சென்னை- 781 பூங்காக்களிலும் தீவிர தூய்மைப்பணி
சென்னையில் உள்ள 781 பூங்காக்களிலும் தீவிரத் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மை பணியாளர்கள் அவற்றை சுத்தம் செய்தனர். சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினசரி சராசரியாக 6,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், சராசரியாக நாளொன்றுக்கு 1000 மெட்ரிக் டன் கட்டிட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தூய்மைப் பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளும் நடவடிக்கையாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பேருந்து […]