திருச்செந்தூர் அருகே 50 ரூபாய் டாக்டர் காலமானார்
திருச்செந்தூர் அருகே 90வது வயதில் குறைந்த செலவில் மருத்துவம் பார்த்த மருத்துவர் காலமானார். திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி மெயின் பஜாரில் சுமார் 45 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி குறைந்த செலவில் மருத்துவம் பார்த்து வந்தவர் மருத்துவர் பொன்னையா. அரசு மருத்துவமனை , மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றிய போது ஆறுமுகநேரியில் கிளினிக் துவங்கினார். பல்வேறு மருத்துவமனைகளில் 50, 100, என மருத்துவ செலவு ஆன காலத்தில வெறும் ரூ10, ரூ.20க்கு உரிய மருந்துகளுடன் ஏழை […]
திருச்செந்தூர் கோயிலில் பயங்கரம்: வரிசையில் நின்ற பெண்கள் குடுமிப்பிடி சண்டை – வீடியோ வைரல்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் தரிசன வரிசையில் நின்ற பெண் பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முருகனின் இரண்டாம் படை வீடான இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த 26-ம் தேதி குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அப்போது பொது தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த பெண் பக்தர்களுக்கு […]
திருச்செந்தூரில் ட்ரோன்-கேமரா பறக்க விட-ரீல்ஸ் எடுக்க தடை
திருச்செந்தூரில் ட்ரோன் கேமரா பறக்க விட மற்றும் ரீல்ஸ்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் விளங்கி வருகிறது. கடலோரம் அமைந்துள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் தினம் தோறும் கோவிலுக்கு வருகை தந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கோவிலில் அனுமதி இன்றி கோவிலின் மேல் மற்றும் கோவில் வளாகத்தில் ட்ரோன் பறக்க விடபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவில் நிர்வாகம் அதிரடியாக […]
திருச்செந்தூர்… 100 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்…
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கிடையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட பகுதியில் கடல் அவ்வப்போது உள்வாங்குவதும் பின் இயல்பு நிலைக்கு திரும்புவதும் நடந்து வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் இன்று திடீரென சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. […]