வயலூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்

திருச்சியில் புகழ்பெற்ற குமார வயலூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா இன்று மிகச்சிறப்பாகத் தொடங்கியது. விழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை வழிபட்டனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு காவடி எடுத்தல், பால்குடம் சுமந்து வருதல் மற்றும் அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களைச் […]

சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்சி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல், சித்திரை தேரோட்டம் மற்றும் தைப்பூசத் திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான தைப்பூசத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் மிகச்சிறப்பாகத் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு, இன்று அதிகாலை உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், மேளதாளங்கள் முழங்க அம்மன் மரக் கேடயத்தில் எழுந்தருளி கொடிமரம் முன்பாகக் கொண்டு வரப்பட்டார். அங்கு கொடிமரத்திற்குச் சிறப்புப் […]

தைப்பூச திருவிழா.. சுவாமிமலை சுவாமிநாத கோவிலில் கொடியேற்றம்

முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலாக விளங்குவது கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயமாகும். இந்த ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று தைப்பூச திருவிழா.எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது .இதனை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.கொடியேற்றத்தை முன்னிட்டு வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்துருளினார். விழாவின் முக்கிய நிகழ்வாக எதிர்வரும் 31 […]