திருவாரூர் மாவட்டத்திற்கு 28ம் தேதி உள்ளூர் விடுமுறை
மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. தற்போது கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் முயற்சியால் 4 ராஜகோபுரங்களை புதுப்பிக்க நிதி ஒதுக்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோவிலில் குடமுழுக்கு திருப்பணிக்கு பாலாலயம் நடைபெற்று திருப்பணி தொடங்கியது.அதனை தொடர்ந்து ராஜகோபுரங்களை புதுப்பிக்கும் பணிகள் உள்ளிட்ட மற்ற திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று முடிவடைந்துள்ளது. அரசு நிதி மற்றும் கொடையாளர் […]