தென்காசி அருகே இந்தியன் வங்கியில் தீ விபத்து

தென்காசி: சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜன்னல் வழியாக கரும்புகை வருவதைக் கண்டு காவல்துறையினருக்கும் தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகே இந்த விபத்து நடந்திருப்பதால், சிவராத்திரி இரவு முழுவதும் கோவிலுக்குச் சென்று வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை: போலீஸ்காரர் மீது ஆட்சியரிடம் இளம்பெண் புகார்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் தனது கணவருடன் வந்து ஆட்சியர் கமல் கிஷோரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், புளியங்குடி காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் தனக்குத் தொடர்ந்து ஆபாச வீடியோக்களையும், குறுஞ்செய்திகளையும் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு புகார் அளிக்கச் சென்ற தனது கணவரின் […]

சுவீட் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.30 லட்சம் நகை, பணம் கொள்ளை

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூர் பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகன் முருகேசன் (30). இவர் ஆழ்வார்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே சுவீட் கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, முருகேசன் தனது குடும்பத்தினருடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்குச் சென்றுள்ளார். இதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு அனைவரும் சென்றிருந்தனர். இன்று அதிகாலை முருகேசனின் குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் […]

தென்காசி- அரசு வக்கீலை கொலை செய்த நபர் சடலமாக மீட்பு

தென்காசி மாவட்டத்தில், கடந்த 3ம் தேதி அரசு வக்கீல் முத்துக்குமாரசாமி என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த சிவசுப்ரமணியன் என்பவர் அங்கிருந்து டூவீலரில் தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அவரை போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது சேலம் ரயில் நிலையம் அருகே அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இச்சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் சிவசுப்ரமணியனின் மனைவி மற்றும் உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி-சங்கரன்கோவிலில் 1 கிலோ மல்லிகை ரூ.7,500

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மட்டும் அதே பகுதியில் ரூ.3,500-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ ஒரே நாளில் விலை இரட்டிப்பாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே மல்லிகை விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்றைய திடீர் உயர்வு வியாபாரிகளையும் வாடிக்கையாளர்களையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக வியாபாரிகள் கூறுவது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக மல்லிகை செடிகளின் […]

தென்காசி- நேருக்கு நேர் மோதிய பஸ்- விபத்தில் 6 பேர் பலி 

தென்காசி  மாவட்டம், கடையநல்லூருக்கு அருகே உள்ள இடைகால் பகுதியில் இன்று (நவம்பர் 24, 2025) செங்கோட்டை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 சிறுவர்கள், 3 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் அடங்குவர். விபத்து நடந்த உடனேயே அப்பகுதி மக்களும், போக்குவரத்து போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.விபத்தில் காயமடைந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்க 25-க்கும் அதிகமான 108 ஆம்புலன்ஸ்கள் விரைந்து […]