நடிகை கௌரி கிஷன் விவகாரம்- மன்னிப்பு கேட்ட யூடியூபர்

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் மற்றும் ’96’ படத்தில் நடித்து பிரபலமான கௌரி கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அதர்ஸ்’ திரைப்படம் நாளை (நவம்பர் 9) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு கடந்த 30-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது ஒரு யூடியூபர் நடிகரிடம் “நடிகையைத் தூக்கியுள்ளீர்கள், அவரது எடை எவ்வளவு?” என்று கேட்டது பெரும் சர்ச்சையை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தியது. இதை விமர்சித்து கௌரி கிஷன் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசியிருந்தார். […]