திருப்பரங்குன்றம் கோயில் தீபத்தூண் விவகாரம்-ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு
மதுரை திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ‘தூணில் தீபம் ஏற்ற அனுமதி உண்டு; ஆனால் பொதுமக்களுக்கு அங்கு அனுமதி கிடையாது’ எனத் தெரிவித்து […]
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் இன்று இரவு 7 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றாத அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கூறியதாவது: எனது உத்தரவால் யாருக்கும் பாதிப்பு இல்லை. நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளீர்கள். கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக நடந்து இருக்கலாம் எனக்கூறினார். அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புங்கள். சட்டப்படி 4 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் […]