தென்காசி அருகே இந்தியன் வங்கியில் தீ விபத்து
தென்காசி: சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜன்னல் வழியாக கரும்புகை வருவதைக் கண்டு காவல்துறையினருக்கும் தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகே இந்த விபத்து நடந்திருப்பதால், சிவராத்திரி இரவு முழுவதும் கோவிலுக்குச் சென்று வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு அருகே சுற்றுலா பஸ் தீ விபத்து..உயிர்தப்பிய 30 பயணிகள்
பெங்களூரு-துமகுரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா அருகே கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து மின்சாரக் கம்பியில் மோதி தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. பேருந்திலிருந்து 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மர இழைப்பகத்தில் தீ – ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
கோவை, கண்ணப்பன் நகர் பகுதியில் உள்ள ஒரு மர இழைப்பகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சாம்பலாகின.கோவை, கண்ணப்பன் நகரைச் சேர்ந்த நசீம் (என்கிற சலீம்), அதே பகுதியில் வீட்டு உபயோக மரப் பொருட்கள் தயாரிக்கும் மர இழைப்பகம் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு மெத்தை, நாற்காலிகள், மேஜைகள் மற்றும் கதவுகள் போன்ற பொருட்கள் விலை உயர்ந்த மரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு […]
கோவை-தெர்மாகோல் நிறுவனத்தில் தீ விபத்து… புகைமூட்டம்
கோவை பீளமேட்டில் பகுதியில் தெர்மாகோல் நிறுவனத்தில் ஏற்பட்டதீ விபத்து காரணமாக கடும் புகைமூட்டம் நிலவியது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கோவை பீளமேடு கிரியம்மன் கோவில் வீதியில் தியாகு என்பவருக்கு சொந்தமான தெர்மாகோல் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனத்தில் இருந்த தெர்மாகோலில் வேகமாக பரவிய தீ மளமளவெனப் பரவியது. இதனால் கரும் புகை வெளியேறியதால் வீடுகளில் இருந்தவர்கள் […]
கோவையில் பிளாஸ்டிக் குடோனில் கோரத் தீ விபத்து: 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ அணைப்பு
கோவை ஈச்சனாரி வடவநகர் பகுதியைச் சேர்ந்த சபருல்லா என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் கழிவு குடோன், போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு டன் கணக்கில் பழைய பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று திடீரெனத் தீப்பிடித்தது. பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீ மளமளவெனக் குடோன் முழுவதும் பரவியது. இதன் காரணமாக ஏற்பட்ட நச்சுத்தன்மை கொண்ட அடர் கரும்புகை அப்பகுதி முழுவதையும் சூழ்ந்தது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வானமே இருண்டது போல் காட்சியளித்ததால், வாகன […]
கோவை காட்டூர் தீ விபத்து: உதிரிபாகக் கடை எரிந்து சாம்பல் – வீடுகளுக்கும் தீ பரவல்
கோவை மாநகரின் மையப்பகுதியான காட்டூர், பட்டேல் ரோடு பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள மாதேஸ்வரி இயந்திர உதிரிபாகங்கள் விற்பனைக் கடையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த ஆயில் கேன்கள், டயர்கள் மற்றும் பிளாஸ்டிக் உதிரிபாகங்கள் தீப்பிடித்ததால், சில நிமிடங்களிலேயே தீ மளமளவெனக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. விபத்து நடந்த உதிரிபாகக் கடைக்கு மிக அருகிலேயே குடியிருப்புகள் நெருக்கமாக அமைந்துள்ளன. இதனால், கடையிலிருந்து […]
கடற்கரை ரயில் நிலையத்தில் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்
சென்னை கடற்கரை ரயில் நிலைய நடைமேடையில் உள்ள கடையில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னையின் மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் புறநகர் ரயில்கள் மூலம் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்கின்றனர். இன்று வழக்கம் போல பயணிகள் ரயிலுக்காக நடைமேடையில் காத்திருந்தனர். அப்போது, ரயில் நிலையத்தின் 3-வது மற்றும் 4-வது நடைமேடையில் அமைந்துள்ள ஒரு கடையில் திடீரென தீப்பிடித்தது. மளமளவெனப் […]
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…மெட்ரோ அதிகாரி குடும்பத்தோடு பலி
டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மெட்ரோ ரயில்வே உதவி பொறியாளர், அவரது மனைவி மற்றும் 10 வயது மகள் ஆகிய மூவரும் உடல் கருகி உயிரிழந்தனர். டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் உதவி பொறியாளராகப் பணியாற்றி வந்தவர் அஜய் விமல் (45). இவர் தனது மனைவி நீலம் (38) மற்றும் 10 வயது மகள் ஜான்வி ஆகியோருடன் முகுந்த்பூர் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் வசித்து வந்தார். […]
நாகர்கோவில் அருகே அடுத்தடுத்து தீ விபத்து: தும்பு ஆலை, பழைய இரும்புக்கடை எரிந்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்
நாகர்கோவில் அருகே தும்பு ஆலை, ஆக்கர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. விடிய, விடிய போராடி தீயை அணைத்தனர். நாகர்கோவில் அருகே உள்ள கேசவன்புதூர் பகுதியில் தும்பு ஆலை உள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த தும்பு ஆலையில் இருந்து புகை வந்தது. நேரம் செல்ல, செல்ல புகை அதிகரித்து அங்கு காய வைக்கப்பட்டு இருந்த தேங்காய் நார்கள் உள்பட அனைத்தும் தீ […]
திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து…600 இருசக்கர வாகனங்கள் சேதம்
கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சூர் ரயில் நிலையத்தில் இருந்து சோதனை ஓட்டத்துக்கு செல்லக்கூடிய ரயில் எஞ்சின் தீப்பிடித்து எரிந்தது. ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 600 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீ மேலும் பரவாமல் தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்திருச்சூர் ரயில் நிலையத்தில் பெரும் தீ விபத்து. ரயில் நிலையத்தின் பின்புற நுழைவாயிலில் உள்ள […]
ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து….பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்
சேலம் எருமாபாளையம் அருகே ஊதுபத்தி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. சேலம் அடுத்த எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நஷீர் (36). இவர் அப்பகுதியில் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு கப் சாம்பிராணி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, ஊதுபத்தி உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து, சேலம் மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் […]
வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பர்வதிபாட்யா என்ற இடத்தில் 7 மாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு ஜவுளி கடைகள், கிடங்குகள் ஆகியவை உள்ளன. இந்நிலையில், இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் இன்று காலை எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. தீ விபத்து குறித்து தகவலறிந்து 22 தீயணைப்பு வாகனங்களில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை […]
திருத்தணி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் இடத்தில் தீ விபத்து
திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் பெண்கள் தீபம் ஏற்றும்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக காவடி எடுத்தும் முடி காணிக்கை செலுத்துவதும் வழக்கம். விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த ஆலயத்தில் ராஜகோபுரம் எதிரில் மாடவீதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவதற்காக இரும்பிலான பலகை உள்ளது. கார்த்திகை மாதம் என்பதால் ஏராளமான […]
ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து
சென்னை அண்ணாநகரில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தின் தரைதளத்தில் தீ பற்றி பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து 6 வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து… இந்திய மாணவி பலி…
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ஜோடிமெட்லா பகுதியை சேர்ந்தவர் சஹாஜா உடுமலா (24). இவர் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் அல்பெனி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் அல்பெனி நகரின் வெஸ்ட் அவன்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சக மாணவிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில், சஹாஜா தங்கி இருந்த வீட்டில் நேற்று முன் தினம் காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சஹாஜா […]
அடுக்குமாடி தீ விபத்து- பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு!
ஹாங்காங் ஹாங்காங்கின் வடக்கு தாய் போ மாவட்டத்தில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக அதிகரித்துள்ளது. இது 1948-க்குப் பின் ஹாங்காங்கில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தாக பதிவாகியுள்ளது. தீ விபத்து நவம்பர் 26 அன்று மாலை தொடங்கி, எட்டு அடுக்குமாடி கட்டிடங்களை சூழ்ந்து, பாம்பூ கட்டமைப்பு மற்றும் பச்சை பாதுகாப்பு வலைகள் தீப்பற்றி பரவியது. 76 பேர் காயமடைந்துள்ளனர், 200-க்கும் மேற்பட்டோர் இன்னும் […]
ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டடங்களில் பயங்கர தீ விபத்து… 65 பேர் பலி
ஹாங்காங்கில் தாய் போ மாவட்டத்தில் வாங் புக் கோர்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 8 தொகுதிகள் கொண்ட இந்த குடியிருப்பில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இவற்றில், 2 ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கட்டிடங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, நேற்று மதியம் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்தது. தீ அடுத்தடுத்த அடுக்குமாடி கட்டிடங்களுக்கும் பரவியது.இதில் 5 உயர்ந்த கட்டிடங்கள் முழுவதும் […]