மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம்: ஆவடியில் மின்வாரிய அதிகாரி அதிரடி கைது

ஆவடியில் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி, ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கையும் களவுமாகப் பிடிபட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்த ராகவன் (47) என்ற விவசாயி, தனது புதிய வீட்டிற்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியன் (47), மின் இணைப்பு வழங்க ரூ.15,000 லஞ்சமாகத் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். லஞ்சம் கொடுக்க […]

பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

திருவள்ளூர் மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையாக குறைக்கப்பட்டு இருந்தது. எனினும் விட்டு விட்டு மழை தொடர்ந்ததால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த சூழலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.