நாய் கடித்ததை மறைத்த வாலிபர் ‘ரேபிஸ்’ நோயால் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த முடிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (22). கூலித் தொழிலாளியான இவரை, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. நாய் கடித்தவுடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு ஊசி மட்டும் போட்டுக்கொண்ட ஆகாஷ், அதன் பிறகு முறையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளவில்லை. நாய் கடித்த விவரத்தையும் தனது குடும்பத்தினரிடம் கூறாமல் மறைத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஆகாஷின் செயல்பாடுகள் விசித்திரமாக இருந்துள்ளன. அவர் […]

பைக் மீது லாரி மோதி போலீஸ்காரர் பலி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சதீஷ்குமார் இன்று காலை வழக்கமாக பைக்கில் பணிக்கு சென்றுள்ளார். கூத்தாநல்லூர் பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வந்த லாரி சதீஷ்குமார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து […]

போலிஸ் எனக்கூறி பணம் பறித்த 4 பேர் கைது- திருவாரூரில் பரபரப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பத்மசாலவர் தெருவை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் கார்த்திக் (36). இவர் தனது நண்பர் ரமேசுடன் சேர்ந்து மன்னார்குடி பெரிய கம்மாளர் தெருவில் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் கூத்தாநல்லூர் வெள்ளக்குடி காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பிரதீபன் (23) வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி மாலை அடகுகடை பங்குதாரர் ரமேஷ் தனது தம்பி அர்ஜுன் மற்றும் பிரதீபன் ஆகியோரை காரில் […]

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை கடல்பகுதி நோக்கி இத்தாழி நகரக்கூடும். தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் இன்று (09.12.2025) வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலை தொடர்பான முக்கியமான தகவலை டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இன்று மாலை/இரவு நாகப்பட்டினம், […]

மருமகளை கொன்று கால்வாயில் வீசிய மாமியார்.. மன்னார்குடி அருகே பரிதாபம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள எடமேலையூர்  வடக்கு அம்பலக்காரர் தெருவை சேர்ந்தவர் ராஜா. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இளஞ்சியம் (45). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தங்கபாண்டியன் (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலானது. இதையடுத்து கணவரை பிரிந்து தனது 3 மகன்களுடன், தங்கப்பாண்டியனுடன் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருப்பூர் சென்ற இளஞ்சியம் அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இளஞ்சியத்தின் மூத்த மகன் அரவிந்தராஜ் (25) அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை […]