
திருச்சியில் ரேஷன் கடை மேற்கூரை இடிந்தது..பரபரப்பு
திருச்சி மாவட்டத்தில் இரவு பகல் என இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது . சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது நேற்று காலையிலிருந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மாலையில் திருச்சி மாநகரில் கனமழை கொட்டி தீர்த்தது. மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை திருச்சி ஜங்ஷன் பகுதியில் […]
போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது
திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சஞ்சீவி நகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரோஷன் (22, )என்பவர் அதே பகுதியில் போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 35 போதை மாத்திரைகள் 2 ஊசிகள் 2 சலைன் வாட்டர் பாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
போதை மறுவாழ்வு மையத்திற்கு பூட்டு… 7 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு
திருச்சி அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவரை நிர்வாகத்தினர் தாக்கியதில் உயிரிழந்தார். இதுதொடர்பாக மையத்தின் நிர்வாக இயக்குநர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம், வடுவூர் தெற்கு வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமார் (50). இவர் சிங்கப்பூரில் பொறியியல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது இளைய சகோதரர் விஜயகுமார் (48). இவருக்கு கிருஷ்ணவேணி என்பவருடன் கடந்த 2011-ம் ஆண்டு திருமணமாகி, இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் பம்மலில் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே […]
அதிமுக நிர்வாகியின் பழைய வழக்கு.. திருச்சி போலீசின் அலட்சியம்
திருச்சி கருமண்டபம் பகுதியில் 2014 ஆம் ஆண்டு அங்கன்வாடி மையத்திலிருந்து ஒரு பெண் அடிக்கடி சத்துமாவு போன்ற பொருட்களை திருடி செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதி பொது மக்கள் அவரை கையும் களவுமாக பிடித்து, அப்போதைய அதிமுக கோட்டத் தலைவர் ஞானசேகருக்கு தகவல் அளித்தனர். பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது கண்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேசனில் எஸ்எஸ்ஐ பணியாற்றிய ராக்கெட் ராஜேந்திரன் என்ற போலீசாரின் மனைவிதான் அந்த தொடர் திருட்டில் ஈடுபட்டது என தெரிய வந்தது. […]
திருச்சியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்ற ரவுடி உள்ளிட்ட 3 பேர் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று கீரைக்கடை பஜார் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, அவர் திருச்சி எடத்தெரு பிள்ளைமா நகரைச் சேர்ந்த ரவுடி அன்சாரி (28) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளைப் போலீசார் […]
திருச்சியில் குட்கா மற்றும் புகையிலை விற்ற 2 வாலிபர்கள் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.சி. நகர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்யா (20). இவர் பெரிய மிளகுபாறை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகச் செசன்ஸ் கோர்ட் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சத்யாவை கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அரியமங்கலத்தில் […]
திருச்சி மத்திய சிறையில் பரபரப்பு: சிறை வார்டனைத் தாக்கிய ஆயுள் தண்டனை கைதி – போலீசார் வழக்குப்பதிவு
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வடமதுரை குப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (26). இவர் போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று காலை, சிறை வார்டன் கவியரசன் பணியில் இருந்தபோது, கைதி ராஜ்குமார் பிளாக் எண் 10-க்கு முன்பாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த வார்டன் கவியரசன், பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளைக் கருதி ராஜ்குமாரை உள்ளே சென்று சாப்பிடுமாறு […]
டிராக்டர் மற்றும் நகையைப் பறித்த அதிமுக பிரமுகர்: திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது, அதிமுக பிரமுகரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் புலிவலம் அருகே உள்ள வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அதிமுக பிரமுகராக உள்ளார். இவர் தனலட்சுமியிடமிருந்த டிராக்டரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, அதற்கான வாடகைப் பணத்தைத் தருவதாகக் கூறியுள்ளார். மேலும், தனலட்சுமியிடம் இருந்த $2 \frac{1}{2}$ பவுன் நகையையும் அவசரத் […]
போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவிலிருந்து வந்த பயணி திருச்சியில் கைது
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்குப் பயணிகள் வந்தடைந்தனர். அவர்களை இமிகிரேசன் அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த பழனிவேலு (51) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், பழனிவேலு போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை இமிகிரேசன் அதிகாரிகள் திருச்சி ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பழனிவேலுவை […]
திருச்சி அருகே கிணற்றில் பிணமாக கிடந்த விசிக நிர்வாகி மகன்…விசிக எம்.எல்.ஏ தலைமையில் அரசு மருத்துவமனை முற்றுகை
கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா ரெட்டாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் எம்.ஜி.ஆர் – அலமேலு தம்பதியினரின் மகன் திருவேங்கடன் (25). இவர் திருச்சி பிராட்டியூர் அடுத்துள்ள புங்கனூர் கிராமம் மலைப்பட்டி சந்திர நகரில் நண்பர்களுடன் தங்கியிருந்து, தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமியில் அரசுப் பணிக்கான பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி அறையிலிருந்து வெளியே சென்ற திருவேங்கடன் மீண்டும் திரும்பவில்லை. நண்பர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், […]
திருச்சியில் போதை மாத்திரை வேட்டை: பெண் உட்பட 2 பேர் கைது
திருச்சி பாலக்கரை பகுதியில் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று போலீசார் பாலக்கரை பெல்ஸ் கிரௌண்ட் (Bells Ground) பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாலக்கரை காஜாபேட்டை பசுமடம் பகுதியைச் சேர்ந்த பரகத் நிஷா (41) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைத்திருந்த 16 போதை மாத்திரை ஊசிகளை […]
திருச்சியில் தடையற்ற புகையிலை விற்பனை: பெரம்பலூர் வாலிபர் கைது
திருச்சி கருமண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபரைப் போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த புகையிலையைப் பறிமுதல் செய்தனர். திருச்சி செசன் கோர்ட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாகப் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருச்சி கருமண்டபம் ஜே.ஆர்.எஸ் நகர் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து போலீசார் சோதனை செய்தனர். […]
திருச்சியில் ஆட்டோ டிரைவரின் செல்போன் திருட்டு: பெங்களூரு வாலிபர் கைது
திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் (57). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று தனது ஆட்டோவை திருச்சி எம்.ஜி.ஆர் சிலை அருகே நிறுத்தியிருந்தார். அப்போது தனது மொபைல் போனை ஆட்டோவிலேயே வைத்துவிட்டு, சிறிது தூரம் தள்ளிச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டோவில் இருந்த செல்போனைத் திருடிக்கொண்டு தப்பியோடினார். செல்போன் திருடப்பட்டது குறித்து முகமது உசேன் செசன் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் […]
சர்வர் பிரச்சினை…பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியில் தொடரும் தாமதம்… பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருப்பு
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறும் ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு. வேட்டி-சேலை யுடன் ரூ.3,000 ரொக்கம் ஆகி யவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.அதன்படி,தமிழக முழுவதும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி, ரேசன் கடைகளில் நேற்று காலை 10 […]
வைகோவின் சமத்துவ நடைபயணம் நிறைவு விழா-எம்பிதுரை வைகோ அழைப்பு
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர், முதன்மை செயலாளர் மதிமுக துரை வைகோ வைகோவின் நிறைவு விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது… அழைப்பு மடல் -தலைவரை உயிராய் நேசிக்கும் கழகத் தோழர்களே, வணக்கம்! தமிழர் நலனுக்காக கால் கடுக்க, உடல் வலிக்க சமத்துவ நடைபயணம் மேற்கொண்டு வரும் தலைவர் வைகோ அவர்களை வரவேற்று, அவரது தியாகத்திற்கு நன்றி செலுத்திட மதுரையில் 12.01.2026 அன்று நடைபெற உள்ள நடைபயண நிறைவு விழாவில் பங்கேற்க வாரீர்! இயக்கத் தந்தை, தலைவர் வைகோ […]
புது ஜல்பைகுரி- திருச்சி ரயில் சேவை- எம்பி துரை வைகோ நன்றி
அம்ரித் பாரத் விரைவு இரயில் திட்டத்தின் கீழ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, புது ஜல்பைகுரி – திருச்சி இரயில் சேவைக்கு மனமார்ந்த நன்றி! வடகிழக்கு இந்தியாவின் புது ஜல்பைகுரியிலிருந்து தென்னிந்தியாவின் திருச்சி வரை இணைக்கும் இந்த வாராந்திர இரயில் சேவை பயணிகளுக்கு விரைவான பயண வசதியை வழங்குகிறது. இந்த இரயில், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம் ஜங்ஷன், செங்கல்பட்டு ஜங்ஷன், தாம்பரம், சென்னை எழும்பூர் மார்க்கமாக செல்கிறது. இந்த புதிய இரயில் சேவை வடகிழக்கு மற்றும் […]
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு… திருச்சி க்ரைம்
பஸ்சில் பெண்ணிடம் ரூ. 2 1/2 பவுன் தங்க நகை திருட்டு..திருச்சி ஸ்ரீரங்கம் தங்கய்யன் தெருவை சேர்ந்தவர் கயல்விழி 45. இவர் பாலக்கரையில் இருந்து நகர பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் வரை சென்றார். பின்னர் சத்திரம் பேருந்து நிலையத்தில் அவர் இறங்கிய போது அவருக்கு தன் கை பை திருட்டு போனது தெரியவந்தது. அதில் ரூ.30,000 பணம் ஒன்றரை பவுன் மதிப்புள்ள தங்க தோடுகள் அரை கிராம் மதிப்புள்ள ஒரு மோதிரம் அரை கிராம் […]
திருச்சியில் காத்திருப்பு போராட்டம்..
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள், நகர்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான களப்பணியளர்கள் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே காலவரையற்ற தொடர் போராட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு- அமைச்சர் மகேஸ்
திருச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணியினை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாட 2 கோடியே 22 லட்சத்து 91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் […]
திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இலவச வேட்டி சேலை மற்றும் முழுக் கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3000 ரொக்கப்பணம், பொங்கல் பரிசு தொகுப்பாக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்வில் திமுக வட்ட செயலாளர் செல்வராஜ், அருண்நேரு, காங்கிரஸ் நிர்வாகிகள் பூபாலன், […]
திருச்சியில் அதிரடி: பால் பண்ணை – காந்தி மார்க்கெட் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
திருச்சி மாநகராட்சியின் முக்கியப் பகுதியான பால் பண்ணை முதல் காந்தி மார்க்கெட் வரையிலான சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். திருச்சி – தஞ்சாவூர் சாலையை இணைக்கும் முக்கியப் பகுதியாக பால் பண்ணை சாலை உள்ளது. இந்தப் பகுதியில் சாலையின் இருபுறமும் உள்ள கடைகளின் மேற்கூரைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் நீட்டிக்கப்பட்டிருந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுந்து வந்தன. இதனைத் தொடர்ந்து, இன்று […]
திருச்சியில் பெண் தொழிலதிபரிடம் ரூ.45 லட்சம் மோசடி
திருச்சியில் ஹெல்த் கேர் நிறுவனம் நடத்தி வரும் பெண்ணிடம், தொழில் கூட்டாளியாக இருந்த நபர் ரூ.45 லட்சம் பணத்தை ஏமாற்றிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த 2011-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் தீபாவளி சீட்டு போட்டு பணம் செலுத்தியுள்ளார். ஆனால், அந்தப் பணத்தை பிரபு திருப்பித் தரவில்லை எனத் தெரிகிறது. அப்போது பிரபுவின் சகோதரரான சசிகுமார், […]
திருச்சியில் கிரேன் மோதி கூலி தொழிலாளி சாவு
திருச்சி எடமலைப்பட்டி போதுஹெல்த் காலனி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (73 ) இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காந்தி மார்க்கெட் நான்கு ரோடு பகுதியில் கணேசன் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த கிரேன் வாகனம் கணேசன் மீது மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் […]
பொன்மலையில் சோகம்: கிரேன் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆரோக்கியம் (33), கிரேன் டிரைவராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு கிரேன் வேலையின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த சதீஷ்குமார், அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின்னர் மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர், உடல்நலக் குறைவால் அடிக்கடி வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார், நேற்று தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு […]
உறையூர் டாஸ்மார்க் கடையில் திருட முயற்சி…மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
திருச்சி உறையூர் கோனக்கரை ரோடு பகுதியில் அரசு மதுபானக் கடை (டாஸ்மாக்) இயங்கி வருகிறது. இந்தக் கடையின் மேற்பார்வையாளராக முத்துச்செல்வன் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு விற்பனை முடிந்ததும், விற்பனையாளர் தனபாலுடன் சேர்ந்து கடையைப் பூட்டிவிட்டு முத்துச்செல்வன் வீட்டிற்குச் சென்றுள்ளார். இன்று அதிகாலை, கடையின் பாரில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தூய்மைப் பணிக்காக வழக்கம்போல் கடைக்கு வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் டாஸ்மாக் கடையின் ஷட்டர் பூட்டுகளை உடைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு […]
திருச்சியில் தனியார் பொருட்காட்சிகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு?
திருச்சி மாவட்டத்தில் மத்திய பேருந்து நிலையம் , கலையரங்க மண்டபம், மொராய் சிட்டி, மணப்பாறை, சோமரசம்பேட்டை, முசிறி, தில்லைநகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தனியார் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டன. இவைகளுக்கு அனுமதி வழங்கியது மற்றும் எத்தனை நாள் பொருட்காட்சி நடைபெற்றது என்பதில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அரசு பொருட்காட்சியோ, தனியார் பொருட்காட்சியோ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (பொருட்காட்சி) துறை சார்பிலேயே அதாவது அவர்களின் அனுமதியின் அடிப்படையிலேயே நடத்தப்படுவது வழக்கம். இந்த பொருட்காடசிகளுக்கு […]
திருச்சி காங்., நிர்வாகி மீது கம்பியால் தாக்குதல்
திருச்சி காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் நிர்வாகியை தாக்கிய மற்றொரு நிர்வாகி மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி பொன்மலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அர்ஜுன் (35).திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் தில்லைநகர் வடக்கு விஸ்தரிப்பு ராமச்சந்திர நகரை சேர்ந்த ஸ்ரீ ராகவேந்திரா (43 ) .திருச்சி மாநகரில் காங்கிரஸ் கோட்ட தலைவராக உள்ளார். இவரிடம் அர்ஜுன் ரூபாய் […]
திருச்சியில் லாரி மோதி தொழிலாளி பலி
திருச்சி காந்தி மார்கெட் காந்தி சிலை அருகே தோளில் சுமை ஏற்றி சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது, அவ்வழியாக வந்த பொக்லைன் லாரி இன்று மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உடலை கைப்பற்றி காந்தி மார்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறப்பு சான்றிதழுக்கு ரூ. 5000 லஞ்சம்-திருச்சியில் விஏஓ கைது
திருச்சி மாவட்டம், துறையூர் பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராமத்தில் பிரபு(42) விஏஓ ஆக கடந்த 2 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். விஏஓவிடம் வைரபெருமாள்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி கந்தசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது தாயார் கடந்த 07.12.2025 அன்று இறந்துவிட்டார். இது தொடர்பாக கந்தசாமி வாரிசு சான்று கேட்டு இணையத்தில் தகுந்த ஆவணங்களுடன் 24.12.2025 அன்று விண்ணப்பம் செய்துள்ளார். இது தொடர்பாக 31.12.2025 அன்று பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு விஏஓ பிரபுவை அவரது அலுவலகத்தில் சந்தித்த போது வாரிசு சான்று […]
திருச்சியில் பரபரப்பு..அமெரிக்க ஜனாதிபதி உருவ பொம்மை எரிப்பு
அமெரிக்கா, வெனிசுலாவின் மீது குண்டு வீசி ஆக்கிரமிப்பு செயலில் ஈடுபட்டதையும், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியையும் கைது செய்த அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் ஜனநாயக படுகொலையை கண்டித்தும்அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். கரீபியன் கடலில் இருந்து தனது அனைத்து படைகளையும் திரும்ப பெற வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சில் அமெரிக்க ஆக்கிரமிப்பை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வெனிசுலா மீதான தனது ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்தும்படி அமெரிக்கா […]
திருச்சி…புகையிலை விற்ற 2 பேர் கைது
திருச்சி திருவரங்கம் மற்றும் பாலக்கரை பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், நேற்று (ஜனவரி 3) போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திருவரங்கத்தில் சோதனை:திருவரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் போலீசார் ஆய்வு செய்தபோது, அங்கு மறைத்து வைத்து புகையிலை விற்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக வீரேஸ்வரம் தெற்கு தெருவைச் சேர்ந்த கோபிநாத் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து […]
திருவரங்கத்தில் பரபரப்பு சம்பவம்: என்ஐடி பேராசிரியை கார் கண்ணாடியை உடைத்து நகை, பணம் திருட்டு
திருச்சியை அடுத்த துவாக்குடி என்ஐடி குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் கோகுல்நாத் (43) இவர்வீட்டு உணவு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மனுஷா இவர் திருச்சியில் உள்ள என்ஐடி யில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 1ந்தேதி ஆங்கில புத்தாண்டு அன்று இருவரும் காரில் திருவரங்கம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். பிறகு மேலூர் ரோடு பகுதியில் காரை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்று விட்டனர். பிறகு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் […]
பூச்சி மருந்து சாப்பிட்டு தனியார் நிறுவன ஊழியர் சாவு- திருச்சி க்ரைம்
பூச்சி மருந்து சாப்பிட்டு தனியார் நிறுவன ஊழியர் சாவு திருச்சி வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (55)., தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார் இதனால் தன் வீட்டில் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுந்தரராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் […]
அரசு பஸ் டிரைவர் செய்த காரியம் -அமைச்சர் தொகுதி பயணிகள் அதிருப்தி
திருச்சி மாவட்டம், கீழகல்கண்டார்கோட்டை வழியாக சத்திரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஞ்சப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகியவற்றிற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கம்போல் இன்று காலை 10.30 மணியளவில் கீழகல்கண்டார் கோட்டையிலிருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்ட் செல்லக்கூடிய N86 அரசு பஸ் வரவில்லை. சுமார் 11.45 மணியளவில் அரசு பஸ் N41 வந்தது. சுமார் 2 மணி நேரம் அரசு பஸ் இல்லாததால் காத்திருந்த 100க்கும் மேற்பட்ட பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். அந்த […]
ஸ்ரீரங்கத்தில் எடப்பாடி போட்டி… சன்னாசிப்பட்டி கனகராஜ் விருப்ப மனு
அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி 2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் மற்றும் மணப்பாறை தொகுதிகளில் போட்டியிட வேண்டி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட புரட்சித்தலைவி பேரவை இணைச் செயலாளர் ஏ. கனகராஜ் தலைமை கழகமான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர். கமலக்கண்ணனிடம் விருப்பமனு வழங்கினார்.
நானும்-வைகோவும் ஒரே யுனிவர்சிட்டி தான்-திருச்சியில் முதல்வர் பேச்சு
திருச்சியில் வைகோவின் சமத்துவ நடைபயண தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.. தமிழ்நாட்டில் வைகோவின் கால்தடம் படாத இடமே இல்லை. 2026ம் ஆண்டில் என்னுடைய முதல் நிகழ்ச்சி வைகோவின் சமத்துவ நடைபயணம். அவரின் நெஞ்சுரத்தையும், வேகத்தையும் பார்க்கும் போது 28 வயது இளைஞர் போல் தோன்றுகிறது. தள்ளாத வயதிலும் தளராமதல் போராடியவர் தந்தை பெரியார். 2026 ம் ஆண்டின் முதல் நிகழ்ச்சியாக வைகோவின் நடைபயணம் அமைந்துள்ளது. இதுபோன்ற நடைபயணங்களை மக்களை சென்றடைவதற்கான எளிய வழி. நானும் வைகோவும் […]
திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் ‘சமத்துவ நடைபயணத்தை’ தொடங்கி வைப்பதற்காகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை திருச்சி வந்தடைந்தார். இன்று காலை 8 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக, மதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரோடு ஷோ: விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்லும் வழியில், திருச்சி […]
வைகோவின் ‘சமத்துவ நடைபயணம்’…திருச்சியில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை சமத்துவ நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணத்தை தி.மு.க. தலைவரும், தமிழக முதல் -அமைச்சருமான மு.க. ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி அளவில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகில் தொடங்கி வைத்து பேசுகிறார்.இதில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) காலை விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். விமான நிலையத்தில் இருந்து […]
தொழில் நஷ்டம்… திருச்சியில் மருந்து வணிகர் தற்கொலை…போலீஸ் விசாரணை
திருச்சி கண்டோன்மெண்ட், ஒத்தக்கடை பொதுத்தேர்வு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (43). இவர் கடந்த ஜனவரி மாதம் மருந்து மொத்த விற்பனைத் தொழிலைத் தொடங்கினார். இதற்காக மெடிக்கல் கடை உரிமையாளர் ஒருவரிடம் சுமார் ரூ. 2 லட்சம் கடனாகப் பெற்றுள்ளார்.தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் ராஜேஷ் குமார் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவர், உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில் தெருவில் […]
திருச்சியில் பரபரப்பு சம்பவம்…மாநகராட்சி துப்புரவு பணியாளருக்கு பீர் பாட்டிலால் குத்து
திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ( 36) இவர் திருச்சி மாநகராட்சி தூய்மை பணியாளர்.இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார். அப்போது அங்கே தள்ளுவண்டியில் சூப்பு கடை நடத்தி வரும் ரவுடி அக்பர் கான் (43) என்பவர் நடைபாதையில் இடையூறாக அமர்ந்துள்ளார். இதைப் பார்த்து ஸ்ரீதர் அவரை கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த அக்பர்கான் மற்றும் அவரது மனைவி பாத்திமா ஆகிய இரண்டு பேரும் ஸ்ரீதரிடம் தகராறு செய்தனர். பின்னர் […]
கனரக வாகனங்களுக்கு பகல் நேரத்தில் தடை: திருச்சி கலெக்டர் சரவணன் அதிரடி உத்தரவு
திருச்சி பழைய பால்பண்ணை வழியாக தஞ்சாவூருக்கு சென்று வரும் கனரக வாகனங்களுக்கு திடீர் கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு 01.01.2026 – முதல் பின்வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.தினந்தோறும் காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனைத்து கனரக வாகனங்களும் பால்பண்ணை சந்திப்பு வழியாக திருச்சி மாநகருக்குள் வருவதற்கு முற்றிலும் […]
திருச்சி காந்தி மார்க்கெட்டை’மாற்ற’…ரூ. 50 லட்சம் திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கீடு…என்ஐடி தயாரிக்க ஏற்பாடு
திருச்சி மாநகரின் இதய துடிப்பாக இருக்கும் காந்தி மார்க்கெட்டை, கார்பன் நியூட்ரல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சந்தையாக மாற்ற, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், திருச்சி என்ஐடிக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. மாநில அரசின் “கிளை மேட் ஸ்மார்ட் மார்க் கெட்ஸ்” திட்டத்தின் கீழ், பாரம்பரிய மார்க்கெட்டு களை காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப மறுசீரமைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தினமும் பல்லா யிரக்கணக்கான மக்கள் கூடும் காந்தி மார்க்கெட்டில், […]
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-பரபரப்பு
திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிபணி யாளர்கள் கூட்டமைப்பு (போட்டோ ஜியோ) சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ம.செல்வகுமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அந்தநல்லூர் வட்டார செயலாளர் ஔவைமணிமொழியாள் வரவேற்றார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய […]
ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு-லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் இன்று அதிகாலை திறக்கப்பட்டது – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.. 108 வைணவ திருதலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் சிறப்புகளை பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படும். இதில் முக்கியமான விழாவாக கருதப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 19ம்தேதி இரவு திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. தொடர்ந்து திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து உற்சவம் […]
பேட்டரிகள் திருட்டு – 3 பேர் கைது- திருச்சி க்ரைம்
பேட்டரிகள் திருட்டு திருச்சி சமயபுரம் நரசிங்க மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( 42 ) இவர் தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை செய்து வருகிறார். இவர் மின் கம்பங்களில் சோதனை நடத்த சென்றபோது தில்லைநகர் பகுதிக்கு உட்பட்ட பாபா டவர்ஸ் சாஸ்திரி ரோடு விஸ்வநாதபுரம் ,உக்கிர காளியம்மன் கோவில் பருப்பு மில் உட்பட்ட 11 மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்களில் உள்ள 22 பேட்டரிகள் திருடு போனது தெரிய வந்தது. இதே போல் […]
ஜல்லிக்கட்டு காளையுடன் திருச்சி கலெக்டரிடம் மனு- பரபரப்பு
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அழித்தனர்.இப்போது ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் மூலம் டோக்கன் பெறும் முறையை தவிர்க்ககோரி ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்துபொதுமக்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார் தலைமையில் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-தமிழர்களின் வீரம் செறிந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழக முழுவதும் ஜனவரி மாதம் முதல் மே […]
ஸ்ரீரங்கம் கோவிலில் போலீசார் குவிப்பு…
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் உச்ச நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை அதிகாலை நடக்க இருக்கும் நிலையில், இன்று (டிச.29) அதிகாலை முதலே திருச்சி மற்றும் பிற மாவட் டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் ஸ்ரீரங்கத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் பகல் பத்து 10ம் நாள்.. நம்பெருமாள் மோகினி அலங்காரத்துடன் காட்சி
திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 10 ஆம் நாள் உற்சவம் – நம்பெருமாள் மோகினி அலங்காரம், மற்றும் பல்வேறு ஆபரணங்கள் அணிந்து காட்சியளித்தார் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. பகல் பத்து, ராப்பத்து என நடைபெறும் வைகுண்ட ஏகாதேசி விழாவின் பகல் பத்து 10- ஆம் நாள் இன்று உற்சவர் நம்பெருமாள் சௌரிக் சாயக் கொண்டை சாற்றி, அதில் கலிங்கத்துராய், சூர்ய – சந்திர […]
அரசு அதிகாரியை மிரட்டி ரூ. 90 லட்சம் மோசடி- திருச்சியில் பரபரப்பு
திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் சிவா ( 57) அரசு அதிகாரி (பெயர் மாற்றம்). இவர்சில நாட்களுக்கு முன்பு அவரது செப்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் டில்லியில் இருந்து போலீஸ் அதிகாரி பேசுகிறேன். இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஒரு முக்கிய புள்ளியிடமிருந்து 147 ஏடிஎம் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது அதில் உங்களின் ஏடிஎம் கார்டும் இருக்கிறது. ஆகவே உங்களுக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளது. ஆகவே உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் […]
திருச்சிக்கு 2ம்தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை-பிரம்மாண்ட வரவேற்பு
திருச்சி தில்லைநகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் தி.மு.க செயற்குழு கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது..இந்த கூட்டத்தில் தி.மு.கழகத்தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வருகிற 2 – ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருச்சியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற இருக்கும் சமத்துவ நடை பயணத்தை துவக்கி வைக்க வருகைதர இருக்கிறார். அவருக்கு மத்திய, வடக்கு மாவட்ட […]
அமைச்சர் மகேஸ்-க்கு அதிமுக மா.செ.ப.குமார் கேள்வி
திருவெறும்பூர் எம்எல்ஏவுக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவுது… கொடுத்த வாக்குறுதியை Follow பண்ணுங்க திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களே. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய பால்பண்ணை சாலைப்போக்குவரத்து சந்திப்பில் ஏற்படுகின்ற கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணுங்கள்.. கடந்த 2016ம் ஆண்டு முதல் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும், 2021 முதல் ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் பணியாற்றும் மகேஸ் அவர்களே, தேர்தல் சமயத்தில் தொகுதிக்கு கொடுத்த […]
அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா – பகல் பத்து, ஆறாம் திருநாள் சிறப்புச் சேவை
அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உற்சவத்தில், ஆறாம் திருநாள் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. ஆறாம் திருநாளை முன்னிட்டு, அரங்கநாதர் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் திருமங்கையாழ்வார் அருளிசெய்த பெரிய திருமொழியின் தொடக்கப் பாசுரமான “நாராயணா என்னும் நாமம்” செவிமடுக்க, திருநாராயணன் ஆனந்தமாக சேவை சாத்திக்கொண்டார். இச்சேவையில், திருநாராயணன் முத்துக் கொண்டை சாற்றி, அதில் கலிங்கத்துராய் அணிந்து, சிகப்புக் கல் அபய ஹஸ்தம், மகர […]
அரியமங்கலத்தில் கார் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (45). கார் டிரைவரான இவருக்கும் அரியமங்கலம் காமராஜ் நகர் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்த யுவராஜ் (25), அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்த பழனி தீபக் ( 21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 23ந்தேதி (நேற்று) மதியம் கார்த்திகேயன் அரியமங்கலம் காமராஜ் நகரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்ட வந்துள்ளார். அப்போது அங்கு வந்த யுவராஜ் மற்றும் பழனி தீபக் இருவரும் கார்த்திகேயனை தகாத […]
திருச்சி மத்திய சிறை கைதி சாவு…போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (46).இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் பகுதியில் ஒரு குற்ற வழக்கில் கைதாகி கடந்த 2022ம் ஆண்டு நவ 24ந்தேதியில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் இவர் காச நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரை நவ.1ந்தேதி சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிறை அதிகாரி அளித்த […]
பெண் எஸ்ஐ-யிடம் அத்துமீறல்.. திருச்சி ஏட்டு சஸ்பெண்ட்
திருச்சி மாநகரக் காவல் துறையில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளரிடம் (SI) அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தலைமைக் காவலர் (ஏட்டு) சேக் முகமது அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் உதவி ஆய்வாளர், தனது உயர் அதிகாரிகளிடம் புகார் ஒன்றை அளித்தார். அதே காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வரும் சேக் முகமது, பணி நேரத்தில் தன்னிடம் தவறான முறையில் […]
ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்..நம்பெருமாள் வைரக்கல் ரங்கூன் அட்டிகையுடன் சேவை
அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாபகல் பத்து ஐந்தாம் திருநாள் அர்ஜுன மண்டபத்தில் திருமாலை பிரபந்தம் செவிமடுக்க சௌரிக் கொண்டை சாற்றி ; அதில் புஜ கீர்த்தி; இரு வெள்ளை கல் வில்வ பத்ர பதக்கம்; முத்து பட்டை ; முல்லை பூ சரம் சுற்றி ; வைரஅபய ஹஸ்தம் சாற் றி; அதில் தங்க கோலக்கிளி எடுத்து ; கீழே தொங்கல் பதக்கம் ஆட ; திருமார்பில் – ஸ்ரீ ரங்க […]
திருச்சி மாவட்டத்துக்கு டிச.30ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது கடந்த 20ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் பகல்பத்து உற்சவம் நடைபெற உள்ளது. அதன் பின்னர் இராப்பத்து திருவிழா நடைபெறுகிறது. மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் […]
திருச்சி- கோவில் உண்டியலை தூக்க முடியாமல் தவித்த 4 கொள்ளையர்கள்
திருச்சி பாளையம் பஜார் பகுதியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தினமும் பூஜைகள் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. உறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். வழக்கம்போல் நேற்று இரவு அந்திகால பூஜை முடிந்து பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் இன்று காலையில் சென்று பார்த்தபோது, கோவிலின் முன்பக்க கேட் உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனே கோவில் […]
17 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு- திருச்சி அருகே பரபரப்பு
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது திருவெறும்பூர் காவல் நிலையம் மற்றும் ஏஎஸ்பிஅலுவலகத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திலும் உள்ளது.இந்த பகுதியில் முன்பு பேருந்து நிலையம் இருந்தது. அதனால் அந்தப் பகுதியில் பேரூராட்சி கட்டுப்பாட்டில் சுமார் 50 கடைகள் உள்ளது. இதில் அரசு மதுபான கடை மற்றும் அதை சார்ந்த மதுபான பாரும் அடங்கும். இந்த நிலையில் மதுபான பார் 24 மணி நேரமும் செயல்பட்டு […]
ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து 4ம் நாள்.. சிகப்புக் கல் சூர்ய பதக்கம் அணிந்து நம்பெருமாள் சேவை
ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து நான்காம் நாள்; செந்தூர பட்டுடுத்தி நம்பெருமாள் சேவை அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் திருஅத்யயன வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து நான்காம் திருநாள். அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 4 ஆம் நாளில் – பெருமாள் திருமொழிக்காக கல் இழைத்த அரைக் கொண்டை சாற்றி ; அதில் சிறிய நெற்றி சுட்டி சாற்றி; மகர கர்ண பத்ரம் அணிந்து ; வைரஅபய ஹஸ்தம் […]
திருச்சியில் நாளை மின்தடை- எந்தெந்த ஏரியா?..
திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 23.12.2025 (செவ்வாய் கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட புது ரெட்டித்தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டிதெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்ஸ் சாண்டிரியா […]
அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு- திருச்சி க்ரைம்
அரிவாள் வெட்டு.. திருச்சி பாலக்கரை கீழப்புதூர் 3 வது தெருவை சேர்ந்தவர் பழனியப்பன் (61). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அகில இந்திய பாரத இந்து மகா சபாவில் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். பழனியப்பன் அவரது வீட்டில் ஒரு செடியை வளர்த்துள்ளார். அந்த அந்தச் செடியின் இலைகள் நாகராஜன் வீட்டில் விழுந்துள்ளன. இதனால் நாகராஜ் இந்த செடியை வெட்டி உள்ளார். இதை பழனியப்பன் தடுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு வாய் […]
திருச்சியில் முதியவர் தற்கொலை- விசாரணை
திருச்சி மேல சிந்தாமணி மாதுளங்கொல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். (69) இவருக்கு தீராத வயிற்று வலி மற்றும் கிட்னி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் மன அழுத்தத்தில் தங்கவேல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி லட்சுமி புகாரின் அடிப்படையில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் தலைமையிலான போலீசார் தங்கவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி […]
ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் தொடக்கம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பகல் பத்து உற்சவம் இன்று காலை துவங்கியது. நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது, 108 வைணவ தலங்களில் முதன்மையானது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவமிக்கது. பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த […]
முதல்வரும்-அமைச்சர்களும் மக்களுக்காக உழைக்கிறார்கள்… அமைச்சர் கே.என்.நேரு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திருச்சி துவாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எந்திரவியல் ஆய்வகத்தை திறந்து வைத்து, கையேடுகளை வெளியிட்டு எந்திரவியல் ஆய்வகங்களின் செயல்பாடுகளை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்கள். இந்நிகழ்வில் மாநில திட்ட இயக்குநர் எம்.ஆர்த்தி, பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் , தொடக்ககல்வி இயக்குநர் நரேஸ், இணை இயக்குநர் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி, நகராட்சிகளின் […]
அழுகிய நிலையில் 4பேரின் உடல்கள் மீட்பு-திருச்சியில் பரபரப்பு
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அருகாமையில் உள்ள கொள்ளிடக்கரையில்யாத்திரி நிவாஸ் கட்டப்பட்டுள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அறநிலையத்துறை அதிகாரிகள் இதனை பராமரித்து வருகின்றனர்.தற்போது வைகுண்ட ஏகாதசி விழா வருகிற30-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் திருவரங்கத்துக்கு வருகை தருகின்றனர். அந்த வகையில் கடந்த 10-ந் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் (வயது 67) இவரது மனைவி செண்பகவள்ளி […]
ஸ்ரீரங்கம் லாட்ஜில் 4 பேர் தற்கொலை -பரபரப்பு
திருச்சியின் ஸ்ரீரங்கத்தில், தஞ்சையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் லாட்ஜ் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் (தந்தை, தாய் மற்றும் இரண்டு மகள்கள்), கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் தங்கியிருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. ஊழியர்கள் பலமுறை தட்டியும் பதில் […]
திருச்சி- கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட மாணவர் மீது தாக்குதல் – 4 பள்ளி மாணவர்கள் மீது வழக்கு
திருச்சி மாவட்டம், சிறுகனூர் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பயிலும் 4 மாணவர்கள், பள்ளி நேரத்திற்குப் பிறகு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்துத் தொடர்ந்து கஞ்சா புகைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவர், தனது நண்பர்கள் தவறான பாதைக்குச் செல்வதைத் தடுக்க விரும்பி, இது குறித்து அப்பகுதி பெரியவர்களிடம் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் கஞ்சா புகைத்த மாணவர்களுக்குத் தெரியவந்ததும், அவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். “எங்களைப் பற்றிக் காட்டி கொடுக்கிறாயா?” எனக் கேட்டு, […]
ஸ்ரீரங்கத்தில் அனுமதியின்றி மணல் திருட்டு
திருச்சி சென்னை சர்வீஸ் ரோடு பகுதியில் இரணியன் அம்மன் கோவில் அருகில் திருவரங்கம் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வேன் டிரைவரை பிடிக்க முயன்ற போது அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இதையடுத்து மணல் ஏற்றி சென்ற வேனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று பொன்னி டெல்டா அடுக்குமாடி குடியிருப்பு அருகில் காவேரி […]
ஜிஎச்-ல் ஜெனரேட்டரின் பேட்டரி திருட்டு.. திருச்சியில் வாலிபர் கைது
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் பிளான்ட் உள்ள அறையில் பேட்டரி யுடன் ஜெனரேட்டர் இயந்திரம் இருக்கிறது. இந்நிலையில் அங்கு சென்ற வாலிபர் ஒருவர் ஜெனரேட்டர் பேட்டரியை கழற்றிக் கொண்டு இருந்தார்.அப்பொழுது அந்த வழியாக பராமரிப்பு பணிக்காக வந்த உதயகுமார் என்ற ஜூனியர் அசிஸ்டன்ட் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தார்.பிறகு அரசு மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது எடமலைப்பட்டி […]
தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் -அமைச்சர் மகேஷ்
திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் பல்நோக்கு அலுவலக பயன்பாட்டு கட்டிடத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திறந்து வைத்தார். அலுவலகத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. மாயபிம்பம் என எந்த தரவும் இல்லாமல் போகின்ற போக்கில் கூற முடியாது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொடக்கப்பள்ளியில் பள்ளி இடை நிற்றல் பூஜ்யமாக உள்ளது. இந்திய அளவில் உயர்நிலை மற்றும் […]
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்
பெண்ணிடம் கைப்பையை திருடிய பெண் கைது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யா ( 35 ).இவர் திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தத்தில் கோவை செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த மர்ம பெண் சத்யாவின் கைப்பையைத் திருடி சென்றார். அதில் வெளிநாட்டு பாஸ்போர்ட், ஆதார் கார்டு, வங்கி பாஸ் புத்தகம்,ரூ.2500 ரொக்கம் ஆகியவை உள்ளன. இதுகுறித்து புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிந்து திருப்பூர் வீரபாண்டி ஆவாரப்பாளையம் பகுதியை […]
திருச்சி லால்குடியில் 17ம் தேதி மின்தடை
திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம். 110/33-11 கி.வோ.பூவாளுர் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணி 17.12.2005 அன்று காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட விருப்பதால், இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோக நிறுத்தம் செய்யப்படும் நிறுத்தம் செய்யப்படும் என்பதை அறிவிப்பு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இலால்குடி நகர பகுதியில் நாகம்மையார் தெரு, ராஜேஸ்வரி. நகர், சாந்தி நகர், பூவாளூர் பின்னவாசல், தென்கால், மணக்கால கொப்பாவளி, […]
திருச்சியில் 17ம் தேதி மின்தடை..
திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, 33 கே.வி. E.B. ரோடு துணை மின்நிலையத்தில் 17.12.2025 (புதன் கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் E.B.ரோடு, மணிமண்டப சாலை, காந்தி மார்கெட், கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோக நாதர் கோவில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் ரோடு, சின்னகடைவீதி, பெரிய […]
திருச்சியில் ரூ.1500 லஞ்சம் பெற்ற ஏஇஓ கைது..
திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் லதா பேபி கூடுதல் பொறுப்பாக வையம்பட்டி வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கனவே திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்த விமலா என்ற பள்ளி ஆசிரியை பணிபுரிந்துள்ளார். தற்போது பணிமாறுதலில் வேறு பள்ளிக்கு கடந்த ஜுலை மாதம் சென்றுவிட்டார். ஜுலை மாதத்தில் பள்ளி ஆசிரியை 4 நாட்கள் பணிபுரிந்தைமக்காக ஊதியம் வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளார். மபள்ளி ஆசிரியை அந்த 4 நாட்களுக்கான ஊதியத்தை பெற வந்துள்ளார். 4 […]
மணப்பாறையில் என் வாக்குசாவடி- அமைச்சர் மகேஸ் துவங்கி வைத்தார்
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நகர, ஒன்றிய, பேரூர், பகுதியில் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி “என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பரப்புரையை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் பூத் வாரியாக பரப்புரை கூட்டத்தை தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் தொடர்சியாக மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னம்பட்டி பேரூராட்சி, வையம்பட்டி ஒன்றியம் சடையம்பட்டி, […]
ஸ்ரீரங்கம்- ரயிலில் அடிப்பட்டு அடையாளம் தெரியாத ஆண் பலி
ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் அருகே சுமார் 45 வயது தக்க ஆண் நபர் அவ்வழியே சென்றபோது பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எதிர்பாராத விதமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இறந்த நபர் வெள்ளை நிற வேஷ்டி மட்டும் அணிந்திருந்தார். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை. இது பற்றி தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீஸ் அட் இன்ஸ்பெக்டர் அபிராமி விரைந்து சென்று அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
தனியார் வங்கி மேனேஜர் தற்கொலை… திருச்சியில் பரிதாபம்
திருச்சி ஏர்போர்ட் கல்யாணசுந்தர நகரை சேர்ந்த மகாலட்சுமி (22)என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (34) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இரு வீட்டாரின் பெற்றோரின் சம்மதத்துடன், மகாலட்சுமி கடந்த ஜூன் 8-ந் தேதியன்று மணிகண்டனைத் திருமணம் செய்துகொண்டார். பிறகு மணிகண்டன் கே.கே. நகரில் உள்ள தனியார் வங்கியில் ரிலேஷன்ஷிப் மேனேஜராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மணிகண்டன் தனது திருமணம் மற்றும் வீட்டுப் புனரமைப்புக்காகக் கடன் வாங்கியிருந்தார். பிறகு மணிகண்டனால் கடன் வாங்கியத்திற்கு மாதாந்திரத் […]
வன்னியர்களுக்கு இழப்பீடு கோரி-திருச்சியில் பாமக ஆர்ப்பாட்டம்
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், அனைத்து சமூகத்தினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் பென்னட் ராஜ் தலைமை வகித்தார் […]
வீடு புகுந்து மிரட்டி 85 பவுன் நகை-பணம் திருட்டு- திருச்சியில் அதிர்ச்சி
திருச்சி திருவானைக்காவல் ஐந்தாவது பிரகாரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி அபிராமி வயது 42 .இவர் திருச்சியை சேர்ந்த கணவன் மனைவி இடம் ரூபாய் 30 லட்சம் பணம் கடன் வாங்கி உள்ளார். அந்த கடனுக்கு தன்னுடைய நிலத்தை அடமானம் வைத்துள்ளார் இந்த நிலையில் ஒரு வருடத்தில் வாங்கிய கடன் பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுத்துவிட்டார். இந்நிலையில் கடன் கொடுத்த கணவன், மனைவி இருவரும் சேர்ந்து சம்பவத்தன்று அபிராமி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டை சேதப்படுத்தி […]
திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை-25 பேர் கைது
திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தஞ்சை ரோடு டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சிவராமன் (வயது 56 )என்பவர்ரை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்துள்ளனர். இதே போன்று அரியமங்கலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட நேருஜி நகர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 42) அவரது மனைவி ஜலிலா (வயது 38) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். […]
ரூ.1000 லஞ்சம்-திருச்சியில் வட்டார போக்குவரத்து அதிகாரி கைது
திருச்சியை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் தனக்கு லைசன்ஸ் எடுக்க அங்குள்ள ஒரு புரோக்கர் மூலம் திருச்சி பிராட்டியூரில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றார்.அங்கு மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த மணி பாரதி என்பவரிடம் விண்ணப்பம் செய்தார். அப்போது அவர் லைசன்ஸ் எடுப்பதற்கு முன்னதாக எல் எல் ஆர்(பழகுணர் உரிமம்) எடுக்க வேண்டும் அதற்கு நீங்கள் ரூ.1000 லஞ்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனியப்பன் இது குறித்து திருச்சி […]
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்… திருச்சியில் மாரிசெல்வராஜ் பேட்டி
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலைத்திறன் போட்டி துவக்க விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய மாரிசெல்வராஜ், 10 ஆம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடிப்பேன் என்னை டிவியிலிருந்து பேட்டி எடுக்க வருவார்கள் என என் பெற்றோர்களிடம் கூறினேன் ஆனால் 10 ஆம் வகுப்பில் நான் தோல்வி அடைந்தேன். ஆனால் பரியேறும் பெருமாள் வெளியான பின் எல்லோரும் எங்கள் வீட்டிற்கு சென்று பேட்டி எடுத்தார்கள் […]
பூங்கா அமைக்காத மாநகராட்சியை கண்டித்து திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பூங்கா அமைக்க 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.ஆனால் இதுவரை பூங்காவை அமைக்காமல் காலம் தாழ்த்தும். மாநகராட்சியை கண்டித்து, சண்முகா நகர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் இன்று புத்தூர் நான்கு ரோட்டில் மாபெரும் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சண்முகாநகர் நலச்சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி. முத்துமாரி தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது ;-திருச்சி மாநகராட்சி சார்பில் […]
திருச்சி தெற்கு திமுக சார்பில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடை
தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது அதன் தொடர்ச்சியாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் மற்றும் திருச்சி கிழக்கு மாநகர தொழிலாளர் அணி சார்பாக திருச்சி மேலப்புலிவார்டு ரோட்டில் அமைந்துள்ள சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபம் டாக்கர் சந்தில் மார்க்கெட் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் சீருடை […]
வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்.. திருச்சி சிவா கேள்வி
தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் மாநிலங்களவையில் நேற்று விவாதத்தை தொடக்கிவைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். தொடர்ந்து, தி.மு.க.வின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா விவாதத்தில் கலந்துகொண்டு பேசியதாவது: வந்தே மாதரம் பாடலில் உள்ள சிறப்பை பற்றி அனைவரும் பேசினார்கள். மக்கள் பிரச்னைகளை பேச கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், வந்தே மாதர விவாதம் மிக முக்கியமென இரு அவைகளிலும் மத்திய அரசு நடத்துகிறது. ஆனால், தற்போது மாநிலங்களவையில் […]
திருச்சி துறையூர் அருகே வீடுகளில் 50 சவரன் தங்க நகைகள் திருட்டு
திருச்சி துறையூர் அருகே உள்ள இரண்டு வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து சுமார் 50 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியில் AITUC கட்டிட தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கட்டிட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ 6 ஆயிரம் என்பதை சட்டமாக்க வேண்டும், வாரியத்தின் முடிவுப்படி உடனடியாக ரூ2 ஆயிரம் என்பதை வழங்கிட வேண்டும், விண்ணப்பித்த அனைவருக்கும் வீடு வழங்கிட வேண்டும் ,வீடு கட்டும் மானிய தொகையை ரூ. 10 லட்சமாக உயர்த்த வேண்டும், நலவாரிய அலுவலகங்களில் ஏஜென்டுகளின் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும், வெளிமாநில தொழிலாளர்கள் வருகைக்கு வரம்பு கட்டிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி கட்டிட தொழிலாளர்கள் சங்கம் திருச்சி மாவட்ட […]
திருச்சியில் பாரம்பரிய கட்டிடங்கள் புனரமைக்கும் பணி தொடக்கம்
திருச்சியில் உள்ள நூற்றாண்டுப் பழமையான அரசு கலைக் கல்லூரியின் கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் சுமார் ரூ. 6 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் புராதனக் கட்டடங்களின் வரலாற்றுச் சிறப்பைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. விரிவான தகவல்: இந்தப் புனரமைப்புப் பணியானது கல்லூரி வளாகத்தின் பாரம்பரியத் தோற்றத்தைப் பாதிக்காத வகையில், அதன் வலிமையையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் விதமாக அமையும். இந்த முயற்சி கல்வி மற்றும் பாரம்பரிய ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை.. வலைவீச்சு-திருச்சி க்ரைம்
டீக்கடையில் பாய்லர் திருட்டு திருச்சி புத்தூர் சங்கீதபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (52). இவர் அரசு மருத்துவமனை போலீசரகத்துக்கு உட்பட்ட பழைய மீன் கடை தெரு பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.கடந்த 5 ந் தேதி டீ கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் டீக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று டீக்கடையில் இருந்த பாய்லர் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.பிறகு மறுநாள் கடையை திறக்க செல்வம் […]
திருச்சியில் 10ம் தேதி குடிநீர் கட்
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம்-I, வெல் III (Aerator) மற்றும் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் – II (KFW) ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம் பேட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கம்பரசம் பேட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 09.12.2025 அன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை தலைமை […]
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செ. ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி என்ற அடிப்படையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் தலைமையில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, […]
திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை
திருச்சியில் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்கள் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,மாநகர செயலாளர் மேயர் அன்பழகன்,வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், சேர்மன் துரைராஜ், ஆனந்த் குடமுருட்டி சேகர், விஜயா ஜெயராஜ் பகுதி […]
முன்விரோதம் மோதல்.. 5 பேர் மீது வழக்கு.. ஓய்வு ஆசிரியையை தாக்கிய மகன்… திருச்சி க்ரைம்
முன்விரோதத்தில் இரு தரப்பினர் மோதல் திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. முன் விரோதத்தை சமாதானம் பேசுவதற்காக அங்காயி கோயில் பகுதிக்கு இரு தரப்பினரும் வருமாறு கூறினர்.இருதரப்பினரும் வந்த இடத்தில் மன்னிப்பு கோருவதாக கூறும்போது பின்னர் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.இதில் இரு தரப்பைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இது சம்பந்தமாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். […]
திருச்சியில் TNTTUC – மாநிலம் தழுவிய வேலை நிறுத்த கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு சார்பில் காலிபாட்டில் சேகரிக்கும் பணியில் டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தக் கூடாது ,காலி பாட்டில் சேகரிப்பிற்கு தனிமுகமை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தமும் மற்றும் மண்டலங்களில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது திருச்சி மண்டலத்தில் (திருச்சி கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட) மாவட்டங்கள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது..இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல பொறுப்பாளர் கு. சரவணன் […]
திருச்சி எம்பி தொகுதியில் நடைபெறும்..பசுமை நெடுஞ்சாலை திட்டங்கள் என்னென்ன?..
திருச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், Greenfield Highways எனப்படும் பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்திடம் திருச்சி எம்பி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்கரி பதில் வழங்கியுள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு:எம்பி துரைவைகோவின் கேள்வி: இப்பகுதியில் இத்திட்டங்களை விரைவுபடுத்தி, போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு ஒன்றிய அரசு […]
பள்ளி மாணவர்களுக்கு ஸ்பெஷல் பஸ்… அமைச்சர் மகேஸ் ஏற்பாடு
திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்( லிட் )திருச்சி மண்டலம் சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அதிகம் பயணிக்கும் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் மாணாக்கர்கள் மட்டும் எளிதாக பயணம் செய்யும் வகையில் கட்டணமில்லா நகர பேருந்துகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் ஆகியோர் இன்று அண்ணா நகர், திருவெறும்பூர் பேருந்து நிலையம், காட்டூர் பேருந்து நிலையம், பால்பண்ணை […]
புகையிலை பொருட்கள் விற்பனை.. 2 பேர் கைது… டூவீலரில் மணல் கடத்தல்… திருச்சி க்ரைம்
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகர்பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று அங்கு பார்த்த போது அஷ்ரப் அலி (25) என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்து அவரிடமிருந்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று உறையூர் பகுதியில் பெருமாள் கோவில் தெரு பகுதியில் […]
லால்குடியில் புதிய பயணியர் நிழற்குடை… எம்எல்ஏ ஏற்பாடு
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மா.கண்ணனூர் ஊராட்சியில் ரூபாய் 10 லட்சத்தில் பயணியர் நிழற்குடை கட்டிடம் கட்டுவதற்கான பணியை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கருப்பையா, முன்னாள் ஊராட்சி தலைவர் தனசெல்வம், தன்ராஜ், உதயசூரியன் ,சேகர் ,கருப்பையா, மணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்….
என்.எஸ்.பி ரோட்டில் தரைக்கடைகள் அகற்றம்…பின்னணியில் சாரதாஸ்?
திருச்சி என்எஸ்பி ரோட்டில் 200க்கும் மேற்பட்ட தரைக்கடைகள் இருந்தன. தெப்பக்குளத்தை சுற்றி மற்றும் என்எஸ்பி ரோடு முழுவதும் இருபுறமும் கடைகள் பரபரப்பாக இயங்கின. இந்த சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரமே இந்த கடைகள் தான். இதன்மூலம் 200 குடும்பங்கள் பிழைத்து வந்தன.ஆனால் 2 வாரங்களுக்கு முன் இந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. இதனால் என்எஸ்பி ரோடு வெறிச்சோடி காணப்படுகிறது. வியாபாரிகளுக்கு மாற்று இடமாக ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்காத வியாபாரிகள், மக்கள் நடமாட்டம் […]
வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது
திருச்சியில் இருந்து 160 பயணிகளுடன் துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கியது. கோளாறு காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக திருச்சி, புதுக்கோட்டை குளித்தலை, மணப்பாறை ஆகிய பகுதிகளில் வானில் வட்டமடித்த விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறங்கியது
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்.. பரபரப்பு
திருச்சி மெயின் கார்டு கேட் ,என்.எஸ்.பி. ரோடு தரைக்கடை வியாபாரிகள் 100 பேர் இன்று காலை திருச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு திரண்டு வந்தனர்.பின்னர் தரைக்கடை வியாபாரிகள் அனைவரும் தரைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அஸ்ரப் அலி, ஜீவா, அன்சாரி, செந்தில், கபீர் அகமது, லதா ஆகியோர் தலைமையில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியை சந்தித்து, தனித்தனியே மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- .என்.எஸ்.பி ரோடு, மெயின் கார்டு கேட் பகுதியில் நாங்கள் 10 முதல் 40 […]
வங்கி ஊழியர் மாயம்- கார் மோதி வாலிபர் பலி-திருச்சி க்ரைம்
பணிக்குச் சென்ற வங்கி ஊழியர் திடீர் மாயம் திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (56)பொன்மலை பட்டியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 27ம் தேதி காலையில் வேலைக்கு சென்றார்.பின்னர் பணி இடத்திலிருந்து மாலையில் திரும்பினார் ஆனால் வீட்டுக்கு செல்லவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர் .ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து அவரது மனைவி பூங்கொடி பொன்மலை போலீசில் புகார் செய்தார். அதன் […]
கஞ்சா விற்ற 2 பேர் கைது… திருச்சி க்ரைம்
கஞ்சா விற்ற 2 பேர் கைது திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து ரெயில்வே கேட் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து அரியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்தஇரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் கஞ்சா விற்றது தெரிய வந்தது. இதைபடுத்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் திருவறும்பூர் கூத்தைபார் பகுதியை சேர்ந்த ரியாஸ் கான் ( […]
திருச்சி ஜங்சன் பாலம் அருகே பெண் சடலம்… போலீஸ் விசாரணை
திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் புதரில் ஒரு பெண் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 120 தீர்மானம் நிறைவேற்றம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் லி. மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடந்தது துணை ஆணையர்கள் வினோத், க.பாலு, நகரப் பொறியாளர் பி. சிவபாதம் ,மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார் , மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், .பி. ஜெயா நிர்மலா,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். பின்னர் மாநகராட்சி மாமன்ற கூட்ட […]
தவெக நிர்வாகிகள் அண்ணா சமாதிக்கு சென்றது-நல்ல விஷயம்தான்-துரை வைகோ பேட்டி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சியில் பால்பண்ணை பகுதியில் சர்வே சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய துரை வைகோ எம்பி பேசும்போது.., செங்கோட்டையன் இணைந்தது குறித்த கேள்விக்கு.., திருச்சி பால்பண்ணை சர்வீஸ் சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது […]
SIR பணிகளில் திமுக தலையீடு.. திருச்சி அதிமுக கலெக்டரிடம் மனு
திருச்சி மாநகரில் SIR பணிகளில் BLO பணியில் உள்ள பலர் ஆளுங்கட்சியான தி.மு.க. நிர்வாகிகளின் கைபாவையாக செயல்பட்டு திருச்சி, மாநகருக்கு உட்பட்ட பல பகுதிகளில் இறந்துபோன வாக்காளர்கள் மற்றும் பழைய முகவரியிலிருந்து வேறு முகவரிக்கு சென்ற வாக்காளர்களின் SIR படிவங்களை தி.மு.க. நிர்வாகிகள் BLO-க்களிடமிருந்து கைப்பற்றி சட்ட விரோதமாக அதனை ஆன்லைனில் எவ்வித உண்மை தன்மை இல் லாமல் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். அதற்கு உடந்தைகயாக செயல்படும் BLO-க்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி […]
திருச்சி ஆழ்வார்தோப்பில் எம்பி துரை வைகோ டூவீலரில் ஆய்வு
திருச்சி மாநகர் மேற்கு சட்டமன்றத் தொகுதி உட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியில் சுமார் 40 வருடத்திற்கு முன்பு அப்பகுதியில் குடியிருப்பு இல்லாத நேரத்தில் சமையல் எரிவாயு கிடங்கு செயல்பட ஆரம்பித்தது. இந்நிலையில் சமையல் எரிவாயு கிடங்கு அமைந்துள்ள பகுதி தற்போது சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருப்பு பகுதியாக உள்ளது. எனவே, சமையல் எரிவாயு கிடங்கு மாற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் ஆய்வு […]
ஆதார்-பான் கார்டு வைத்து மோசடி.. திருச்சி பெண் கதறல்
திருச்சியை சேர்ந்த கலைவாணி என்கிற பெண்ணின் ஆதார் மட்டும் பான் கார்டை பயன்படுத்தி புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அந்த நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி அபராத தொகையாக 9 கோடி ரூபாய் கட்ட வேண்டும் எனவும் அந்த தொகையை கலைவாணி தான் கட்ட வேண்டும் என கூறி அவர் கணக்கு வைத்துள்ள வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கலைவாணி இன்று திருச்சி மாநகர சைபர் கிரைம் போலிசில் புகார் அளித்துள்ளார்.
போதை மாத்திரைகள் விற்பனை – வாலிபர் கைது.
திருச்சி பாலக்கரை கம் ஸ்டோன் ரயில்வே ட்ராக் அருகே உள்ள பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட,உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் வந்தது.இதை எடுத்து பாலக்கரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் போதை மாத்திரைகள் […]
திருச்சியில் தக்காளி விலை ரூ.70க்கு விற்பனை
வங்க கடலில் புயல் உருவாகுவதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது குறிப்பாக காவேரி டெல்டா மாவட்டங்களான திருச்சி தஞ்சை திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது.மேலும் மழையால் தக்காளிகள் அழுகி போகும் நிலை ஏற்பட்டு உள்ளது.இதனால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் தக்காளி வரத்துகுறைவாக காணப்படுகிறது.வழக்கத்துக்கு மாறாக தக்காளி விலை உயர்ந்துள்ளது.இன்றைக்கு தக்காளி ஒரு கிலோ ரூபாய் 70 க்கு விற்பனை […]
திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்ட திருத்த தொகுப்பை திரும்ப பெற வேண்டும்.முறைசாரா தொழிலாளர்களின் நல வாரிய பணத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திருச்சி மரக்கடை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் எல்பிஎப் குணசேகரன் ,சிஐடியு. ரெங்கராஜன், ஏஐடியுசி சுரேஷ், எஸ்கேஎம். அயிலை சிவ சூரியன், ஏஜ சசிடியு ஞான தேசிகன், எல்.எல்.எப்.தெய்வீகன், யுடியுசி சிவசெல்வன், ஜஎன்டியுசி அலெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். […]
பஞ்சப்பூர்-கருமண்டபம் வரை… புறவழிச்சாலை அமைக்கும் பணி… மேயர் ஆய்வு..
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை பணிகளை மேயர் அன்பழகன் இன்று (26.11.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பஞ்சபூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை தொகுப்பு-I – கோரையாறு மற்றும் உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரை பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி ரூ.81.72 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை அமைக்கப்படுகிறது.சாலையின் மொத்த நீளம் – 2 […]
திருச்சியில் ரூ.7லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள். நேற்று 25.11.2025 ஆம் தேதி, காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தஞ்சாவூர்ரோடு, அருள்மிகு […]
பெட்ரோல் பங்கில் பணம் கொள்ளை… திருச்சி க்ரைம்
முதியோர் இல்லத்தை நடத்தி வந்த நபர் மூச்சு திணறி சாவு ஸ்ரீரங்கம், கீதாபுரத்தை சேர்ந்தவர் ராபின் (32) இவர் அந்த பகுதியில் முதியோர் இல்லம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ராபினுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படும். இதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஆபத்தான நிலையில் ராபின் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் […]
திருச்சியில் மழையால் இடிந்து விழுந்த வீடு
திருச்சி, திருவெறும்பூர், வேங்கூர் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் வீடு நேற்று இரவு பெய்த கனமழையால் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. வருவாய் துறை அலுவலர்கள் பார்வையிட்டனர். மேலும் வீடு இழந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
22 மாவட்டங்களில் மழை… 17 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிக்கு விடுமுறை
வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக, பெய்த கனமழையால் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, கோவை, கள்ளக்குறிச்சி, குமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 17 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை […]
கஞ்சா விற்ற நபர் கைது…குழந்தைகளின் தாய் மாயம்- திருச்சி க்ரைம்
வீட்டிற்குள் புகுந்து தூங்கிய பெண்ணை கட்டி பிடிக்க முயற்சித்த வாலிபர் திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியில் திருமணம் ஆன பெண் தனது குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். இந்நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் வீட்டுக்குள் புகுந்து அந்தப் பெண்ணை கட்டி பிடிக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் சத்தம் போடவே அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து வீட்டுக்குள் புகுந்திருந்த மர்ம ஆசாமியை பிடித்து அரியமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு […]
ஸ்ரீரங்கம் கோயிலில் சகஸ்ர தீபம்- நாளை துவங்கி வைக்கிறார் அமைச்சர் சேகர்பாபு
ஸ்ரீரங்கம், காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் லெட்சுமி நரசிம்மர் சன்னதியில் 24ம் ஆண்டு சகஸ்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளை 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் 24வது பீடம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமி மங்களா சாசனத்துடன் சுவாமி முன்னிலையில் தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு குத்து விளக்கேற்றி சர ஸ்ர தீப நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். முன்னதாகநாளை காலை நாதஸ்வர […]
சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை-திருச்சியில் பரிதாபம்
திருச்சி கே கே நகர் இந்திரா நகர் பிருந்தாவன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 55. இவர் எல் ஐ சி காலனி, வெங்கடேஸ்வரா தெருவில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார் . இந்த நிலையில் கடந்த 21ம் தேதி முதல் புதிய தொழில் திட்டம் குறித்து மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இவர் தனது மனைவியிடம் கூறிவிட்டு அலுவலகத்திற்கு வந்தவர் கதவை தாளிட்டு உள்ளே தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது. இந்த […]
டிச.3ம் தேதி கார்த்திகை தீபம்.. மலைக்கோட்டையில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்
மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவிலில் வருகின்ற 03.12.2025 அன்று நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தீபத்திற்கான திரி தயாரிக்கும் பணி 21.11.25 அன்று துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மலைக்கோட்டை அருள்மிகு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள 40 அடி உயரமான கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 அடி உயரமுள்ள செப்பு கொப்பரையில் 300 மீட்டர் பருத்தி துணிகளால் செய்யப்பட்ட திரியில் 700 லிட்டர் இலுப்பை எண்ணெய் நல்லெண்ணெய் நெய் ஆகியவை கலந்து ஊற்றி மகாதீபம் ஏற்றப்படுகிறது. […]
ஒற்றுமை தினப்பேரணி… எம்பி துரை வைகோ தொடங்கி வைத்தார்
திருச்சி, நாடாளுமன்ற உறுப்பினர், முதன்மைச் செயலாளர், மறுமலர்ச்சி திமுக., துரை வைகோ கூறியிருப்பதாவது.. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் நிர்வாக அலுவலக அரங்கத்தில் நேற்று, நேரு இளையோர் அமைப்பு சார்பில் நடந்த சர்தார் வல்லபாய் படேல் நினைவினைப் போற்றிடும் வகையில் ஒற்றுமை தினப்பேரணி நடந்தது. இந்தப் பேரணியை தொடங்கி வைப்பதற்கு முன்பு கல்லூரி மாணவர்களிடம் நான் பேசினேன். அதாவது, இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில், […]
கராத்தே போட்டி- பதக்கம் வென்ற மாணவர்கள்-திருச்சியில் உற்சாக வரவேற்பு
தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான சி பி எஸ் இ பள்ளிகளுக்கு இடையில் கராத்தே போட்டியானதுமத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நவம்பர் 14- முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த 260 சி பி எஸ் இ பள்ளிகளிலிருந்து 2000க்கும் மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த […]
விழிப்புடன் இருந்து வாக்குரிமையை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.. எம்எல்ஏ இனிக்கோ இருதயராஜ்..
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின்திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில்16 -ம் ஆண்டு தொடக்க விழா திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. அவைத்தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் நிறுவன தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார், அப்போதுஇன்றைய சூழ்நிலையில்,எஸ் ஐ ஆர் குறித்து நாம் விழிப்புடன் செயல்பட்டு, நமக்கான வாக்குரிமையை புதுப்பித்து கொள்ள வேண்டும்.மேலும் நமக்கு அருகில் இருப்பவர்களுக்கும் அதனை தெளிவு படுத்தி , வாக்குரிமையை புதுப்பிக்க உதவிட […]
மெட்ரோவுக்கு அனுமதிக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது- காதர் மொகிதீன் கண்டனம்
ஒன்றிய அரசு கோவை – மதுரை மெட்ரோ ரயில் திட் டங்களையும் முடக்கி வஞ்சித் துள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசி ரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது :மெட்ரோ திட்டத் திற்கு ஒப்புதல் அளிக்க மக்கள்தொகை 20 லட்சம் வரை தேவை என்றும் கோவை மற்றும் மதுரையில் 15 லட்சம் மக்கள்தொகை […]
தமிழ்நாடு ஓய்வு அரசு ஊழியர் சங்கத்தினர் 2ம் கட்ட போராட்டம்- திருச்சியில் தீர்மானம்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு திருச்சி அருண் ஓட்டல் வளாகத்தில் இன்று நடந்தது. மாநிலத் தலைவர் இரா. பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் கே.வி. நடராஜன், எட்டியப்பன், வேலாயுதம், வரதராஜன், மாநில செயலாளர்கள் என். அண்ணாதுரை, பி. முத்துராமலிங்கம், இரா.ஜெபமாலை மேரி, ஆர். ஞானசேகரன், தமிழ்ச்செல்வி, சுப்பிரமணியன், மாநில தணிக்கையாளர்கள் வெங்கடேசன், சுந்தர தமிழ்ச்செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர் திருச்சி மாவட்ட செயலாளர் தங்கவேலு வரவேற்றார் பொதுச்செயலாளர் மகாலிங்கம் […]
திருச்சி சிறப்பு முகாமில் வௌிநாட்டு கைதிகள் மோதல்- பரபரப்பு
திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினரை அடைத்து வைக்க சிறப்பு முகாம் அமைந்துள்ளது. அங்கு சட்டவிரோதமாக நம்நாட்டிற்குள் குடியேறியவர்கள், விசா காலம் முடிந்த பின்னரும் இந்தியாவில் தங்கியிருந்தவர்கள், போலிபாஸ்போர்ட் வைத்திருத்தல், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் நூறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் 4 கைதிகள் திடீரென்று மோதிக்கொண்டனர். ,இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கேகே நகர் […]
கூட்டணி குறித்து பலர் திரித்து கூறுகிறார்கள்-திருச்சியில் எம்பி கமல் பேட்டி
திருச்சியில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் திருச்சி மண்டல ஆலோசனைக் கூட்டம் திருவெறும்பூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்…. இன்று வரும் தேர்தல் குறித்து ஆலோசனை செய்தோம். பூத் கமிட்டி குறித்து ஆலோசனை செய்தோம். எங்கள்கூட்டணி கட்சிகளின் பெருமையும் அதனால் ஏற்படப்போகும் நன்மையை குறித்து எடுத்துரைத்தேன். ஏன் கூட்டணி என்பது குறித்து விளக்கி உள்ளேன். நாங்கள் வைத்துள்ள கூட்டணி குறித்து புரியாமல் பலர் […]
திருச்சி நகரில் 20ம் தேதி மின்தடை
திருச்சி மாவட்டம், கே.சாத்தனூர் 110/33-11 கி.வோ. துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்நடைபெற இருப்பதால் 20.11.2025 வியாழக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மதியம் 04.00 மணி வரை கே.சாத்தனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. அதன் பகுதிகளான R.V.S நகர், .குளவாய் பட்டி, ராயல் வில்லா , கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, Wireless ரோடு, செம்பட்டு பகுதி , EB காலனி, காஜாமலை காலனி, S.M.E.S.E. , கிருஷ்ணமூர்த்தி நகா […]
டூவீலரில் போதை மாத்திரைகள் கடத்தல்- சாலையில் தூங்கிய நபர் பலி- திருச்சி க்ரைம்
மதுவுக்கு அடிமையானவர் சுருண்டு விழுந்து சாவு திருச்சி தீரன் நகர் பெரியார் தந்தை பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் ( 58). இவருக்கு திருமணம் ஆகி 2மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.ரங்கராஜனுக்கு மதுப்பழக்கம் இருந்தது இதற்கு அடிமையானதால் குடும்பத் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவரது மனைவி சியாமளா தேவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை பிரிந்து சென்று விட்டார் .பின்னர் தனியாக வசித்து வந்த ரங்கராஜன் அளவுக்கு அதிகமான மது போதையில் மயங்கி […]
திமுகவுக்கு தொடர் ஆதரவு தர பொதுமக்களிடம் கேட்பேன்…. திருச்சியில் வைகோ பேட்டி
நடைபயணங்களில் நான் அரசியல் கட்சிகளை விமர்சித்தது கிடையாது ஆனால் வரும் ஜனவரி 2 ஆம் தேதி திருச்சியில் தொடங்க உள்ள நடைபயணத்தில் சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு திராவிட மாடல் ஆட்சி தொடர ஆதரவு தர வேண்டும் என பொதுமக்களிடம் வேண்டுகோள் வைக்க உள்ளேன் – வைகோ பேட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போதை பொருள்களுக்கு எதிராக வரும் ஜனவரி 2 ஆம் தேதி முதல் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். திருச்சியிலிருந்து தொடங்க உள்ள அந்த நடைபயணத்திற்கு தொண்டர்களை […]
இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தி தரும் கட்சிகளுக்கே எங்கள் ஆதரவு-இந்திய தேசிய லீக்
இந்திய தேசிய லீக் கட்சியின் ஐந்து மாவட்ட நிர்வாகிகள் பதவி நியமன விழா மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அந்தஸகட்சியின் தலைவர் பஷீர் அகமது தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பஷீர் அகமது…. இந்திய தேசிய லீக் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து மக்களும் தற்போது எதிர்கொண்டுள்ள எஸ் ஐ ஆர் […]
மலைக்கோட்டையில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி ஐயப்ப பக்தர்கள்
பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் மாலையணிந்து ஒரு மண்டலம் விரதமிருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்வது வழக்கம். கார்த்திகை முதல் நாளான இன்று ஐயனுக்கு விரதம் தொடங்க உகந்தநாள் என்பதால், இந்த ஆண்டு ஒருமண்டல் விரதமிருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சந்நதியின் முன்பு காவி வேட்டியுடுத்தி, துளசிமணி மாலையணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். திருச்சி மலைக்கோட்டை மாணிக்கவிநாயகர் சந்நதி, மற்றும் கண்டோன்மென்ட் ஐயப்பன் கோவில்களில் அதிகாலை முதலே […]
சபரிமலை பக்தர்களுக்கு திருச்சியில் அன்னதானம் ஏற்பாடு
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக சபரிமலை விழாக்காலத்தில் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மார்கழி மாதம் 30 ஆம் தேதி வரை அதாவது 17.11.25 முதல் 14.01.25 வரை தொடர்ந்து 58 நாட்களுக்கு சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யவும், ஓய்வெடுத்து செல்லவும் அவர்களுக்கு தேவைப்பட்ட மருத்துவ உதவி செய்யவும் வசதியாக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள K K S மாமுண்டி கோனார் தோப்பில் 15ம் […]
பீகார் வெற்றிக்கு SIR தான் காரணம்… திருச்சியில் சீமான் பேட்டி
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி அடைந்ததற்கு SIR தான் காரணம் -நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் பேட்டி. தஞ்சையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெறும் தண்ணீர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் :- பீகாரில் நிதீஷ் குமார் அவர் பெயரை எடுத்துக் கொள்ளவில்லை எஸ் சி ஆர் மூலம் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக […]
என்ஜினியர் பெண் பட்டதாரி தற்கொலை
திருச்சி கருமண்டபம் ஐஓபி காலனி சேர்ந்தவர் சிவா . இவரது மனைவி நவீஷா (28) . இவர் எம் இ.மேற்படிப்பு படித்துள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகிறது.இந்நிலையில் கணவர் சிவா பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் மாமியார் வீட்டில் இருந்த நவீஷா இன்று தனது ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சிடைந்து உடனடியாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து போலீசார் […]
ஜங்சன் ரயில்வே ஸ்சேனில் சடலமாக கிடந்த முதியவர்… புகையிலை விற்பனை- திருச்சி க்ரைம்
ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சடலமாக கிடந்த முதியவர் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் இந்தியன் வங்கி அருகாமையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார் ?எந்த ஊரைச் சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை. இது பற்றி கோ அபிஷேகபுரம் மேற்கு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மென்ட் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்தவர் பச்சை கருப்பு கலந்த கோடு போட்ட கைலி மற்றும் பச்சை […]
பஞ்சப்பூரில் காந்தி மார்கெட் வியாபாரிகளுக்கு மட்டுமே இடம் வழங்கனும்-கலெக்டரிடம் மனு
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த காய்கறி வளாகத்தில் காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு மட்டுமே இடம் வழங்க வேண்டும்,பஞ்சப்பூர் புதிய காய்கறி வளாகம் குறித்து தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் என்று காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த காய்கறி வளாகம் குறித்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எம்.காதர் மைதீன், செயலாளர் என்.டி..கந்தசாமி, பொருளாளர் ஜி.வெங்கடாசலம் ஆகியோர் தலைமையில்,அவைத் தலைவர்கள் யு.எஸ்.கருப்பையா, ஜி.பாலசுப்பிரமணி,ஒருங்கிணைப்பாளர் […]
சாட்டை துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்ட அமமுகவினர்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை தனது சாட்டை வலைதளத்தில் அருவருக்கத்தக்க வகையில் பேசிவரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை கண்டித்தும், அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் திருச்சி, சண்முகாநகரில் உள்ள அவரது வீட்டை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர் கையில் விளக்குமாறுடன் முற்றுகையிட்டு தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர். சாட்டை துரைமுருகனை காவல்துறையினர் பத்திரமாக வீட்டில் இருந்து காரில் ஏற்றி அனுப்பி வைத்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த […]
திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் தர்ணா
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்யக்கூடாத இடமாக அறிவித்து அங்குள்ள கடைகளை அகற்றவும், தற்போது சாலை வர வியாபாரம் நடத்தி வரும் கடைகளுக்கு உரிய மாற்றிய இடம் வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனை அடுத்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் வெண்டிங் கமிட்டியுடன் நடத்திய ஆலோசனையில், தெப்பக்குளத்தை சுற்றி உள்ள பகுதியில் தற்போது சாலை வர வியாபாரம் நடத்தி வரும் கடைகளை ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் உள்ள பழைய நகராட்சி […]
தரைக்கடைகள் அகற்றம்… பளிச் ஆனது திருச்சி NSB ரோடு…
கோர்ட் உத்தரவுப்படி தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோர வியாபாரகடைகளை அகற்றக்கோரி திருச்சி மாநகராட்சி கமிஷனர் நேற்று தெரிவித்தார். தெப்பகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது சாலையோர வியாபாரம் நடத்தி வரும் கடைகளை மதுரைரோடு ஹோலி கிராஸ் கல்லூரி அருகில் பழைய நகராட்சி அலுவலகம் செயல்பட்ட இடத்தில் மாற்றம் செய்யபட்டது.கீழ்கரை பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளை காளியம்மன் கோவில் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான MLCP இடத்தில் மாற்றியமைத்து தந்தது திருச்சி மாநகராட்சி.. இந்தநிலையில் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள சாலையோர கடைகள் அகற்றப்பட்டது. […]
பெண் பலி- திருச்சி ஜெனட் மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் போராட்டம்
திருச்சி மாநகர் புத்தூர் நான்கு ரோடு பகுதியில் ஜெனட் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவத்திற்கு பெயர் பெற்ற மருத்துவமனையாகும். ஆகையால் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மகப்பேறு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி, நகர் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கும் ஜெயராணி என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. ஜெயராணிக்கு 6 வருடங்களாக குழந்தை இல்லாததாலும், அவரது வயிற்றில் கட்டி இருப்பதாலும் திருச்சி புத்தூர் […]
வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி… ரவுடி கைது.. திருச்சி க்ரைம்
வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை முயற்சி..ரவுடி உட்பட 2 பேர் கைது திருச்சி செந்தண்ணீர்புரம்ம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் சரசு (67 )இவர் வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டினுள் புகுந்து அவரை தாக்கி அவரது கழுத்தில் இருந்த செயினை பறித்துச் செல்ல முயன்றனர்.அப்போது அவர் கூச்சலிட்டார். ஊதாட்டியின் சத்தம் கேட்டவுடன்அக்கம் பக்கத்தினர் வர தொடங்கியவுடன்,கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து சங்கிலியாண்டபுரம் பாரதிநகரை […]
திருச்சியில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதியில் நான்கு புறங்களில் இருந்து வாகனங்கள் வந்து செல்வதால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.குறிப்பாக அரியமங்கலம், பனையக்குறிச்சி, சர்க்கார் பாளையம், வேங்கூர், கல்லணை உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தங்களின் தேவைக்காக திருச்சி சென்னை பைபாஸ் காலையில் உள்ள சஞ்சீவி நகர் பகுதியில் கடந்து வருகின்றனர்.இந்த நிலையில் சென்னை பைபாஸ் சாலையில் அதிவேக வாகனங்களால் தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு […]
ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் திருச்சி ஐஜி ஆய்வு
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகம், மற்றும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு… திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் அரியலூர் மாவட்டகாவல் அலுவலகத்திற்கு வருகை புரிந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரியுடன் மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை செய்தார். இதனையடுத்து காவல் அலுவலகத்தில் இயங்கும் காவல்துறை புகைப்பட பிரிவினை பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள், பராமரிக்கப்படும் பதிவேடுகள் […]
SIR பணிக்கு திமுக செல்வது ஏன்?… அமைச்சர் நேரு விளக்கம்
ஊரக வளர்ச்சி துறை சார்பில் 97.04 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 பணிகள் திறப்பு விழா இன்று திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திருச்செந்துரை பகுதியில் நடந்தது. இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து அமைச்சர் கே.என் நேரு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது… SIR படிவம் நிரப்பும் […]
தெப்பகுளம் சுற்றியுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம்… திருச்சி மாநகராட்சி கமிஷனர்
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு எண். WP (MD)13745/2023 வழக்கின் தீர்ப்பில் மலைக்கோட்டை தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்யக்கூடாத இடமாக நகர விற்பனை குழுவில் நிர்ணயம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீதியரசரால் அறிவுறுத்தப்பட்டது.இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது சாலையோர வியாபாரம் நடத்தி வரும் கடைகளுக்கு உரிய மாற்று இடம் வழங்க இன்று ஆணையரின் தலைமையில் நடைபெற்ற நகர விற்பனை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெப்பகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது சாலையோர […]
திருச்சியில் 15ம் தேதி மின்தடை
திருச்சி நகரியம் கோட்டம், திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் 15.11.2025 (சனிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் மத்திய பேருந்து நிலையம், வ.உ.சி.ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகு பாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, கண்டித்தெரு, […]
திருச்சி – புதுகை ரோட்டில் இறங்கிய குட்டி விமானம் .. பரபரப்பு
சேலத்திலிருந்து வந்த பயிற்சி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே சாலையில் பயிற்சி விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த சிறிய ரக பயிற்சி விமானத்தில் 2 பேர் பயணித்துள்ளனர். விமானத்தின் பாகம் சேதமடைந்ததால், சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கினார் விமானி. அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தரையிறங்கிய சிறிய ரக விமானத்தை பொதுமக்கள் அச்சத்தோடு பார்த்து வருகின்றனர் . மேலும் இந்த விமானம் தரையிறங்கியதால் அப்பகுதியில் எந்த ஒரு விபத்துகளும் ஏற்படாமல் உள்ளது. இதனால் […]
பொன்மலைப்பட்டியில் வீணாக சாக்கடையில் கலக்கும் குடிநீர்
திருச்சி, பொன்மலைப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள ஜெயில்காவலர் குடியிருப்பு நுழைவாயில் அருகில் குடிநீர் பைப் ஒன்று உடைந்ததால், நல்ல தண்ணீர் பெருமளவில் சாக்கடையில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. “கடந்த சில நாட்களாக தண்ணீர் பைப் உடைந்து, குடிநீர் சாக்கடையில் கலக்கிறது. இதனால் சாலைப் பகுதியில் தண்ணீர் தேங்கி, வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. குடிநீர் வீணாகி சாக்கடை நீரில் கலப்பதால், தண்ணீரின் தரமும் பாதிக்கப்படுகிறது. மேலும் குடிநீர் வீணாகி சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது” திருச்சி மாநகராட்சி நிர்வாகம் […]
மலக்குடலை கிழித்த கத்தி-பெண் பலி.. திருச்சி ஜெனட் மருத்துவமனை முற்றுகை
திருச்சி தென்னூரில் உள்ள ஜெனட் மருத்துவமனையில் பிரசவ ஆபரேசன் போது பெண் பலியாகியுள்ளார். அறுவை சிகிச்சையின் போது மலக்குடலை கத்தி கிழித்து விட்டதால் ஒருவார காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆபரேசன் மூலம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் 7 நாட்கள் கழித்து தாய் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஜெனட் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
திருச்சியில் அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்…
திருச்சியில் அமைச்சர்கள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. இன்று காலை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருடைய இல்லங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]
திருச்சியில் 13ம் தேதி மின்தடை
திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, 33 கே.வி. E.B. ரோடு துணை மின்நிலையத்தில் 13.11.2025 (வியாழக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் E.B.ரோடு, மணிமண்டப சாலை, காந்தி மார்கெட், கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோக நாதர் கோவில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் ரோடு, […]
திருச்சியில் நாளை மின்தடை.. .எந்தெந்த ஏரியா?..
திருச்சி, மெயின்கார்டுகேட் 33 கி.வோ., மற்றும் கம்பரசம்பேட்டை 110 கி.வோ துணைமின் நிலையங்களில் 11.11.2025 (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டதுள்ளது. மெயின்கார்டுகேட் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித […]
அண்ணா பல்கலைகழக பூப்பந்து-கேர் பொறியியல் கல்லுாரி சாம்பியன்
அண்ணா பல்கலைகழகத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லுாரிகளுக்கு இடையிலான 13வது மண்டலத்திற்கு உட்பட்ட பூப்பந்து போட்டி திருச்சியில் நடந்தது.சென்னை அண்ணா பல்கலைகழக விளையாட்டு வாரியம் சார்பில் நடந்த 13வது மண்டலத்திற்கு உட்பட்ட பூப்பந்து இறுதி போட்டியில் கேர் பொறியியல் கல்லுாரி வெற்றி பெற்று கோப்பை வென்றது. பல்கலைகழக வளாக பொறியியல் கல்லுாரி (திருச்சி வளாகம்) 2வது இடம், சாரநாதன் பொறியியல் கல்லுாரி 3வது இடம், ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லுாரி 4வது இடத்தை பிடித்தது. போட்டியில் வெற்றி பெற்ற […]
திருச்சி போலீஸ் குடியிருப்பில் வாலிபர் வெட்டிக்கொலை… ரவுடிகள் வெறிச்செயல்
திருச்சி பீம நகர் செடல் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வன் (34). ரியல் இவர் ரியல் எஸ்டேட் அலுவலக ஊழியர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும் லால்குடியை சேர்ந்த எசனைக்கோரை பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக அடிதடி ஏற்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் தாமரைச்செல்வன் மாநகராட்சி பள்ளிக்கு குழந்தையை விட்டுவிட்டு திரும்பி வரும்போது பீமநகர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வழிமறித்த சதீஷ், ஸ்ரீரங்கத்தை சேர்நத ரவுடி பிரபாகரன்(30) உள்ளிட்ட 5 பேர் […]
திமுக-வை மிரட்டி பார்க்கும் பாஜக- திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
திருச்சி சோமரசம்பேட்டையில், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். எம்எல்ஏ பழனியாண்டியின் இளையமகன் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தினார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.. SIRக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும். நிற்காமல் இயங்கி கொண்டிருப்பதை தான் இயக்கம் என்று சொல்கிறோம். திமுகவை ஒழிக்கலாம் என SIR ஆயுதத்தை எடுத்துள்ளார்கள். SIr தொடர்பாக அதிமுக திடீரென் வழக்கு தொடர்வது ஏன்? தேர்தல் ஆணையம் என்ன சொன்னாலும் நம்பும் நிலையில் […]
போதை மாத்திரை- புகையிலை விற்ற 4 பேர் கைது- திருச்சி க்ரைம்
போதை மாத்திரைகள்,புகையிலை விற்ற 4 பேர் கைது திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், குட்கா உள்ளிட்ட புகையிலைபொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு அடிக்கடி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் அந்தந்த போலீஸ் சரகங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில்திருச்சி கோட்டை பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது இ.பி ரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகேபோதை மாத்திரை […]
திருச்சி மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல்.. 2பேர் படுகாயம்
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், ஆயுள் கைதிகள், விசாரணை கைதிகள் என 2000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளிடம் சிறைத்துறை அதிகாரிகள் குறைகள் கேட்டு அவ்வப்போது நிவர்த்தி செய்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று திருச்சி மத்திய சிறைத்துறை டி.ஐ.ஜி. மற்றும் சிறை அதிகாரிகள் கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது 12-வது பிளாக் மற்றும் 13,14- வது பிளாக் கைதிகளிடம் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தனர். இதில் 12-வது பிளாக்கில் திருச்சி உள்பட பல்வேறு மாவட்ட […]
திருச்சி-மன்னார்புரம் முதல் பஞ்சப்பூர் சாலை விரைவில் ஔிரும்..எம்பி துரை வைகோ
மன்னார்புரம் முதல் பஞ்சப்பூர் சாலை விரைவில் ஒளிரும் என திருச்சி எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது.. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஜூன் 10 – ஆம் தேதி எனது தலைமையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி – ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டத்தினைத் தொடர்ந்து, நடைபெற்ற சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில், திருச்சி மன்னார்புரம் முதல் பஞ்சப்பூர் வரை சாலை விளக்குகள் அமைக்குமாறு நான் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் (NHAI) […]
SIR-க்கு எதிராக 11ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..
மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருகிற 11ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்திருச்சியில் நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க மற்றும் தோழமைக்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று தில்லை நகர் திமுக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளர் க.வைரமணி தலைமையில்,வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல் .ஏ,மாநகர செயலாளர் மேயர் மு.அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் […]
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா – திருச்சியில் பாஜகவினர் கொண்டாட்டம்
மன்கி பாத் என்ற பெயரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி மக்களுடன் மனம்திறந்து பேசி வருகிறார். இதன் 127-வது உரையை கடந்த அக்30–ஆம் தேதி ஞாயிறன்று வழங்கிய அவர், 1896-ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் முதன்முதலாக இந்தப் அற்புத பாடலைப் பாடிய வரலாற்றையும், நாட்டுப்பற்று உணர்வை எழுப்பும் முக்கியமான ஆயுதமாக இந்தப் பாடல் தொடர்ந்து செயல்பட்டு வருவதையும் பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். மேலும் வந்தே மாதரம் என்கிற தேசபக்தி மந்திரச் சொல் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் […]
திருச்சியில் குடிநீர் குழாய் பதித்தும் தண்ணீர் வரல… கலெக்டருக்கு கோரிக்கை
திருச்சி மாநகராட்சி 55 – வது வார்டு பிராட்டியூர் கணபதி நகர், முருகன் நகர் நலச்சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம். நாச்சிக்குறிச்சி ஊராட்சியில் மத்திய அரசின் “ஜல் ஜீவன்” திட்டத்தின் கீழ் முருகன் நகர் விஸ்தரிப்பு பகுதி, ஆரோவில் நகர், பூண்டிமாதா நகர், வலம்புரி நகர் பகுதிகளைச்-சார்ந்த இணைப்பில் கண்ட வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் 06/2024-ல் பதிக்கப்-பட்டது. ஆனால் […]
திருச்சி அருகே காரில் கடத்தப்பட்ட 75 கிலோ குட்கா பறிமுதல்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி பகுதியில் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொள்ளிடம் காவல் நிலைய ஆய்வாளர் வீரபாண்டி மற்றும் காவலர்கள் உடன் இணைந்து லால்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அப்போது அவ்வழியாக வந்த டாட்டா இன்டிகா காரை நிறுத்தி சோதனை செய்தபோது அந்த காரில் 75 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த லால்குடி கொபாவளி […]
முதியவர் தற்கொலை- பேக்கரி பெண் ஊழியர் தற்கொலை-திருச்சி க்ரைம்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள வெள்ளூர் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60). இவரது மனைவி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இழப்பு குணசேகரனை பெரிதும் வாட்டியது. மனைவி மீது அளவற்ற பாசம் கொண்ட அவரால் மனைவியின் இழப்பை தாங்கிக்கொள்ள இயலவில்லை. இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானார். பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் கத்தியால் தனக்குத் தானே கழுத்தை அறுத்துக் கொண்டு மயங்கிடந்தார் உறவினர்கள் அவரை […]
திருச்சி பவளமலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்
திருச்சி கீழ சிந்தாமணி ஓடத்துறையில் அமைந்துள்ள ஸ்ரீ பவளமலை மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. திருச்சி கீழ சிந்தாமணியில் ஓடத் துறையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பவளமலை மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவின் முதல் நாளான சனிக்கிழமைகாலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மஹாலெஷ்மி ஹோமம். பூர்ணா ஹீதி நடந்தது. மாலை வாஸ்து சாந்தி, அஷ்டபந்தனம், மருந்து சாத்துதல் நடந்தது. ஞாயிறன்று காலை பூர்வாங்கம், அக்குரார்ப் பணம், யாகசாலை பிரவேசம், கடஸ்தாபனம், தீபாராதனை நடந்தது. மாலை மண்டபார்ச்சனை,முதல் […]