என்னை வாழ வைக்கும் தெய்வங்களான.. நன்றி தெரிவித்த ரஜினி
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளை நேற்று (டிசம்பர் 12) கொண்டாடினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், ஊடகத்தினர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு ரஜினிகாந்த் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் வெளியிட்ட நன்றி செய்தியில், “என்னுடைய பிறந்தநாளில் வாழ்த்துத் தெரிவித்த அருமை நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், […]