நடமாடும் இலவச மருத்துவ முகாம்.. அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் நடத்த வந்துள்ள மருத்துவ சேவை பிரச்சார வாகனத்தை தெற்கு மாவட்ட திமுக. செயலாளரும், இயற்கை வளங்கள்துறை அமைச்சருமான எஸ். ரகுபதி தொடங்கி வைத்தார்.உடன் மாநில திமுக. மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி உள்ளார்.
ஒற்றுமை தினப்பேரணி… எம்பி துரை வைகோ தொடங்கி வைத்தார்
திருச்சி, நாடாளுமன்ற உறுப்பினர், முதன்மைச் செயலாளர், மறுமலர்ச்சி திமுக., துரை வைகோ கூறியிருப்பதாவது.. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் நிர்வாக அலுவலக அரங்கத்தில் நேற்று, நேரு இளையோர் அமைப்பு சார்பில் நடந்த சர்தார் வல்லபாய் படேல் நினைவினைப் போற்றிடும் வகையில் ஒற்றுமை தினப்பேரணி நடந்தது. இந்தப் பேரணியை தொடங்கி வைப்பதற்கு முன்பு கல்லூரி மாணவர்களிடம் நான் பேசினேன். அதாவது, இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில், […]
4 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
இந்தியாவின் நவீன ரெயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இந்த ரெயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிதாக 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பனாரஸ்-கஜுராஹோ, லக்னோ-சஹரன்பூர், பிரோஸ்பூர்-டெல்லி, எர்ணாகுளம்-பெங்களூரு வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு. பெங்களூரில் இருந்து […]