ஆட்டோவை கேட்டு- பாம்பை வைத்து போலீசாரை மிரட்டிய டிரைவர்
திருமலை வாகன சோதனையின்போது பறிமுதல் செய்த ஆட்டோவை தராவிட்டால் பாம்பை விட்டுவிடுவேன் என்று போலீசாரை, ஆட்டோ டிரைவர் மிரட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த சந்திராயன்கட்டா போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ உள்பட அனைத்து வாகனங்களையும் போலீசார் நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளதா? வாகனங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதா? போதையில் வாகனங்களை ஓட்டுகிறார்களா? என்று தீவிரமாக சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆட்டோ டிரைவரிடம் மது சோதனை மேற்கொண்டனர். அதில் அவர் […]