மாடு மேய்த்த பெண்ணை தாக்கி 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
திருப்பதி மாவட்டம் பொட்டிகுண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த வெங்கடரத்னம்மா (56) என்பவர், தனது கிராமத்திற்கு அருகிலுள்ள மாந்தோப்பில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனது பணப்பை இந்தப் பகுதியில் தவறி விழுந்துவிட்டதாகக் கூறி அதனைத் தேடுவது போல நடித்துள்ளார்.நகை பறிப்பு:திடீரென அந்த நபர் வெங்கடரத்னம்மாவைத் தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கூச்சலிட்டபடியே சங்கிலியை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் […]
திருப்பதியில் 2025ல் 13.5 கோடி லட்டுகள் விற்பனை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2025ல் 13.5 கோடி லட்டுகள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. 2024ல் திருப்பதி கோயிலில் 12.15 கோடி லட்டுகள் விற்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு 13.5 கோடி லட்டுகள் விற்பனை செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். ஏனெனில், இதன் சுவையே தனித்துவம் வாய்ந்ததாகும். அரசர் காலத்தில் ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல விதமான பிரசாதங்கள் வழங்கப்பட்டு வந்தன. வெகு தூரத்தில் […]
திருப்பதியில் ரஜினி சாமிதரிசனம்
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75 வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்த நாளை முன்னிட்டு ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பினரும் ரஜினிகாந்த்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும் ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தனர். ரஜினிகாந்த், தனது பிறந்த நாளை ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடினர். இந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் […]
திருப்பதி கோவிலுக்கு 6,800 டன் போலி நெய் விநியோகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.250 கோடி மதிப்புடைய 6,800 டன் போலி நெய் விநியோகிக்கப்பட்டதை இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது. அஜய் குமார் சுகந்த் என்பவரைக் கைதுசெய்ததைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ‘போலே பாபா ஆர்கானிக் டெய்ரி’ எனும் பால்பண்ணை மூலமாக அந்தப் போலி நெய் அனைத்தும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. லட்டு தயாரிப்பதற்குத் தேவையான நெய்யை அனுப்பி […]