கரூர் திருமாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்

கரூர் மாநகராட்சிக்கு திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தர்யநாயகி ஸமேத ஸ்ரீ திருமாலீஸ்வரர் ஆலயத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக ஆலயம் அருகே பிரத்தியேகமாக யாக குண்டங்கள் அமைத்து காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்திற்கு மூன்று கால யாக பூஜை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக புனித தீர்த்தத்திற்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்ட பின்னர் மேல தாளங்கள் முழங்க சிவாச்சாரியார் கலசத்தினை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி […]